Skip to main content

"கயிற்று கட்டிலில் இருந்து நாடாளுமன்றம் வரை.." -பாஸ்வான் எனும் மக்கள் தலைவன்

Published on 09/10/2020 | Edited on 09/10/2020
hjk

 

 

அது ஒரு அழகான 60களின் மத்திய பகுதி, நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் நேரு தான் காரணம் என்று எவரும் கூறாத காலகட்டம் அது, பீகாரின் மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இளைஞனுக்கு காவல்துறையில் மிக முக்கிய பொறுப்பு கிடைக்கிறது. தாய் தந்தையர்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். உற்றார் உறவினர்கள் கொண்டாடுகிறார்கள். அந்த இளைஞன் தனக்கு மிகவும் பிடித்த கயிற்று கட்டில் அமர்ந்துகொண்டு ஒரு நிமிடம் அந்த அழைப்பு கடிதத்தையே பார்த்தான். மக்களை பாதுகாக்கும் பொறுப்பை வேலையாக செய்யாமல் வாழ்க்கையாக செய்ய வேண்டும் என்று அந்த கணம் முடிவெடுத்தான். 

 

தன்னை போன்று அடிதட்டில் இருந்து வரும் இளைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த அவன், கடிதத்தை தூக்கி எறிந்துவிட்டு சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி தன்னுடைய பார்வையை செலுத்தினார். நாடாளுமன்றம் அவனை கட்டி அணைத்தது எட்டு முறை, நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்தான். ஆடம்பரத்துக்கு அடிபணியாதவர், அன்புக்கு கட்டுப்பட்டவர், வாழும் வரை தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவரை நாம் இழந்துள்ளோம். ஆம், பீகாரின் ஒடுக்கப்பட்ட மக்களின் கதாநாயகன்களில் ஒருவரான ராம் விலாஸ் பாஸ்வானை நாம் இழுந்துள்ளோம். 

 

பீகார் பெரிய பெரிய அரசியல் தலைவர்களை தொடர்ந்து நாட்டுக்கு தந்து வருகிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட பெரிய அதிசயம் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளின் மீது வைத்திருக்கும் தீரா காதல். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்த அவர் 1969ம் ஆண்டு எந்த பெரிய கட்சிகளின் சார்பாகவும் அவர் சட்டமன்ற தேர்தலில் நிற்கவில்லை. சாதாரணமாக எவ்வித படாபடோமும்  இன்றி தனியாக கொள்கையை சொல்லி தேர்தலில் நின்றார், அபார வெற்றியும் பெற்றார். தன்னுடைய வெற்றி தன்னுடைய மாநிலத்திலேயே சுருங்கி விடக்கூடாது என்று தனது பார்வையை நாடாளுமன்றத்தை நோக்கி செலுத்தினார். 77ம் ஆண்டு தொடங்கிய அவரின் பயணம் 2020 வரை தொடர்ந்தது. கிட்டதட்ட 6 பிரதமர்களின் கீழ் அமைச்சராக இருந்துள்ளார். 

 

தமிழகத்தின் மீது தீராத காதல் கொண்டவர். சேலம் உருக்காலை விஷயம் சம்பந்தமாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, மத்திய அரசு எடுத்த கடினமான முடிவை தடுத்தார். இந்தியாவில் எப்போதும் சமூகநீதி இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூறி மகிழ்ந்தவர். தன்னை எப்போதும் தாழ்த்தி கொண்டவர் இல்லை அவர், தன் தன்மானத்து இழுக்கு வரும் போதெல்லாம் அதனை எதிர்த்து நின்றவர். அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த வாரம் தன் கட்சிக்கு கூட்டணியில் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி தன்னுடைய நீண்ட கால கூட்டணி தோழனான பாஜகவிடம் இருந்து பிரிந்து வெளியேறி, தன் சுய மரியாதையை எப்போதும் விட்டுகொடுக்க மாட்டேன் என்பதை இந்தியாவுக்கு மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். இன்று நம்மைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். அவரின் நாடாளுமன்ற இடத்தை வேண்டுமானால் வேறு ஒருவர் நிரப்பலாம், ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அவர் கொண்ட அன்பை மற்றொருவர் நிரப்புவது என்பது மிக கடினமான ஒன்று என்பதை காலம் நமக்கு உணர்த்தும். போய் வாருங்கள் பாஸ்வான்...

 

 

 

Next Story

“ஆந்திர மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்” - முதல்வர் சந்திரபாபு!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
People of Andhra Pradesh have won

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

அதில், “ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம்- ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து, பலதரப்பு முகமைகள் மூலம் சிறப்பு நிதி உதவியை எளிதாக்கப்படும்.  நடப்பு நிதியாண்டில், ரூ.15 ஆயிரம் கோடி கூடுதல் தொகைகளுடன் வரும் ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்படும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதன் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் போலவரம் பாசனத் திட்டத்தை விரைவில் முடிக்கவும், நிதியுதவி செய்யவும்  மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. 

People of Andhra Pradesh have won
கோப்புப்படம்

பீர்பைண்டியில் புதியதாக 2400 மெகாவாட் மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட மின் திட்டங்கள் ரூ.21,400 கோடியில் மேற்கொள்ளப்படும். பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் கட்டப்படும். பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் உதவிக்கான பீகார் அரசின் கோரிக்கைகள் விரைவுபடுத்தப்படும். இதற்காக பீகாருக்கு ரூ. 26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பீகார் மாநிலம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாநிலத்திற்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதியுதவி அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஆந்திரா வெற்றி பெற்றது. ஆந்திர மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். எங்கள் மாநில மக்களுக்கு சேவை செய்ய பெரும் ஆணை வழங்கியதற்காக இன்று என் இதயம் நன்றியினால் நிறைந்தது. தெலுங்கு தேசம் கட்சி- ஜன சேனா கட்சி-பாஜக கூட்டணியை ஆசீர்வதித்ததற்கு நன்றி. ஒன்றாக, நாங்கள் எங்கள் மாநிலத்தை மீட்பதற்கான போரில் வெற்றி பெற்றுள்ளோம், ஒன்றாக, நாங்கள் மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம். 

People of Andhra Pradesh have won

பிரதமருக்கு நான் நன்றி கூறுகிறேன். ஆந்திராவின் எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்புக்காக அமித்ஷா, ஜே.பி.நட்டா, ஜன சேனா கட்சியின் பவன் கல்யான், பாஜக புரந்தேஸ்வரி ஆகியோரை நான் வாழ்த்துகிறேன். இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றி, நமது தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் விளைவாகும். கடைசி வரை அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக துணிச்சலுடன் போராடியது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்தச் சிறந்த சாதனைக்காக அவர்களை வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட்டில் பீகாருக்கான ஒதுக்கீடு குறித்து அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில்,  “இதற்காக (சிறப்பு அந்தஸ்து) நான் தொடர்ந்து பேசி வருகிறேன். இது தொடர்பாக அவர்களிடமும் (என்டிஏ) கூறினேன். அதாவது எங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குங்கள் என்று கூறினேன். அதன் தொடர்ச்சியாக, பல விஷயங்களுக்கு உதவிகளை அறிவித்து விட்டார்கள்” எனத் தெரிவித்தார். 

Next Story

மத்திய பட்ஜெட்; ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Central Budget Special allocation of funds for the states of Andhra and Bihar

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார்.

அதில், “பிரதமரின் தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத்தொகைக்கான மூன்று திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தும். இவை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பதிவுசெய்தல் மற்றும் முதல் முறையாக ஊழியர்களை அங்கீகரிப்பது மற்றும் ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தப்படும். 

Central Budget Special allocation of funds for the states of Andhra and Bihar

அமிர்தசரஸ்-கொல்கத்தா தொழில் வழித்தடத்தில், பீகாரில் உள்ள கயாவில் தொழில்துறை அனுமதியின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்படும். இது கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். சாலை இணைப்புத் திட்டங்களான பாட்னா - பூர்னியா விரைவுச் சாலை, பக்சர் - பாகல்பூர் நெடுஞ்சாலை, போத்கயா - ராஜ்கிர் - வைசாலி - தர்பங்கா மற்றும் பக்சரில் கங்கை ஆற்றின் மீது கூடுதல் இருவழிப் பாலம் ஆகியவற்றை ரூ 26 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும். உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும்.

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம்- ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து, பலதரப்பு முகமைகள் மூலம் சிறப்பு நிதி உதவியை எளிதாக்கப்படும்.  நடப்பு நிதியாண்டில், ரூ.15 ஆயிரம் கோடி கூடுதல் தொகைகளுடன் வரும் ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்படும். 

Central Budget Special allocation of funds for the states of Andhra and Bihar

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) காலக் கடன்களை எளிதாக்க, கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அத்தகைய நிறுவனங்களின் கடன் அபாயங்களை குறைக்க இந்தத் திட்டம் செயல்படும். ஒரு சுயநிதி உத்தரவாத நிதி ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ரூ. 100 கோடி வரையிலான காப்பீட்டை வழங்கும், அதே நேரத்தில் கடன் தொகை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

பீர்பைண்டியில் புதியதாக 2400 மெகாவாட் மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட மின் திட்டங்கள் ரூ.21,400 கோடியில் மேற்கொள்ளப்படும். பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் கட்டப்படும். பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் உதவிக்கான பீகார் அரசின் கோரிக்கைகள் விரைவுபடுத்தப்படும். இதற்காக பீகாருக்கு ரூ. 26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதன் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் போலவரம் பாசனத் திட்டத்தை விரைவில் முடிக்கவும், நிதியுதவி செய்யவும்  மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது” எனத் தெரிவித்தார்.