Skip to main content

உனக்கு டைம் சரியில்லேன்னு நெனைக்கிறேன்! உன் லைஃபையே காலி பண்ணிருவேன்!- பொள்ளாச்சி சம்பவத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி!

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் திருநாவுக்கரசு, ரிஷ்வந்த், சதீஷ், வசந்த குமார்,  மணிவண்ணன் என்கிற 5 பேரையும் வாய் திறக்க விடாமல் போலீஸ் பார்த்துக் கொண்டிருக்கிறது.பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் தன்னை தாக்கியதாக கொடுத்த புகாரிலும் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் 4 பேர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். அதில் ஒருவன்தான்  "பார்' நாகராஜ். இந்த நிலையில்தான்... ஒரு பெண்ணை  ஒருவன் மிரட்டுகிற ஆடியோ நமக்கு கிடைத்தது. ""ஹலோ... யாரு..?'' எனக் கேட்கிறார் அந்த இளம் பெண். அப்போது எதிர்முனையில் பேசும் அவன்,

 

pollachi issues



"பொள்ளாச்சியில் இருந்து பேசறேன். என்னைய தெரியலையா..? யார்னு சொன்னாத் தான் பேசுவீங்களோ..?'' "உங்க பேரு ..?'"உங்ககிட்ட எல்லாம் பேசணும்னா பேர் எல்லாம் சொல்லிட்டுத்தான் பேசணுமோ..?'' "யார்னு தெரியாம எப்படி பேசறது..?''  "ஜெனிபர் தானே நீ..?''
""ஆமாம்''... "என்ன ஆமாம்னு பேசறே..? சரி. பொள்ளாச்சியில அவன் பேரு என்ன?  ஹா சம்பத்து பேர்லையும், கோகிலா பேர்லையும் கொடுத்த கேஸ் இருக்கு இல்ல. அதைய வாபஸ் வாங்கு. அப்புறம் நீ வீடியோ எடுத்த தெரியுமா.? அந்த வீடியோவை டெலிட் பண்றே. அந்த வீடியோவை வச்சுட்டு சும்மா ஸீன் எல்லாம் காட்டக் கூடாது. ஆமா.''

 

pollachi



"நான் என்ன வீடியோ எடுத்தேன். நான் ஒண்ணும் வீடியோ எடுக்கலியே..?' "என்ன வீடியோ எதுவும் எடுக்கலைன்னு சொல்றே..? பேசறது யாருன்னு தெரியுது இல்ல.'யாரு..?''  "யாரா..?''

"பொள்ளாச்சியில வந்து கேளு. "பார்' நாகராஜ் யார்னு சொல்லுவானுக .. அதைய  விட்டுட்டு போலீஸ் கிட்ட போறேன்''னு பார் நாகராஜ் சொல்வதற்குள்.. "கேஸை எல்லாம் வாபஸ் வாங்க முடியாது'' என்கிறார் அந்த இளம் பெண்."என்னது கேஸை வாபஸ் வாங்க முடியாதா..? உன் புருஷன் என்னைக்கு வருவான் ஊர்ல இருந்து.? பாத்துகிட்டு தான் இருக்கேன். அவன் திருச்சி  வந்தாலும் சரி. சென்னை வந்தாலும் சரி.. .அங்கியே தூக்கறேன். பர்ஸ்ட் அவனைத் தூக்குறேன். அதுக்கப்புறம் குடும்பத்தோட உங்களை தூக்குறேன்... அவன் பேரு என்ன எஸ்.ஐ லெனினா..? அவன்கிட்ட போறது. எங்க போனாலும் சரி. .அவன் எல்லாம் ஒண்ணும் என்னைய பண்ண முடியாது. என்ன பேசிட்டே இருக்கேன். நீ சைலண்டா இருக்கே.?'' என்கிறான் "பார்' நாகராஜ்.

 

pollachi



அந்த இளம் பெண்ணோ... "நீங்க முடிஞ்சதை பாத்துக்கோங்க.. எங்களால முடிஞ்சதை நாங்க பாத்துக்கறோம்..'' என தைரியமாய் பேசுகிறாள். "இங்க பாரு. வேணா.. நானே டென்ஷன்ல இருக்கறேன். உனக்கு டைம் சரியில்லே..ன்னு நெனைக்கிறேன் . உன் லைஃபையே காலி பண்ணிருவேன். ஒழுங்கா இருந்துக்கோ. உன் புருஷன் கிட்ட  பேசி முடிவு பண்ணிட்டு வா. பணம் எல்லாம் பத்து காசு கூட நான் கொடுக்க முடியாது. உனக்கு உயிர் மேல ஆசை இருந்துச்சுன்னா.. எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு கேஸை வாபஸ் வாங்கிட்டு ஓடிரு... இல்லைன்னா நான் என்ன பண்ணணுமோ பண்ணிருவேன்.. யார் அங்க பக்கத்துல..?' "எங்க அம்மா.."ஹேய் .. உங்க அம்மாவா..? நான் பேசுறதை எல்லாம் ரெக்கார்டு பண்றது. இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் எங் கிட்ட காட்ட வேணாம். நான் எல்லாத்துக்கும் வந்து தயாராத்தான் உங்கிட்ட பேசறேன்.

