Skip to main content

போதுமான நேரம் ரஜினிக்கு இருக்கிறதா? 48 மணி நேரத்தில் கட்சி, சின்னம் பெற முடியுமா?

Published on 21/12/2020 | Edited on 21/12/2020
rrr

 

தேர்தல் ஆணையத்திடம் ஆட்டோ சின்னத்தைப் பெற்றிருக்கும் மக்கள் சேவைக் கட்சியை, ரஜினி தத்தெடுத்துக்கொள்ளப் போகிறார் என்று பரபரப்பாகச் செய்திகள் அடிபட, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகமோ வெயிட் பண்ணுங்கன்னு ரசிகர்களுக்குச் சொல்லியிருக்கிறது.

 

1996-தேர்தலின்போது கடைசி நேரத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறி, த.மா.கா.வை உருவாக்கிய மூப்பனார், 48 மணி நேரத்தில் கட்சியைப் பதிவு செய்து, சைக்கிள் சின்னத்தையும் வாங்கினார். இதற்கு சட்ட ரீதியாக உழைத்தவர் ப.சிதம்பரம். அவருக்கு உறுதுணையாக இருந்து கட்சியைப் பதிவு செய்து கொடுத்தது அப்போதைய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். ஆனால், அப்படிப் பட்ட சூழல் இப்போது இல்லை.

 

தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியைப் பதிவு செய்யவே, 6 மாத காலம் ஆகிறது. கட்சியின் தலைமையகம் செயல்படும் இடம், கட்சியின் சட்ட திட்டம், கட்சிக்காகத் தாக்கல் செய்யப்படும் 100 பேரின் பிரமாண பத்திரங்கள் உள்ளிட்டவைகளை சரிபார்க்கத்தான் இவ்வளவு காலம் ஆகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பாக தனது கட்சியைப் பதிவு செய்வதற்கு போதுமான நேரம் ரஜினிக்கு இல்லை. அதனால்தான் மக்கள் சேவைக் கட்சியை ரஜினி தத்து எடுக்கப்போகிறார்ன்னு டாக் அடிபடுது.

 

அது யாருடைய கட்சி? 

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் ஸ்டாலின் என்பவர் பதிவு செய்து வைத்திருக்கும் கட்சி அது. ஏற்கனவே தனது கட்சியில் அகில இந்திய என்கிற வார்த்தைகளை இணைத்தே பதிவு செய்திருந்த அவர் கடந்த செப்டம்பரில், அதனை மக்கள் சேவை கட்சி என மாற்றியிருக்கிறார். அந்த கட்சிக்கு எர்ணாவூர் முகவரி கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடம் இப்போது வீட்டு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறதாம். ஸ்டாலின் மீது சில வழக்குகள் பெண்டிங்கில் இருப்பதை உளவுத்துறை சேகரித்திருக்கிறதாம். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நண்பர்களோடு இணைந்து நாக்பூரில் சில பிஸ்னெஸ்களையும் இவர் நடத்தி வருகிறாராம். தனது பிஸ்னெஸ்சில் இருக்கும் ஊழியர்கள் பலரையும் பிரமாணபத்திரம் கொடுக்க வைத்திருக்கிறார்.

 

இந்தக் கட்சியைத் தனது கட்சியாக ரஜினி அறிவிக்க முடியுமா?

இந்த கட்சியை ரஜினி எடுப்பதாக இருந்தால், அதில் அவர் உறுப்பினராகச் சேர வேண்டும். அதன்பிறகு அக்கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் பொதுச் செயலாளராகவோ, தலைவராகவோ அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்புறம் தான், அந்த கட்சி ரஜினிக்கு உரியதாக மாறும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை. ரஜினியின் கட்சி தொடங்குவதற்கு முன்பு இத்தனை சிக்கல்களா என்று ரசிகர்களும் மன்றத்தினரும் கவலைப்படுகிறார்கள். ஆனால் ரஜினியோ இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், தன்னோட ஸ்டைலில், "அண்ணாத்தே' பட ஷூட்டிங் கிற்குக் கிளம்பிப் போய்விட்டார்.

 

படப்பிடிப்பையொட்டி ஹைதராபாத்துக்கு சென்னையிலிருந்து தனியார் விமானத்தில் ரஜினி புறப்பட்டுச் சென்றார். அப்போது விமானத்தில் அவரது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார். இதன் வீடியோ பதிவுகள் ரகசியமாகப் பகிரப்பட்டு வருகின்றன. அந்த பதிவு மத்திய உள்துறையின் கவனத்துக்குப் போக, இப்படியொரு கொண்டாட்டத்தை எப்படி அனுமதிக்கலாமென்று விமான போக்குவரத்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறதாம். விமான போக்குவரத்துத் துறையோ, சம்மந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிகாலை ஆட்டோ ரேஸ்; பறிபோன 2 உயிர்கள்

Published on 17/06/2024 | Edited on 19/06/2024
 early morning auto race; 2 lives lost

சென்னை வண்டலூர் பகுதியில் நடத்தப்பட்ட ஆட்டோ ரேஸில் விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கெனவே சென்னையின் பல பகுதிகளில் ஆட்டோ ரேஸ்கள் இரவு நேரங்களில் நடைபெற்று அதனால் விபத்துக்கள் ஏற்பட்டது தொடர்பான சம்பவங்கள் அரங்கேறி இருந்தது. இந்நிலையில் சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர்ச் செல்லும் வெளிவட்ட சாலையில் கடந்த 15 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் சர்.. சர்.. என ஆட்டோக்கள் பறந்தது. இந்தச் சம்பவம் மற்ற வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. அதிகாலை நேரத்தில் வாரத்திற்கு ஒரு முறை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஆட்டோ ரேஸ்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த 15 ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற ரேஸில் மொத்தமாக எட்டு ஆட்டோக்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. ரேஸில் இறங்கியுள்ள ஆட்டோக்களை கண்காணிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் 30க்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்துள்ளனர்.

இப்படி ஆட்டோக்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் செங்குன்றம் அருகே சென்ற பொழுது ஆட்டோக்கள் மீது இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் வாகனங்கள் உரசி விபத்து ஏற்பட்டது. இதில் குன்றத்தூரைச் சேர்ந்த மணி மற்றும் அம்பத்தூர் ஜான் சுந்தர் ஆகியோர் தலையில் பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மாரிமுத்து, மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்பத்தில் இது இருசக்கர விபத்து என எண்ணி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது ரேஸ் வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து, இந்த விபத்து ஆட்டோ ரேசால் நிகழ்ந்தது உறுதி செய்யபடுத்தப்பட்டு தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு; போலீசார் விசாரணை

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
A tragic decision taken by an auto driver; Police investigation

திருச்சியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி திருவானைக்காவல் சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 19). ஆட்டோ டிரைவர்.சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கியவர் மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. இதையடுத்து வீட்டிலிருந்த தாய் நல்லம்மாள் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கப்படவில்லை.இதையடுத்து சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ராஜ்குமார் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக திருவரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.