Advertisment

இதுவெல்லாம் எழுச்சியாகத் தெரியவில்லையா? ரஜினிக்கு மன்சூர் அலிகான் கேள்வி!

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவது குறித்த தனது நிலைப்பாடு குறித்து விளக்கினார். இதுகுறித்து நடிகர் மன்சூர்அலிகான் நக்கீரன் இணையதளத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment

ஆட்சி மாற்றத்தைவிட அரசியல் மாற்றம் வர மக்கள் எழுச்சி வரவேண்டும் என்கிறாரே ரஜினி?

Advertisment

நான் இன்றும் ரஜினியின் ரசிகன். ரஜினி நல்ல மனிதர். நடிப்பில் திறமையானவர் என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன். மக்கள் எழுச்சி வரவேண்டும் என்கிறார். மக்கள் எழுச்சி இருப்பதால்தான் மத்திய, மாநில அரசுகளின் தவறுகளை சுட்டிக்காட்டி போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

Rajini - mansoor ali khan

லட்சம் பேர் திரண்டு தூத்துக்குடியில் போராடினார்கள். போராடிய மக்களை சுட்டுக்கொன்றார்களே. அங்கு லட்சம் பேர் திரண்டது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா?

தமிழ்நாட்டில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் போராடியது எழுச்சியாகத் தெரியவில்லையா? மீத்தேன், ஹைட்ரோகார்பனை எதிர்த்து போராடி விவசாயி செத்தே போயிட்டான். மீத்தேன், ஹைட்ரோகார்பனை எதிர்த்து விவசாயிகள் போராடியது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா? அய்யாக்கண்ணு தலைமையில்டெல்லியில் 100 நாள் போராட்டம் நடத்தினார்களே விவசாயிகள், அது எழுச்சியாகத் தெரியவில்லையா?

இந்தியா முழுவதும் சிஏஏவை எதிர்த்து போராடுகிறார்களே அது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா? டெல்லி ஷாகின் பாக் பகுதியில் தொடர்ந்து மூன்று மாதமாக போராடுவது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா? அந்த போராட்டத்தில் 70 வயதை தாண்டிய பெண்களும் பங்கேற்றிருப்பது எழுச்சியாகத் தெரியவில்லையா? அந்தப் போராட்டத்தில் இருப்பவர்களை ரஜினியின் நண்பரான பிரதமர் மோடி போய்பார்க்கவே இல்லையே?

நம்ம அப்பா, தாத்தாக்களுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். அதுகுறித்து ரஜினி கேள்வி எழுப்பியிருந்தால் நம்ம தலைவர் கேட்டுவிட்டார் என்று மக்கள் எழுச்சி வந்திருக்கும். கேள்வி கேட்டாரா?

2021ல் ரஜினியால் அரசியல் மாற்றம் வருமா? வராதா?

அவரால் எந்த மாற்றமும் வராது. அவர் எழுச்சி என்று சொல்வது தனது ரசிகர்களை திசை திருப்புகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். ரஜினியின் பேச்சு அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். ரசிகர்களுக்கு அல்வா கொடுத்ததுபோலத்தான் இருக்கிறது அவரது பேச்சு. இவ்வாறு கூறினார்.

Question Mansoor Ali Khan rajini
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe