Advertisment

கர்ப்பிணி மனைவி... வீட்டின் பின்புறம் ஒளிந்திருந்த முதல் கணவர்... வெளியான அதிர்ச்சி சம்பவ தகவல்!

லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளிப் பெண்ணான தேவி என்ற சனா முகமதுவை அவரது முதல் கணவர் அம்பு விட்டு கொலை செய்த சம்பவம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையை அவரது முதல் கணவர் ஏன் செய்தார் என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளிப் பெண்ணான தேவி என்ற சனா முகமது கிழக்கு லண்டனில் தன்னுடைய இரண்டாவது கணவரான இம்தியாஸ் முகமது அவருடன் வசித்து உள்ளார். அப்போது நடந்த விசாரணையில் தேவி ஏழு வருடங்களுக்கு முன்னதாக இம்தியாஸ் முகமது என்பவரைத் திருமணம் செய்து கொண்டு தன் பெயரை சனா முகமது என மாற்றி இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். தேவியின் முதல் கணவரான ராமனோஜ்க்கும், தேவிக்கும் மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். இரண்டாவது திருமணம் செய்த இம்தியாஸ் முகம்மதுக்கும், தேவிக்கும் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன.

Advertisment

issues

issues

இந்நிலையில் தேவி தனது இரண்டாவது கணவர் மூலம் 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இரண்டாவது கணவருடன், தேவி சந்தோசமாக கிழக்கு லண்டன் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். தேவி மற்றும் அவருடைய இரண்டாவது கணவரான இம்தியாஸ் இருவரும் கிழக்கு லண்டனில் இருக்கும் அவர்களது வீட்டில் இருந்தபோது தேவியின் முதல் கணவரான ராமனோஜ் வீட்டிற்குள் வில்லும் அம்பும் ஏந்தி கொண்டு அவர்கள் இருவரையும் தாக்குவதற்காக சென்றிருக்கிறார். அப்போது பயந்து போன தேவியும், இம்தியாஸும் வீட்டில் ஆளுக்கொரு புறம் ஓடியுள்ளனர். அப்போது முதல் கணவர் ராமனோஜ் எய்த அம்பு தேவியின் இதயத்தை துளைத்தது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் தேவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் தீவிர போராட்டத்திற்கு பின்பு தேவியின் வயிற்றில் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு எடுத்தனர் அதனை அடுத்து சிறிது நேரத்திலேயே தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

issues

பின்னர் போலீசார் தேவியை கொலை செய்த அவரது முதல் கணவரை கைது செய்து விசாரணை செய்தனர். தற்போது தேவியை முதல் கணவர் கொலை செய்தது ஏன் என்ற காரணம் வெளிவந்துள்ளது. தேவியும் அவரது இரண்டாவது கணவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவர்களை கொலை செய்வதற்கு அவர்களின் வீட்டின் பின்னால் இருக்கும் ஒரு அறையில் ஒரு மாத காலமாக பதுங்கி இருந்து அவர்களை கண்காணித்து வந்தேன் என்று விசாரணையில் கூறியுள்ளார். மேலும் தேவியை கொலை செய்வதற்காக அம்பு வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளிப் பெண்ணான தேவியின் கொலை குறித்த தகவல் தற்போது வெளியாகி லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

husband incident Investigation london problem wife
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe