Skip to main content

அம்மா நான் வந்துட்டேன், இங்க டூட்டியில ஜாயிண்ட் பண்ணிட்டேன்... புல்வாராவில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுப்ரமணியம்...

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

subramaniam


 

பிப்ரவரி 14 அன்று காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். படை வீரர்களின் வாகன அணி வகுப்பின் போது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தது தேசத்தை மட்டுமல்ல உலக நாட்டையே உலுக்கி விட்டது.
 

வீரமரணம் எய்தியவர்களில் தமிழ் நாட்டின் தூத்துக்குடி, சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற வீரரும் ஒருவர். அவரது மரணம் அவரது கிராமத்தையே அதிரவைத்து விட்டது. சுற்றுப்பட்டுப் பகுதியே துக்கத்திலிருக்கிறது.


 

subramaniam

 

சவலாப்பேரி கிராமத்தின் சிறுவிவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (28) தந்தை கணபதி, தாய் மருதாத்தாள். இவர்களின் நான்கு பிள்ளைகளில் கடைக்குட்டி சுப்பிரமணியம். இரண்டு சகோதரிகள் மணமாகிச் சென்று விட சகோதரன் துபாயில் வேலை பார்க்கிறார். ஆரம்பப் படிப்பை வெங்கடாசலபுரத்திலிருக்கும் தன் தாத்தா வீட்டிலிருந்து படித்தவர் பின் 10ம் வகுப்பு வரை அருகிலுள்ள வில்லிசேரி கிராமத்தில் படித்தார். பின்பு கோவில்பட்டியிலுள்ள கம்மவார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரையிலும், அதன் பின் ஐ.டி.ஐ.யும் படித்தார். பின் கயத்தார் டோல் கேட்டில் பணிபுரிந்தார். அதற்கு பின்னர் நடந்த தேர்வில் சி.ஆர்.பி.எப். படைக்குத் தேர்வானவர் தொடர்ந்து உ.பி. மாநிலத்தில் 2 வருடம் டிரைரெய்னிங் முடித்து, காஷ்மீர் பணிக்கு அனுப்பப்பட்டார். மூன்று வருடங்கள் அங்கேயே பணியில் இருந்தார்.
 

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவரை பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
 

இந்நிலையில் பொங்கல் திருநாள் முன்னிட்டு, ஒரு மாதம் விடுப்பில் வந்த சுப்பிரமணியம், விடுப்பு முடிந்து கடந்த 10ம் தேதிதான் காஷ்மீர் திரும்பினார். நேற்று காலை (14ம் தேதி) தன் வீட்டுக்குப் போன் செய்து, அம்மா நான் வந்து விட்டேன் டூட்டியில் ஜாயிண்ட் பண்ணிட்டேன்னு சொல்ல. அந்த தாயின் மனம் குளிர்ந்திருக்கிறது. ஆனால் காலத்தின் கோலம், அந்த மகனை தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதல் பறித்தக் கொண்டுபோயிருக்கிறது. கலங்கித் தவிக்கிறது சவலாப்பேரி.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துணை ராணுவப்படையினரின் வாகனம் விபத்து; கால் துண்டான நிலையில் வீரர்களுக்கு சிகிச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Accident involving paramilitary personnel on the national highway

ஆவடி துணை ராணுவப் பயிற்சி மையத்தை சேர்ந்த 71 துணை ராணுவ வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) கர்நாடக மாநிலம்  ஷிமோகாவில்  பயிற்சி முடித்து விட்டு மீண்டும் நேற்று 5  இராணுவ வாகனத்தில் ஆவடி பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம்  பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணை இராணுவ வீரர்கள் ஓட்டி வந்த வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற ரிஜோ மற்றும் சின்னதுரையின் கால் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி துண்டானது.

Accident involving paramilitary personnel on the national highway

அதனை தொடர்ந்து நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு இருவரையும் லாரியின் இடிபாடுகளிலிருந்து சக வீரர்கள் மற்றும் பொதுமக்கள்  மீட்டு அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு தலைமை காவலர் ராமசந்திரன் மற்றும் காவலர் வல்லவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Tamil Nadu Govt announced Ex-Servicemen Tax Concession

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், ‘கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் வரிச்சலுகையானது தற்போது, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று (13-03-24) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘நடப்பு நிதியாண்டில் இருந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்குகளை பெற இந்த ஐந்து நிபந்தனைக்குள் இடம்பெற வேண்டும். முன்னாள், ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது. மறுவேலைவாய்ப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.  இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.