style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ரஃபேல் விமானங்களை வாங்க மோடி முடிவு செய்தபோது அது ஊழல் பேரம் என்பதை உணர்ந்தே இருந்திருக்கிறார். அதற்காகவே, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு ராணுவ சாதனங்கள் வாங்குவதில் ஊழல் நடந்தால் தண்டிக்க வகைசெய்யும் பிரிவுகளை ஊழல் தடுப்பு பிரிவுகளில் சேர்த்திருந்தது.
ஆனால், ரஃபேல் விமானங்களை பிரான்ஸ் அரசுடன் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டு பேசத் தொடங்கியவுடன், ராணுவ சாதனங்களை வாங்குவதில் தவறு இருந்தாலும் அது ஊழல் நடவடிக்கையில் சேராது என்று முக்கியமான 8 பிரிவுகளில் மோடி அரசு திருத்தம் செய்துள்ளது.
இந்தியாவும் பிரான்சும் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி டெல்லியில் ராணுவ சாதன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ரஃபேல் விமானங்களை சப்ளை செய்யும் நிறுவனமாக டஸால்ட்டும், விமானப்படைக்கு ஆயுதங்கள் வழங்கும் நிறுவனமாக எம்பிடிஏவும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே ஊழல் தடுப்பு பிரிவின் முக்கியமான எட்டு விதிகளில் மோடி அரசு திருத்தம் செய்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதில் முக்கியமானது, ராணுவ தளவாட பேரத்தில் செல்வாக்கு செலுத்துவதோ, ஏஜெண்டுகள் அல்லது ஏஜென்சி கமிஷன் பெறுவதோ, ராணுவ சாதனங்களை வினியோகிப்பதற்கான வங்கிக் கணக்குகள் விவகாரமோ ஊழல் நடவடிக்கைக்கு ஆளாகாது என்பதாகும்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போதுமான அளவு வங்கியில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பதற்காக காப்போலை கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் அலுவலகம் வலுக்கட்டாயமாக நீக்கியிருக்கிறது.
இரு நாடுகளிடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு 2016 ஆகஸ்ட் 24 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதலைப் பெற்றபிறகு, ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் தலைமையிலான ராணுவ சாதனங்கள் வாங்கும் குழு 2016 செப்டம்பரில் இந்த எட்டுத் திருத்தங்களுக்கும் ஒப்புதல் கொடுத்திருக்கிறது என்று தி ஹிண்டு ஆங்கில நாளிதழில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் புதிய ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறார்.