"சரியா..? ஜாக்கிரதையா இருந்துக்கோ..? நல்லது கெடையாது.'' "என்ன சரிங்கறே..? "அடுத்த வாரம் வந்துரு. வந்து வாபஸ் வாங்கிட்டு போயிட் டே இரு.' "சரிங்க பாத்துக்கலாம்..'ன்னு அந்த இளம் பெண் சொன்னவுடன்.. "ஹேய் ..கோகிலா எல்லாம் வாபஸ் வாங்கிருவாங்க..'' என்கிறான் "பார்' நாகராஜ் .

"பார்' நாகராஜ் மிரட்டும் ஜெனிபர் என்கிற அந்த இளம் பெண்ணின் கணவர் பெயர் ஜூலியன்.
கடந்த 2018-ல் மே 11-13 தேதி யிட்ட நக்கீரன் இதழில்.. ""இளைஞர் களை ஏமாற்றும் "கில்' லேடிகள்'' என்கிற தலைப்பில் செய்தி வெளி யிட்டு இருந்தோம். அதில்.. கோகிலா, சங்கீதா என்கிற சகோதரிகளான இளம் பெண்கள் இருவர் ஜூலியன் என்கிற இளைஞனை ஏமாற்றி, 25 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்  பணமும், 23 பவுன் நகைகளும் பறித்து விட்டார்கள். இதற்கு அவர்களின் அம்மா வளர்மதியும் உடந்தை யாக இருந்ததாக செய்தி வெளி யிட்டோம். கோவை சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதையும் (வழக்கு எண் : 218/2018 மந 420 ஒடஈ) எழுதியிருந்தோம். 

 

pollachi



அந்த கோகிலா திருமணம் செய்தவர் பெயர்தான் சம்பத். அந்த சம்பத் பொள்ளாச்சி கோட் டூர்புரத்தைச் சேர்ந்தவர். அந்த ஜூலியன் திருமணம் செய்து கொண்ட பெண்தான் இந்த "பார்' நாகராஜால் மிரட்டப்படும் ஜெனிபர். இப்போது சிங்கப்பூரில் இருக்கும் ஜூலியனை நாம் தொடர்பு கொண்டு பேசினோம் ..

"சார்.. நக்கீரன்ல செய்தி வந்ததுக்குப் பிறகுதான் இந்த கோகிலா வீட்ல எம்மேல கடுங் கோபமா இருந்தாங்க. கோகிலா கல்யாணம் பண்ணின சம்பத் என்னைய அடிக்கடி மெரட்ட னாரு. "பார்' நாகராஜும், இப்ப பாலியல் வழக்குல ஜெயில்ல இருக்கற சதீஷும் என் மனைவி 5 மாத கர்ப்பமா இருக்கும் போது, கோகிலாவுக்கு சப்போர்ட் பண்ணி பேச வந்திருக்காங்க. அதைய என் மனைவி வீடியோ எடுத்துட்டா. அந்த வீடியோவை டெலிட் பண்ணிட்டு, சூலூர் கேஸை வாபஸ் வாங்கணும்னுதான் எங்களை மெரட்டுறாங்க.

"பார்' நாகராஜ், சதீஷ்குமார், கோகிலா கணவர் சம்பத், கோகிலாவின் பெரியப்பா செல்வராஜ், கோபால், ரஞ்சித், மஞ்சுளா எல்லோரும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கறாங்கன்னு கடந்த 05/04/2019 கோவை மாவட்ட எஸ்.பி.கிட்ட புகார் கொடுத்தேன் .எனக்கோ, என் மனைவிக்கோ எது நேர்ந்தாலும் அதுக்கு "பார்' நாகராஜ்தான் பொறுப்பு ..என் மனைவியை மெரட்டுற எல்லா வீடியோவையும் நான் அனுப்புறேன்.. நீங்கதான் எங்களுக்கு துணையா இருக்கணும்..'' என ஜூலியன் கண்ணீரோடு நம்மிடம் பதறினார். இதைத் தொடர்ந்து நாம் "பார்' நாகராஜின் நம்பருக்கு தொடர்பு கொண்டு.. "ஜெனிபருடன் பலரும் பேசி இருக்கிறார்கள். நீங்களும்தான். "சதீசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என சொன்னீர்கள். ஆனால் நீங்களும், சதீசும் சேர்ந்துதான் ஜெனிபரை மிரட்டி இருக்கும் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது..' என சொன்னவுடன்.. ""சார்.. பாலியல் மேட்டர்ல சதீஷ் இருக்கறான். நான் இந்த ஒரு விஷயத்துக்காக பேசும் போது  அவன் கூட வந்தான் . அவ்வளவுதான். மத்தபடி எனக்கும் இந்த பாலியல் மேட்டருக்கும் சம்பந்தமில்லை..'' என பதறியடித்து பதில் அளித்தான் "பார்' நாகராஜ்.

 

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

இளம் பெண் ரயில் நிலையம் அருகே கொடூரக் கொலை; பின்னணி என்ன ?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
A young woman from Chennai was passed away near Gudiyattam railway station

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.