Advertisment

மோடியின் எஜமானர் மக்களா? அம்பானியா? ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்!

அம்பானிதான் இந்தியா இந்தியாதான் அம்பானி என்ற நிலையை உருவாக்குவதற்கு மோடி அரசாங்கம் மிகத் தீவிரமாக பாடுபடுவதை பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியே அம்பலப்படுத்தி இருக்கிறார்.

Advertisment

ambani modi

மோடி எந்த ஒரு புதிய திட்டத்தை அறிவித்தாலும் அதில் அம்பானிக்கு ஒரு முக்கிய இடம் இல்லாமல் இருக்காது என்பதே இதுவரையான உண்மையாக இருக்கிறது. மோடி அரசு அறிவிக்கும் திட்டத்தில் இணைய அம்பானி குழுமத்துக்கு தகுதியே இல்லையென்றாலும் இணைத்து வாங்குப்பட்டிருக்கிறது மோடி அரசு.

சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் தரம்வாய்ந்த இந்திய பல்கலைக்கழக்கழங்கள் பட்டியலில், தொடங்கவே படாத ஜியோ இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன்ஸ் என்ற பல்கலைக்கழத்தை மோடி அரசு சேர்த்திருந்தது. தரம்வாய்ந்த அண்ணா பல்கலைக்கழக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் போன்ற முக்கியமான அரசு பல்கலைக்கழகங்களுக்கு இல்லாத முக்கியத்துவத்தை அம்பானி தொடங்காத ஒரு பல்கலைக்கழகத்துக்கு மோடி அரசு கொடுத்து அது அம்பலமானது.

Advertisment

இப்போது, பிரான்சிடமிருந்து மோடி அரசு வாங்க முடிவு செய்த ரஃபேல் போர் விமானங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் உரிமையை, அம்பானி தொடங்க உத்தேசித்துள்ள ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்க பிரான்ஸ் அரசுக்கு மோடி அரசு பரிந்துரை செய்ததை, அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்க்வா ஹொலாந்த் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

இதன்மூலம் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுவரை எழுப்பிய சந்தேகங்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் உண்மை என்று ஆகியிருக்கிறது.

ரஃபேல் விமானம் என்றால் என்ன?

ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்கென ஒரு எதிர்கால போர் விமானத்தை தயாரிக்க முனைந்தபோது, கூட்டிலிருந்து விலகி பிரான்ஸ் தனியாக தயாரித்ததுதான் இந்த ரஃபேல் விமானம். அதேசமயம் ஐரோப்பிய யூனியனில் இணைந்த நாடுகள் சேர்ந்து தயாரித்த, யூரோபைட்டர் என்ற விமானம் மிகவும் தரம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

rafeal scam

ரஃபேல் விமானங்கள் விற்பனைக்கு தயாராகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை யாரும் சீந்தாமல் கிடந்த அந்த விமானங்கள், லிபியா போரின் போது செயல்பாட்டுக்கு வந்தன. பிரான்சுக்கு சொந்தமான மிராஜ் வகை போர் விமானங்களையே அழித்து தனது பெருமையை காட்டிக்கொண்டது.

இந்த மிராஜ் வகை விமானங்களை உற்பத்தி செய்த பிரான்சின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம்தான் ரஃபேல் போர் விமானங்களையும் தயாரித்திருக்கிறது. இந்த விமானங்களை விற்க பல நாடுகளிடம் வியாபாரம் பேசிப்பார்த்தது பிரான்ஸ். ஆனால், அந்த விமானத்தின் செயல்பாடுகளைக் குறைகூறி பிரேசில், கனடா, அல்ஜீரியா, கிரீஸ் உள்ளிட்ட பல நாடுகள் வாங்க மறுத்துவிட்டன. இந்த நிலையில்தான் டஸால்ட் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை விற்க ஏர்பஸ் நிறுவனம் முடிவெடுத்தது. இதையடுத்து டஸால்ட் நிறுவனத்தை மூடும் அபாயம் ஏற்பட்டது. அப்படிப்பட்ட நிறுவனத்தை காப்பாற்றத்தான் மோடி கைகொடுத்திருக்கிறார். அவருக்கு முன் எகிப்து மட்டுமே ரஃபேல் ரக விமானத்தை வாங்கி உதவியிருந்தது. இப்போது, இந்தியாவும் அந்த விமானத்தை வாங்கத் துணிந்தது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 36 விமானங்களுக்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கலாம் பிரேசிலின் ராணுவ தளவாட ஆய்வுப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தின.

rafeal scam

இந்த விமானத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் வாங்க முடிவெடுத்து விலை பேசியிருந்தது. இதை காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் அரசு விலை பேசியதுது என்கிறார்கள். அதே விமானத்தை மோடி அரசு 1,570 கோடி ரூபாய் விலைக்கு வாங்க முடிவு செய்தது ஏன் என்று காங்கிரஸ் கேட்கிறது.

இந்தச் சூழலில்தான், ரஃபேல் விமானத்தின் விலையை வெளியிடும்படி ராகுல் கேட்டார். அதற்கு பதிலளித்த ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது ஒரு ரகசிய ஒப்பந்தம் என்றும், அதனால் விலையை வெளியிடக்கூடாது என்றும் கூறினார். நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ விலையை வெளியிட்டால் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கூறியிருந்தார். விமானத்தின் தொழில்நுட்பத்தை வெளியிட்டால்தான் தவறு. விலையை வெளியிட்டால் தேசப்பாதுகாப்புக்கு எப்படி ஆபத்தாகும் என்று சாமானியர்களே கேட்கும் அளவுக்கு நிலைமை முற்றியது.

இன்னொரு பக்கம், ரஃபேல் விமானத்தை வாங்கும் ஒப்பந்தம் முடிவாவதற்கு முன்னரே, யூரோபைட்டர் நிறுவனம் தனது விமானத்தை 20 சதவீதம் தள்ளுபடியில் விற்க முன்வந்ததை இந்தியா ஏன் ஏற்கவில்லை என்பதற்கான காரணத்தையும் காங்கிரஸ் கேட்டிருந்தது. ரஃபேல் விமான விவகாரத்தை ராகுல் நாடாளுமன்றத்தில் எழுப்பியதற்காக அவர் மீது உரிமைமீறல் பிரச்சனையை பாஜக கொண்டுவந்தது.

rafeal scam

வெளியில் பேசியதற்காக ராகுல் மீது ரிலையன்ஸ் நிறுவனம் 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்திருக்கிறது. ஆனாலும், ராகுல் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மோடி அரசை கேள்வி கேட்டு துளைத்தெடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை மோடி இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்க்கிறார். தனது அரசுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுக்கும் இதுவரை பதில் சொல்லாத மோடி, வினா எழுப்புகிறவர்களை தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்தான், ரஃபேல் விமான ஒப்பந்தத்தின் போது, உதிரிபாகங்களை தயாரிக்கும் உரிமையை ரிலையன்ஸ் டிஃபென்ஸுக்கு வழங்கும்படி இந்தியா பரிந்துரைத்தது என்ற உண்மையை பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்க்வா ஹொலாந்த் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, ரஃபேல் விமான பேர ஊழல் விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

modi mukesh ambani rafael rafael corruption
இதையும் படியுங்கள்
Subscribe