Skip to main content

மோடி விரும்புவதை தமிழக மக்கள் விரும்பவில்லை! -விளாசிய ராகுல்!  

Published on 28/01/2021 | Edited on 28/01/2021
ddd

 

வாக்குவங்கி பலம் பற்றிக் கவலைப்படாமல், "ஒரு கை பார்ப்போம்'’என்ற பெயரில் தமிழகம் முழுதும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஹைலைட்டாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 23- ந் தேதி கோவைக்கு வந்தார்.

 

நேரு குடும்பத்தின்மீது தமிழக மக்களுக்கு எப்போதுமே ஈர்ப்பு உண்டு. காளப்பட்டி சாலை சந்திப்பில் திறந்த காரில் நின்று பேசிய ராகுல், ""தமிழகத்துக்கு வருவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது உள்ள பி.ஜே. பி அரசு. ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே கொள்கைதான் இருக்க வேண்டும் என நினைத்து காய் நகர்த்துகிறது. ஆனால் அந்த காய் நகர்த்தலை எதிர்த்து தான் நாம் போராடி வருகிறோம்.

 

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களின் கலாசாரம், மொழிப் பற்று எதையும் மதிப்பது இல்லை. தமிழக மக்களை ரெண்டாம் தர குடி மக்களாக கருதுகிறார். இந்தியாவில் பன்முக கலாசாரம், மொழிகள், வாழ்க்கை முறைகள் உள்ளன. தமிழ், பெங்காலி, இந்தி அனைத்து மொழிகளையும் நாங்கள் சமமாகத்தான் நடத்துகிறோம். ஆனால் மோடி அப்படி அல்ல. அவர் இந்தியாவில் உள்ள 2, 3 பெரிய தொழில் அதிபர்களுக்காக ஆட்சி நடத்துகிறார். இதுதான் நமக்கும், மோடிக்கும் உள்ள வித்தியாசம்.

 

3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. அந்த சட்டங்கள் , இந்தியாவில் பாரம்பரியமாக தொழில் செய்து வரும் விவசாயிகளை தொழிலதிபர்களின் வேலைக்காரர்களாக மாற்றும் சட்டங்கள். அதை திறம்பட மோடி வடிவமைத்து இருக் கிறார். தமிழகம்தான் எந்தவொரு விசயத்திற்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. இன்னும் இருக்கும்...'' என பலத்த கை தட்டல்க ளுக்கிடையே பேசி விட்டு... திருப்பூரை நோக்கி அவர் வாகனம் பறந்தது. போகும் வழியில் சின்னியம்பாளையத்தில் பேசிய ராகுல் காந்தி...

 

""ஆளும் தமிழக அரசை அச்சுறுத்துவதற்காக சி.பி.ஐ,- வருமானவரித் துறையை மோடி பயன்படுத்துகிறார். இதன் மூலம் தமிழக அரசை தன் கட்டுப்பாட்டில் வைக்க மோடி விரும்புவதை தமிழக மக்கள் விரும்பவில்லை.

 

என் பாட்டி, தந்தை ஆகியோர்மீது அதீத அன்பை தமிழக மக்கள் நீங்கள் வைத்து உள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்திருக்கிற நீங்கள் தமிழகத்தில் புதிய அரசு உருவாக வேண்டும் என்கிற எண்ணத்தையும் நான் அறிவேன். அந்த எண்ணத்தை நான் பூர்த்தி செய்வேன். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என மோடி நினைக்கிறார். ஆனால் தமிழ்நாடேதான் இந்தியாவாக இருக்கும்...'' என பேசி விட்டு திருப்பூர் அவினாசிப் பாளையத்தில் உள்ள ஒரு பேக்கரிக்குள் சென்றார் ராகுல்.

 


ராகுல் வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட அங்கிருந்த மூதாட்டி ஒருவர்... ""என்னை மாதிரி வயசானவங்க சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம நிக்கறோம்''னு சொல்ல.. ""அடுத்து வரும் ஆட்சி உங்களை காப்பாத்தும்... அதற்கு நான் சாட்சி...'' என சொல்லி அந்த மூதாட்டியை ஆறுதல் படுத்தினார். பேக்கரிக்குள் வந்த எல்லோரும் ராகுலுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள். சளைக்காமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு... எல்லோருடனும் கைக்குலுக்கி விட்டு தன் பயணத்தை தொடர்ந்தார் ராகுல்.

 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன நிலையில், அதன் வாக்கு வங்கியும் குறைந்துகொண்டே வந்தது. அருகில் உள்ள புதுச்சேரியில் ஆட்சியில் இருந்தாலும், கூட்டணிக் கட்சியான தி.மு.க. தன் பலத்தைப் பெருக்கும் வகையில் தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இருக்கும் காங்கிரசின் செல்வாக்கைத் தக்க வைக்கவும், தி.மு.க. கூட்டணியில் தனக்கான இடங்களைப் பெறவும் ராகுல் வருகை பயன்படும் என நம்புகிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். கமல் போன்ற கட்சிகளுடனான கூட்டணிக்கும் இந்தப் பயணம் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஈரோடு சென்ற அவருக்கு பெருந்துறை விவசாய மக்கள் கை காட்டி ஆர்ப்பரிப்பு செய்தனர். பின்னர் ஈரோட்டில் பேசிய ராகுல்... "சிறு, குறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. அதை அடுத்து வரும் ஆட்சி சரி செய்யும். இந்த தமிழகத்தை நான் பிறந்த மண்ணாக உணர்கிறேன்.

 

நான் இந்த தமிழகத்திற்கு அடுத்த முறை வரும் போது... நல்ல ஆட்சியாளர்தான் இந்த தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருப்பார்...'' என முத்தாய்ப்பாய் பேசி கை சின்னத்தை காட்டி விட்டு கிளம்பினார். பகல் நேர சூரிய வெளிச்சம் அவர் மீது படர்ந்திருந்தது.

 

 

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.