ADVERTISEMENT

மக்களைத் திசை திருப்பவே இந்த விளக்கேற்றும் நாடகம் - சுந்தரவள்ளி பேச்சு !

11:49 AM Apr 07, 2020 | suthakar@nakkh…


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர்.4000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை மின் விளக்குகளை அணைத்துவிட்டு, 9 நிமிடங்கள் தீபத்தை ஏற்றுங்கள் என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.அதன்படியே கடந்த ஞாயிறு அன்று இரவு ஒன்பது மணிக்குப் பெரும்பாலான இடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.இதுதொடர்பாக பேராசிரியர் சுந்தரவள்ளி அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம்.நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதனைப் பின்பற்றும் விதமாக வீட்டுக்குள்ளேயே இருந்து வருகிறார்கள். பிரதமரின் தீபம் ஏற்றும் வேண்டுகோளை ஏற்று அதனைத் தற்போது வெற்றிகரமாகச் செய்து முடிந்துள்ளார்கள். அதனைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?

கரோனா போய்விட்டதா? கோ - கரோனா என்றுதானே தீபம் ஏற்றச் சொன்னார். தற்போது கரோனா போய்விட்டாதா? ஒரு நாட்டின் நிர்வாகத்தில் இருக்கின்ற பிரதமர் கைதட்ட சொல்லக்கூடாது, விளக்கேற்ற சொல்லக்கூடாது, செல்பி எடுத்து அனுப்ப சொல்லக்கூடாது. ஒரு தலைவரா அதனைச் சொல்லக்கூடாது. கரோனாவைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.தனித்து இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் அன்று என்ன நடைபெற்றது. கோ - கரோனா என்று சாலைகளில் பேரணி செல்கிறார்கள்.பட்டாசு வெடிக்கிறார்கள்,இதுதான் மக்களை வழிநடத்துகின்ற முறையா? காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மக்களைக் கூடுவதை நாம் எதிர்க்கிறோம்.ஆனால் இன்று காலையில் கூட மதுரையில் ஒரு பையனைக் கடுமையாக அடித்துள்ளார்கள்.மருத்துவத்துக்காக கூடக்கூடாது என்று சொல்கின்ற போது, அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். நேற்று எல்லோரையும் கிளப்பிவிட்ட மாதிரி ஆகிவிட்டது.அவனவனும் கோ - கரோனா என்று ரோட்டில் சுற்றிக்கொண்டு ஓடுகிறார்கள். இதுவே நோய் பரவலுக்குல காரணமாக அமைந்தவிடும் என்ற சூழ்நிலையில் இது தேவையா?


சாதாரணமாக ஒன்பது நிமிடங்கள் விளக்கேற்றுவதால் என்ன நிகழந்துவிட போகின்றது?

இந்த நோய் பரவலுக்கு ஒரு நிமிடம் போதுமே.இப்படிக் கூட்டம் சேர்த்து சென்றால் நோய் பரவலை எப்படித் தடுக்க முடியும்.அன்னைக்கு ஒரு இடத்தில் தீ எரிகிறது,ஒரு இடத்தில் தீயை வைத்து சர்கஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்,இந்தியாவைப் பற்றி அவருக்குத் தெரியாதா? மக்களின் அச்சத்தை, உங்களின் கையாளாகாத தனத்தை மறைக்கப் பார்க்கிறீர்கள்.ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்,எத்தனை மருத்துவமனைகள் இருக்கு,மருத்துவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது.எவ்வளவு சீக்கிரம் மக்களைக் காப்பாற்ற முடியும் என்பதில்தான் இருக்க வேண்டும்.ஆனால் தேவையில்லாத வேலைகளில் மக்களின் நேரத்தையும்,பாதுகாப்பையும் வீணடிக்கிறார்கள். இன்றைக்கு கூட ஒரு மருத்துவர் சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.மருத்துவர்களுக்கே போதுமான கவச உடை இல்லை. அதை மறைப்பதற்கும்,மக்களைத் திசை திருப்புவதற்குமே இந்த விளக்கேற்றும் நாடகத்தைச் செய்கிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT