Advertisment

"நீதிமன்ற உத்தரவையே மதிக்காதவர்கள் பாத்திமா மரணத்தை பற்றியா நினைப்பார்கள்..." - முன்னாள் ஐஐடி பேராசிரியர் தாக்கு!

சென்னை ஐஐடியில் சில நாட்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை ஐஐடியில் 28 ஆண்டுகள் ஆசிரியராக பணி புரிந்த வசந்தா கந்தசாமியிடம் இதுகுறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதிகள் வருமாறு,

Advertisment

சென்னை ஐஐடியில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 5 பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கூட கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துள்ளார். நீங்கள் சென்னை ஐஐடியில் 28 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறீர்கள். இந்த மாதிரியான தொடர்ச்சியான தற்கொலைக்களுக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

Advertisment

ஐஐடியை பொறுத்த வரையில் எல்லாமே லாபிதான். அந்த மாணவியின் மரணத்தை தற்கொலை என்று பார்ப்பதை விட இன்ஸ்டுஷ்னல் கொலை என்றுதான் சொல்ல வேண்டும். கல்லூரி கொலை செய்துவிட்டது என்றுதான் பார்க்க வேண்டும். ஏனென்றால் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை விதமாக சூழ்நிலை மார்க் போடுவதில் தொடங்கி அனைத்திலும் தொடரும். அங்கே சிறுபான்மையினர், தலித், முஸ்லிம் முதலியவர்கள் படிப்பதே பெரிய சவாலான ஒரு விஷயம். இந்த மாணவி கூட நல்ல முறையில் படிக்க கூடிய மாணவிதான். அதனால் படிப்பு ஒரு பிரச்சனை என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு சொல்வது எல்லாம் போலிக் காரணங்கள் தான். ஆசிரியர்கள் அவளை ஹராஸ் செய்திருக்கலாம்? ஏனென்றால் தலித் ஆசிரியர்களோ முஸ்லிம் ஆசிரியர்களோ அங்கு இல்லை.

jhk

இந்த மரணம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எந்த அடிப்படையில் ஜாதி ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ அங்கு ஏதோ நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எப்படி வருபகிறது?

ஜாதி மற்றும் முஸ்லிம் என்ற அடிப்படையில் அந்த சந்தேகம் வருகிறது. ஏனென்றால் மற்ற ஜாதியினர் அங்கே இருப்பதே கடினமான ஒன்று. உயர்ந்த ஜாதியினர் மட்டும்தான் அங்கே படிக்க முடியும். அவர்களை மட்டும் தான் அங்கு இருப்பவர்கள், ஆதரிப்பார்கள். அங்கே முஸ்லிம் மாணவர்கள் மிக குறைவு. என்னுடைய 28 ஆண்டுகால கல்லூரி பணியில் அங்கே 10 பேர் அதிகம் பட்சம் படித்திருக்கலாம். இந்த மாணவி முஸ்லிமாக இருப்பதால் அங்கே அழுத்தங்கள் கொடுத்திருக்கலாம். மன ரீதியான உளைச்சல்களை சந்தித்திருக்கலாம். இதெல்லாம் அவருடைய இறப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம். பல நேரங்களில் இந்த மாதிரியான சூழ்நிலைகளில் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியாது. அவர்களுடைய வயது அப்படி. இதற்கு ஐஐடி என்ன சொல்ல போகிறது. மன உலைச்சல் காரணமாக அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்று கூறப்போகிறது. இதை தாண்டி அவர்களிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை.

இண்டர்னல் தேர்வில் சில பாடங்களில் சில பாடங்களில் அவர் மதிப்பெண் குறைவான அளவில் எடுத்ததாக கூறப்படுவதை பற்றி?

இந்த மதிப்பெண்கள் எல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவது. அவர்கள் நினைத்தால் எத்தனை மதிப்பெண்களையும் அவர்களுக்கு வழங்கலாம். நான் ஐஐடியில் 28 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன்.எனவே இதனை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இவள் ஏற்கனவே நன்றாக படிக்க கூடிய மாணவிதான். எனவே இதில் வேறு என்ன காரணங்கள் இருக்கிறது என்பதை நாம் கண்டறிய வேண்டும். நன்றாக படிக்க கூடிய மாணவர்களுக்கே இவர்கள் ஒழுங்காக சொல்லிக்கொடுக்க முடியவில்லை என்றால் படிப்பறிவு சற்று குறைவாக உள்ள மாணவர்களுக்கு இவர்கள் எப்படி கல்வி கற்றுக்கொடுக்க போகிறார்கள். ஐஐடி நிர்வாகத்தினர் நீதிமன்றத்தை மதிக்க மாட்டார்கள். தாங்கள் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் என்று நினைப்பார்கள். அவர்களை நீதிமன்றத்தால் கூட இதுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுதான் வருந்ததக்க ஒரு நிகழ்வாக தொடர்ந்து இருந்து வருகிறது. எந்த கோட்டா சிஸ்டமும் அங்கு செல்லுபடியாகாது. அவர்களுக்கு பிடித்தவர்களை பணியில் அமர்த்துவார்கள், பதவி உயர்வு கொடுப்பார்கள். இதுதான் காலங்காலமாக அங்கு நடைபெற்று வருகிறது.

iit madras
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe