Skip to main content

பசி என்னும் தீயை அணைப்போம்! -ரஜினி பெயரில் ஒரு அன்னதான மையம்!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

‘மண்ணுலகத்தில் உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும் கண்ணுறப் பார்த்தும், செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்.’ என்ற ராமலிங்க வள்ளலார் “இறையருளைப் பெறுவதற்கான ஆதாரம் அன்புதான். அன்பு மனதில் ஊற்றெடுக்க வேண்டுமென்றால், எல்லா உயிர்களையும் நேசிப்பது ஒன்றுதான் வழியாகும். அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்றே சொல்ல வேண்டும். பசியானது புத்தியை தடுமாறச் செய்யும். பசி என்னும் தீயை அன்னத்தால் அணைக்க வேண்டும். அன்னமிடுபவர்கள் பெருங்கருணையாளர்கள் என்றால் மிகையில்லை.” என்று தெளிவுபடச் சொல்கிறார். 

 

rajini food providing centre


வள்ளலாரின் கருணை உள்ளம் குறித்து இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால், வள்ளலாரின் படத்தோடு, மகா அவதார் பாபாஜி மற்றும் ரஜினிகாந்த் படங்களையும் பேனரில் இடம்பெறச்செய்து, ரஜினி அன்னதான மையம் என்ற பெயரில், ரஜித் பாலாஜி என்பவர் சிவகாசியில் தொடர்ந்து அன்னதானம் செய்துவருவதுதான்.  
 

சிவகாசி அரசு மருத்துவமனையில் காலையில் நோயாளிகளுக்கு மூலிகைக் கஞ்சி கிடைக்கச் செய்கிறார். சிவகாசியில் தனக்குச் சொந்தமான இடத்தில் அன்னதானமும் செய்துவருகிறார். ‘இது எப்படி உங்களால் முடிகிறது?’ என்று கேட்டால், “தமிழகத்தில் மூன்று இடங்களில் ஓட்டல் தொழில் செய்கிறேன். அதனால், அரிசி, பருப்பு போன்றவை நிறைய வருகிறது. அதனைக்கொண்டு உணவு தயாரிக்கிறோம்.  சாப்பாடுகூட கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களைக் கண்டறிந்து, அன்னதானம் நடக்கும் இடத்துக்கு அழைத்து வருகிறோம். ஆரம்பத்தில் இப்படிச் செய்தோம். இப்போது, தானாகவே மக்கள் வந்துவிடுகிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்தில் நான் எந்தப் பொறுப்பிலும் இல்லை. 
 

ரஜினி பெயரில் இந்த நல்ல காரியத்தைச் செய்துவருவதால், ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் இவரை வாழ்த்தியிருக்கிறார். வாழ்க்கையில் எவ்வளவோ சம்பாதிக்கிறோம். நமக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம்.  ‘பசி போக்குவதே ஜீவகாருண்யம்’ என்று கூறிய வள்ளலார்,  ‘எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் பாவித்து, சம உரிமை வழங்குவோரின் மனதில் இறைவன் வாழ்கிறான்.’ என்று கூறியதோடு, வாழ்ந்தும் காட்டினார். அவர் வழியில் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.” என்றார் தன்னடக்கத்தோடு. 
 

கடவுள் உள்ளமே கருணை இல்லமே! ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது புறநானூறு. 

 

 

 

Next Story

சிவகாசியில் வெடி விபத்து; இருவர் உயிரிழப்பு

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Explosion in Sivakasi; Two people lost their live

விருதுநகரில் அடிக்கடி பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வரும் நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காளையார்குறிச்சி பகுதியில் 'சுப்ரீம் ஃபயர் ஹவுஸ்' எனும் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. முருகவேல் என்பவருக்கு சொந்தமான இந்தப் பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம்போல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியின் போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்த நிலையில், ஒரு பெண் உட்பட இரண்டு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி துணை ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். உடனடியாக மற்ற தொழிலாளர்கள் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனால் இங்கு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

'பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன பொருட்களை எடுத்துச் செல்லும் பொழுது கீழே விழுந்ததில் ஏற்பட்ட உராய்வில் வெடித்துச் சிதறியதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே காரணம் தெரிய வரும். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தொடர் ஆய்வு செய்து பல்வேறு விதி மீறல்கள் அடிப்படையில் 80க்கும் மேற்பட்ட ஆலைகளுடைய உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது' என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Next Story

உணவில் பிளேடு; விமான பயணிக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
blade in food to distributed by the air passenger;

கடந்த 9ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்வதற்காக ஏர் இந்தியா எனும் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணியான பத்திரிகையாளர் மதுரஸ் பால், விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது வேதனையைப் பதிவு செய்தார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஏர் இந்தியாவின் விமானத்தில் வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவு ஒன்றில் பிளேடு கிடந்தது. நான் அதை இரண்டு அல்லது மூன்று வினாடிகள் மென்று சாப்பிட்ட பிறகு அது என் உணவில் இருப்பதை உணர்ந்தேன். நான் அதை துப்பியவுடன், அது பிளேடு என்பது தெரியவந்தது. இதற்கு பணிப்பெண் மன்னிப்பு கேட்டார். மேலும் அவர், ஒரு கிண்ணம் கொண்டைக்கடலை வழங்கினார். எந்தவொரு விமானத்திலும் பிளேடு இருப்பது ஆபத்தானது. இரண்டாவது, அது என் நாக்கை வெட்டக்கூடும். மூன்றாவதாக, ஒரு குழந்தை இந்த உணவை சாப்பிட்டால் என்ன செய்வது’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நடந்த சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புக்கொண்டது. இது குறித்து தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா கூறுகையில், “எங்கள் கேட்டரிங் பார்ட்னர் பயன்படுத்தும் காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தின் பாகம் என நாங்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளோம். கடினமான காய்கறிகளை நறுக்கிய பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இனி இதுபோன்று நடப்பதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.