ADVERTISEMENT

"லாக் டவுன் தோல்வி அடைந்த ஒன்று... பொருளாதார சீரழிவுக்கு கரோனா மட்டும் காரணமல்ல.." - பேராசிரியர் சிவ பிரகாசம் பேச்சு!

06:59 PM Jun 10, 2020 | suthakar@nakkh…



கரோனா காரணமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த லாக் டவுன் தோல்வி அடைந்த ஒன்று என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்ற நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த லாக் டவுன் தொடர்பாகவும், பொருளாதார நிலை தொடர்பாகவும் பேராசிரியர் சிவ பிரகாசம் நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு,

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த கரோனா தொற்று காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. முதல் கட்டமாக 20 லட்சம் கொண்ட ஒரு பேக் கேஜ்-ஐ அறிவித்துள்ளார். அதில் சிறு, குறு விவசாயிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது பற்றி விரிவாக கூறியிருக்கிறார்கள். மேலும் எந்த துறை தனியார் மயம் அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இது எதிர்கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த கரோனா தொற்று என்பது உலகம் தழுவிய ஒன்றாக இருந்து வருகின்றது. சிலர் உண்மையான தகவல்களை கூற மறுக்கிறார்கள். தற்போதைய பொருளாதார சரிவுக்கு இந்த கரோனா தொற்றை காரணமாக சிலர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அதற்கு முன்பே இந்த பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. அனைத்து விதமான பொருளாதார கைகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த கரோனாவை மட்டுமே அதற்கு காரணம் என்று சொல்வதெல்லாம் மிகையான ஒன்று. வேண்டும் என்றால் அந்த காரணமும் இதில் இணைந்துள்ளது என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். கரோனாவுக்கு முன்பே இந்தியாவில் பொருளாதாரம் என்பது எட்டு துறைகளில் நெகட்டிவ் ஆகிவிட்டது. எனவே இந்த கரோனாவும் அதனால் ஏற்பட்ட லாக் டவுன் மட்டுமே இந்த பொருளாதார சரிவுக்கு காரணம் அல்ல. அதற்கு முன்பு இந்திய பொருளாதாரம் அதள பாதாள நிலையில்தான் இருந்து வருகின்றது.


முதலில் இந்த லாக் டவுன் முறையையாவது ஒழுங்காக கொண்டுவந்தார்களா என்றால் அதிலேயே ஏகப்பட்ட பிழைகளை இந்த அரசு செய்துள்ளது. அமெரிக்காவில் மார்ச் 17ல் லாக் டவுன் கொண்டு வந்தார்கள். நாம் 25ம் தேதி அறிவித்தோம். ஏதாவது ஒரு முன்னறிவிப்பை செய்தோமா என்றால் அப்படி எதுவும் செய்யவில்லை. வெளிநாட்டில் இருந்தவர்கள் அங்கேயே மாட்டிக்கொண்டார்கள். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இங்கேயே மாட்டிக்கொண்டார்கள். ஒரு நான்கு நாட்கள் டைம் கொடுத்து மக்கள் அனைவரையும் அவரவர் வீடுகளுக்கு செல்ல வழி ஏற்பாடு செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் இது எதையுமே மத்திய அரசு செய்யவில்லை. மக்களை நட்டாற்றில் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பணமதிப்பிழப்பு சம்பவத்தை போல இதையும் அவசர கதியில் முடிவு செய்து நான்கு மணி நேரத்தில் அறிவித்தார்கள். அரசு நிர்வாகத்தை முறையாக செய்ய தெரியாத காரணத்தாலேயே இந்த தனியார் மய முடிவுகளை கால நேரம் பாராமல் எடுக்கிறார்கள். இதற்கெல்லாம் மக்கள் முன்பு அவர்கள் பதில் சொல்லி ஆக வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT