Skip to main content

ராகுல்ண்ணா... கார்ல ஏறுங்க! அசால்ட்டாக இன்னோவாவை ஓட்டிய பிரியங்கா! பதறிய போலீசார்!!!

Published on 03/10/2020 | Edited on 04/10/2020

 

Rahul Gandhi

 

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண், சமீபத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளம் பெண்ணின் உடலையும் போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Rahul Gandhi

 

பாதிப்புக்குள்ளான பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க கடந்த வியாழக்கிமை காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியினருடன் சென்றனர். அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

 

இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்ல இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் குழுவுடன், தான் செல்ல இருப்பதாகவும், ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார். ராகுல் காந்தி வருவதாகக் கூறியதால், உத்தரபிரதேச நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். 

 

Rahul Gandhi

 

ராகுல்காந்தி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சென்றார். காங்கிரஸ் எம்.பி.க்கள் தனி வேனில் வந்தனர். அப்போது பிரியங்கா காந்தி, இன்னோவா காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்து, தான் கார் ஓட்டுவதாகக் கூறி, ராகுலை பக்கத்தில் அமர சொன்னார். ராகுலும் உடனே இன்னோவா காரில் அமர்ந்தார். பிரியங்கா அசால்டாக இன்னோவா காரை இயக்கினார். 

 

Ad

 

இதனிடையே ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் எம்பிக்கள் வருவது அம்மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எப்படியும் அவர்கள் சந்திக்காமல் திரும்பமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ராகுல், பிரியங்கா  உள்பட 5 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்திக்க அனுமதி அளிப்பதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் ஹத்ராஸ்க்கு அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் அதிகரித்தது. 

 

 

 

Next Story

“என்னைப் பற்றியும், எனது குணத்தைப் பற்றியும்...” - பிரியங்கா காந்தி மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
BJP MLA sensational allegation on Priyanka Gandhi

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்திக்கு எதிராக பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி சதர் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ அதிதி சிங். மறைந்த மூத்த அரசியல்வாதியான அகிலேஷ் சிங்கின் மகளான அதிதி சிங், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து, அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். அதன் பிறகு, ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், அதிதி சிங் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “மக்களவைத் தேர்தலில் சீட் வேண்டுமென்றால், என்னை பற்றியும், எனது குணத்தை பற்றியும் தவறாகப் பேசும்படி என்னுடைய முன்னாள் கணவரிடம் பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார்” என்று கூறி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Next Story

“யாத்திரைக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன” - ராகுல் காந்தி 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனையொட்டி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்நிலையில் இந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “யாத்திரையின் போது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டேன். இந்த யாத்திரை பயணத்தில் பார்த்த அனைத்தையும் ஒரே மேடையில் பேசிவிட முடியாது. இந்த யாத்திரையை முடக்க மத்திய அரசு சார்பில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த யாத்திரைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிகளுக்கு எதிராகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. இந்து தர்மத்தில் அதிகார மையம் என்ற வார்த்தை உண்டு. நாங்கள் அதற்கு எதிராகத் தான் போராடுகிறோம். அது என்ன அதிகார மையம் என்பது தான் கேள்வி. மணிப்பூரில் மோதலை ஏற்படுத்தியது அந்த அதிகார மையம் தான். அதுதான் நம் நாட்டையும் சீர் குலைக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க.வால் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியவில்லை. ஆனால் ஒரு திருமணத்துக்காக பத்தே நாட்களில் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினார்கள்” எனப் பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.