Skip to main content

பொங்கல் விடுமுறை ரத்தா? அமைச்சர், முதல்வரின் அவசர விளக்கம்!

Published on 28/12/2019 | Edited on 28/12/2019
m

 

போகி, பெரும்பொங்கல், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம் என்று பொங்கல் பண்டிகைக்கு வருடம்தோறும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கம்.   அதே போல் இந்த ஆண்டும் வர்ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 17ம் தேதி வரை பொங்கல் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று  ஜனவரி 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. 

 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ம் தேதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் பங்கு பெற உள்ளனர். 

 

அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும்.  ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும். அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதையடுத்து பள்ளிகளில் தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் இதர சாதனங்களை பழுது நீக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த திடீர் உத்தரவு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்களும் இந்த அறிவிப்புக்கு  கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

 

பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு, ‘பொங்கல் பண்டிகையை நீக்கும் முயற்சி’, ‘இது பாஜக அரசின் சூழ்ச்சி’ என்றெல்லாம் கண்டனங்கள் வலுத்தது.  நிலைமை விவரீதமாவதை உணர்ந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ’’பிரதமர் மோடி பேசுவதை கேட்க மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே கேட்கலாம். பள்ளிக்கு வர விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து அந்த நிகழ்ச்சியை கேட்கலாம்' என்று அவசரமாக விளக்கம் அளித்துள்ளார்.

 

ச்

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, ‘’இது கட்டாயமல்ல.  வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பாரத பிரதமரின் உரையை பள்ளிகளில் வந்து கேட்கலாம் என்றுதான் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது’’என்று டுவிட்டர் பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

 

Next Story

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்; ரூ.36 லட்சம் அபராதம் வசூல்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Surcharge on omni buses; A fine of Rs.36 lakh was collected
கோப்புப்படம்

பொங்கல் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தமிழக போக்குவரத்து சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி 15 ஆயிரத்து 650 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.36.55 லட்சம் தமிழக போக்குவரத்து சார்பில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை தமிழக போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரை முறைப்படுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் பதிவு செய்து தமிழகத்தில் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. இது போன்று பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் தடையில்லா சான்று பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் மறுபதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் பிற மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை எனவும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். 

Next Story

'காளையா காளையர்களா? நீயா நானா?'- நடிகர் சூரி பேட்டி

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
'Bulls or youngsters? Are you me?'-actor Soori interviewed

இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

தற்போது வரை எட்டு சுற்றுகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பிற்காக தென்மண்டல ஐஜி தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த நடிகர் சூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்று உலகத்திலேயே முக்கியமான நிகழ்வுகளில் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றது. அதேபோல நமது உறவுகளால், நம் தமிழ், நம் பாரம்பரியத்தை, நம் கலாச்சாரத்தை காப்பாற்றும் ஒரே வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு.

காளையா காளையர்களா? நீயா நானா? அப்படி ஒரு வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. அதைத்தான் பார்க்க வந்தேன். போன வருடமும் வந்தேன். போன வருடமும் ஜல்லிக்கட்டில் என்னுடைய மாடு வந்தது. இந்த வருடமும் என்னுடைய மாடு வந்தது. தொடர்ந்து வந்து கொண்டே இருப்பேன். என்னுடைய மாடு இங்கே தொடர்ந்து அவிழ்த்து விடப்படும்'' என்றார்.