ADVERTISEMENT

5வது நாள் ரெய்டு! கதறி அழும் விவேக்!

08:14 PM Nov 13, 2017 | Anonymous (not verified)

5வது நாள் ரெய்டு!
கதறி அழும் விவேக்!



விவேக் மற்றும் அவரது சகோதரி கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆகியோரது வீடுகளிலும், விவேக் எம்.டி. ஆக இருக்கும் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி. அலுவலங்களிலும் தொடர்ந்து 5 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று விவேக் மனைவிக்கு பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல சென்ற அவரது தந்தை கட்டை பாஸ்கர் மற்றும் அவரது தாயார் ஆகியோரை உள்ளே அனுமதிக்க வருமான வரித்துறை மறுத்துவிட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு விவேக்கை சந்திக்க அவர்களை வருமான வரித்துறை அனுமதித்தது.

கட்டை பாஸ்கர் உள்ளே சென்றபோது, விவேக் வீட்டில் உள்ள சமையலறையில் விவேக்கும் அவரது மனைவியும் அமர வைக்கப்பட்டிருந்தனர். கட்டை பாஸ்கரை கண்டவுடன் ஓ... வென கதறி அழுதார் விவேக். அனால் அழுவதை தவிர அடுத்த வார்த்தையை பேச வருமான வரித்துறை அனுமதிக்கவில்லை. இதுபற்றி விவேக்குக்கு நெருக்கமான வட்டாரங்களில் நாம் பேசினோம்.

விவேக் 2015ஆம் ஆண்டுதான் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாஸ் சினிமா தியேட்டரை வாங்கினார். ஹாட் எஜ்ஜீனியரிங் என்கிற கம்பெனியின் பெயரில் இந்த தியேட்டர் வாங்கப்பட்டது. இந்த ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்பது விவேக்குக்கு தெரியாது.

அது மறைந்த ஜெயலலிதா, சிறையில் உள்ள சசிகலா இருவருக்குமே தெரிந்த ரகசியம். தற்போது ரெய்டுக்கு வந்துள்ள வருமான வரித்துறையினர் அந்த ஆயிரம் கோடி ரூபாய் பற்றித்தான் கேள்விக் கேட்கின்றனர்.



என்னைப் பொறுத்தவரை நான், ஜாஸ் சினிமா தியேட்டரை வாங்கியதில் இருந்து கணக்கு வழக்குகளை சரியாக வைத்துள்ளேன். நான் பொறுப்பேற்பதற்கு முன்பு நடந்த விசயங்கள் எனக்கு தெரியாது என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்து வருகிறார் விவேக்.

ஆனால் விவேக் 11 வயது சிறுவனாக இருக்கும்போது அவர் பெயரில் சொத்துக்களை சசிகலாவும், ஜெயலலிதாவும் வாங்கினார்கள். வருமானத்திற்கு அதிகமான சொத்துச் சேர்ப்பு வழக்கில் விவேக் மைனர் என்பதால் குற்றவாளியாக்காமல் விட்டுவிட்டார்கள். அந்த சொத்துக்களின் தொடர்ச்சிதான் ஜாஸ் தியேட்டரை வாங்குவதில் போய் முடிந்திருக்கிறது.

ஜெயலலிதா காலத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த சொத்துக் குவிப்பைப் பற்றி பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் விவேக். விவேக் ஜெயலலிதா வளர்த்த பிள்ளை, அவருக்கு ஜெயலலிதா 5 மொழிகளில் பேசுவதற்கு பயிற்சி கொடுத்துள்ளார். 5 மொழிகளில் பேசுவதற்கு பயிற்சி அளித்த ஜெயலலிதா, இன்கம்ஸ்டேக்ஸ் அதிகாரிகளை சமாளிக்க பயிற்சி அளிக்கவில்லையே என சொல்லி சொல்லி கதறி அழுகிறார் விவேக்.

-தாமோதரன் பிரகாஷ்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT