Advertisment

மாநில அதிகாரம் டெல்லிக்கு வேண்டும்; கரோனா விவகாரத்தில் மட்டும் மாநிலங்களைக் கைகழுவி விடுவீர்களா..? - பொன்ராஜ் கேள்வி!

jk

கரோனா தொற்று இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. மராட்டியம், தமிழகம், டெல்லி, கர்நாடகம், ஆந்திரா எனப் பல்வேறு மாநிலங்கள் இந்த கரோனாவின் தீவிரத்தால் பாதிக்கப்பட்டு செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மாநில அரசுகள் மத்திய அரசிடம் கேட்கும் நிதியை முறையாக தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் தற்போது அதிக அளவில் எழுந்துள்ளது.இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு பொன்ராஜ் பதிலளிக்கின்றார். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு,

Advertisment

இந்த கரோனா காலத்தில் மத்திய அரசின் செயலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மத்திய அரசு என்ன செய்துள்ளார்கள், எதையுமே அவர்கள் செய்யவில்லை. நம்மைமடைமாற்ற பார்க்கிறீர்கள். சீனா விவகாரத்தில் ஆரம்பித்து,தனியார் மயம், பொருளாதார விவகாரங்களில் மாற்றி மாற்றிப் பேசி நம்மைக்குழப்புகிறார்கள். இந்த அரசு இதுவரை எந்த முடிவையாவது உருப்படியாக எடுத்துள்ளதா என்றால் அப்படி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர்களிடம் எந்த ஒரு பிளானும் இல்லை, சொல்லப்போனால் அவர்களால் செயல்பட முடியவில்லை. எல்லா உரிமையும் எங்களுக்கு வேண்டும் என்கிறார்கள், மருத்துவம் நாங்கள் தான் நடத்துவோம் என்கிறார்கள், மின்சாரம், நீட், உள்ளிட்ட அனைத்திலும் நாங்கள் அதிகாரம் செலுத்துவார்கள். ஆனால் கரோனா விவகாரத்தில் எங்களுக்கு எதுவும் தெரியாது, அதை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

Advertisment

அப்படி என்றால் மாநிலங்களுக்கு என்று எந்த உரிமையும் இல்லையா? மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாநில உரிமைகளைக் குலைக்கின்றது. அனைத்திற்கும் தானே தலைவன் என்ற போக்கை ஏற்படுத்த மத்திய அரசு விரும்புகின்றது. சமீபத்தில்சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருத்து பாடத்தைக் குறைக்கிறேன் என்ற பெயரில் செக்குலரிசத்தையும், ஃபெடலரிசத்தையும் நீக்கி இருக்கிறார்கள். தனக்கு எது புடிக்கவில்லையோ அதை அவர்கள் நீக்கிவிடுவார்கள். இதுதான் ஜனநாயக நாட்டில் ஒரு அரசு நடக்கும் முறையா? மாநில அரசுகள் கேட்கும் பணத்தையாவது கொடுத்துள்ளீர்களா? நிர்மலா சீதாராமன் 4,500 கோடி நிவாரணமாக கொடுத்துள்ளோம் என்கிறார், ஆனால் நிதித்துறை செயலாளர் 1,500 கோடிதான் வந்துள்ளது என்கிறார். மீதி பணம் எங்கே போனது. அதன் உண்மை தன்மை என்ன. ஏன் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள்.

பொறுப்புக்களை மாநில அரசின் மீது திணித்துவிட்டு அதற்குத் தேவையான பணத்தைத் தர மாட்டோம் என்று மத்திய அரசு முரண்டு பிடித்தால் நாம் என்ன செய்ய முடியும். சரி, 20 லட்சம் கோடி அறிவித்தார்களே அதன் நிலைமை என்ன, எவ்வளவு பணம் வருகிறதுஎன்று பொருளாதார அறிஞர்கள் விவரமாக கூறியிருக்கிறார்களே, 1.86 லட்சம் கோடிதான்திரும்ப பணமாக வருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெளிவாக கூறியிருக்கின்றாரே. மீதி இருக்கிற அனைத்துத் திட்டங்களுமே பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள்தான், லோன் மாதிரியான திட்டம்தான் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. நிர்வாக திறமையின்மையை மறைப்பதற்கு மத்திய அரசு தன்னால்ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மை, என்றார்.

coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe