Skip to main content

"ராணுவத்தில் பாஜகவினர் கலப்படம் செய்ய நினைப்பதில் நியாயம் இல்லை" - புதுமடம் ஹலீம் 

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

pudhumadam haleem talks about current situation for indian army 

 

மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளரும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி ஒன்றில், "ராணுவம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. தேசத்துக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு அமைப்பு தான் ராணுவம். ஒரு கட்சிக்கு சொந்தமானது இல்லை. இன்றைக்கு பாஜக ஆட்சி செய்யலாம். நாளைக்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி செய்யலாம். அப்போது ராணுவம் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவார்களா என்றால் அப்படி இல்லை. இதுவரைக்கும் சுதந்திரம் அடைந்ததில் இருந்து ராணுவத்தை ராணுவமாகத் தான் பார்த்தோம். ராணுவத்தை ஒரு கட்சியின் பிரிவாகப் பார்த்தது இல்லை. ஆனால் பாஜகவினர் எப்பொழுது ஆட்சிக்கு வந்தார்களோ அப்போதிலிருந்து ராணுவத்தை அவர்களின் ஒரு பிரிவாகத் தான் பார்க்கிறார்கள்.

 

இன்றைக்கு ஸ்ட்ராஜிகல் ஸ்டிரைக் என்பதை கூட புதிதாகச் சொன்னார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் எந்த யுத்தமும் நடந்தது இல்லையா. பாகிஸ்தானுடன் யுத்தம் செய்தது இல்லையா. இந்திரா காந்தி ஆட்சியில் பாகிஸ்தானுடன் யுத்தம் செய்து வங்கதேசத்தையே பிரித்து தனி நாடாக அறிவிக்கவில்லையா. சீனாவுடன் யுத்தம் செய்யவில்லையா. எத்தனையோ யுத்தங்களை நடத்தினாலும் ஸ்ட்ராஜிகல் ஸ்டிரைக் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லையே. பிரதமர் மோடி  வந்துதான் புத்தம் புதுசா ஸ்ட்ராஜிகல் ஸ்டிரைக் என்பதை கண்டுபிடித்தது மாதிரியும், இப்போது தான் இந்திய ராணுவம் யுத்தம் செய்வது போன்றும்  சித்தரிப்பது எல்லாம் நாட்டுக்கு நல்லது இல்லை. ராணுவ வீரர்களும் தங்களை பாஜகவினராக காட்டிக்கொள்ள முயற்சி செய்வது இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தாகும்.

 

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை சம்பவத்தில், தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. ராணுவ வீரர் எங்கு பாதிக்கப்பட்டாலும் ராணுவத்தில் இருந்து வந்து புலன் விசாரணை செய்வார்கள். ராணுவத்திற்கு என்று தனி நீதிமன்றம் உள்ளது. உயிரிழந்த ராணுவ வீரருக்கு பாஜக 10 லட்சம் கொடுத்தால் மட்டும் போதுமா. ஒன்றிய அரசு 1 ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த தேசத்துக்காக உடல், பொருள், ஆவியை அர்ப்பணிக்கும் வீரருக்கு ஒன்றிய அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் கொடுங்கள் யாரும் மறுக்கமாட்டார்கள். ராணுவ வீரர்களை வைத்து பாஜக உண்ணாவிரதம் நடத்துவது என்பது கேலிக்கூத்து. ராணுவமே குடியரசு தலைவர் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

 

ராணுவ வீரர்களுக்கு ஏன் பாஜகவின் சாயத்தை பூசுகிறீர்கள். இதனால்தான் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். பாஜகவினர் ராணுவத்தை காவி மயமாக்க  பார்க்கிறார்கள். அது இந்த தேசத்துக்கு கேடு. இது மிகப்பெரிய தவறு. ராணுவம் எல்லோருக்கும் பொதுவானது. இந்த தேசத்தை காக்க வேண்டிய இடத்தில் ராணுவம் உள்ளது. சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகள் இப்படித் தானே வைத்து இருந்தோம். அதில் பாஜகவினர் கலப்படம் செய்ய நினைப்பதில் நியாயம் இல்லை என்பதே என் கருத்து" எனத் தெரிவித்தார். 

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.