hhh

Advertisment

உலக அளவில் கரோனா தொடர்பான மரண எண்ணிக்கை 2,34,1115-ஐ எட்டியிருக்கிறது. மரண எண்ணிக்கையை குறைக்கவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த உலக நாடுகள் போராடி வருகிறது.

ஐ.நா. மக்கள்தொகை நிதியம், வேறு ஒரு கவலையில் இருக்கிறது. கரோனா ஊரடங்கால் உலகத்தின் பொருளாதாரமே முடங்கிக் கிடக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்திகூட நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் கருத்தடை சாதனங்களும் அடக்கம். குறைந்த மற்றும் நடுத்தர வருவாயுள்ள நாடுகளில் இந்தக் கருத்தடை சாதனங்கள் இயல்பாகப் புழக்கத்துக்கு வர ஆறுமாதம் ஆகும் என்கிறார்கள்.

அதற்கென்ன என்கிறீர்களா…

அதனால் வரும் காலத்தில் 7 மில்லியன் பெண்கள் தேவையில்லாத கர்ப்பத்தைச் சுமப்பார்கள் என்பதுதான் ஐ.நா. மக்கள்தொகை நிதியம் விடுக்கும் எச்சரிக்கை.

Advertisment

வரும் மாதங்களில் இந்தக் கருத்தடை சாதனங்களின் தட்டுப்பாட்டால் குறைந்த, நடுத்தர வருவாய் வரும் நாடுகளைச் சேர்ந்த ஐந்து கோடிப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களில் 70 லட்சம் பேர் விருப்பமின்றியே கருவுறுவார்கள். இவற்றில் எத்தனைபேர் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள், அல்லது தேவையில்லையென கருக்கலைப்பு செய்துகொள்வார்கள் என இப்போது ஊகிக்கமுடியாது என்கிறார்கள்.