Skip to main content

நேசமணி கொலை முயற்சி குற்றவாளி சந்துரு கைது!!! 

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

 

pray for nesamani நேற்றிலிருந்து இந்தியா ட்ரெண்டிங் இதுதான். ஒரு சின்ன விளையாட்டாய், அதாவது ஒரு க்ரூப்பில் ஒரு சுத்தியலின் படத்தை பதிவிட்டு உங்கள் ஊரில் இதன் பெயர் என்ன என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருவர் இதற்கு பெயர் சுத்தியல். இதை எதன்மீதாவது அடித்தால் ‘டங்க் டங்க்’ என சத்தம் வரும். பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி ஜமீன் மாளிகையில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது அவரது அண்ணன் மகன், அவர் தலையில் போட்டுவிட்டார். இதனால் அவரது தலை உடைந்துவிட்டது. பாவம் என பதிவிட்டிருந்தார். இங்குதான் தொடங்கியது, அதன்பிறகு தமிழ்நாடு ட்ரெண்டிங், இந்தியா ட்ரெண்டிங் என உலகம் முழுவதும் சென்றுவிட்டது. இது தொடர்பாக வந்த மீம்ஸ்களில் சில. 

 

 

 

Next Story

கை, கால் செயலிழந்த காமெடி நடிகர்; வீடியோ வெளியிட்டு உருக்கம்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Comedian actor vengal rao with amputation

80 காலக்கட்டத்தில் சினிமா ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி வந்தவர் வெங்கல் ராவ். இவர், முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்களுக்கு டூப் போட்டு நடித்துள்ளார். 

சண்டை காட்சிகளில் நடிக்கும்போது ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டண்ட் செய்வதில் இருந்து விலகி நடிகரானார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த வெங்கல் ராவ், நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். இவரும், வடிவேலுவும் இணைந்து நடித்து பல காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த இவருக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தனது கை, கால் செயலிழந்துவிட்டதாகவும், அதனால் உதவி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெங்கல் ராவ் வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவர் பேசியதாவது, ‘எனக்கு ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டது. என்னால், நடக்க முடியவில்லை, பேச முடியவில்லை. சினிமா தொழிலாளர்கள், சினிமா நடிகர்கள் இந்த வெங்கல் ராவ்வுக்கு உதவி செய்யுங்கள்’ எனப் பேசியுள்ளார்.  

Next Story

நண்பனின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு; கொடூரமாகக் கொல்லப்பட்ட கணவர்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 youth incident his friend near Ponneri

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சின்னக்காவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான லக்ஷ்மணன். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவருக்கும், மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான விஷ்ணு என்பவருக்கும் சென்னை புழல் நடுவன் சிறையில் இருந்தபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு இருவரும் சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னரும் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் லட்சுமணனின் மனைவியுடன் விஷ்ணுவிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்து பலமுறை இருவரையும் ஏற்கெனவே லட்சுமணன் கண்டித்த நிலையில் நேற்று இரவு லாவகமாக விஷ்ணு லட்சுமணனை தனது சொந்த ஊரான தோட்டக்காடு அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த லட்சுமணனை நண்பர்களுடன் சேர்ந்து விஷ்ணு சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் விஷ்ணு உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர். மனைவி உடனான திருமணத்தை மீறிய உறவை தட்டிக் கேட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை நண்பனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது