Skip to main content

தற்கொலையைக் கொச்சைப்படுத்துவோம்! - பிரதீபா பெற்றோரை மிரட்டிய போலீஸ்

Published on 05/06/2018 | Edited on 05/06/2018

நீட் தேர்வு முடிவு மீண்டும் ஒரு பலி வாங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் கடைசி மகள் ப்ரதீபா. பெருவளூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது 490 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.

 

pradeepa parents



இதனைப் பாராட்டி அப்போதைய கலெக்டர், அரசின் சார்பில் நிதியுதவி தந்து கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்த்துள்ளார். அதன்படி கடந்த 2015 – 2016ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் 1125 மதிப்பெண் எடுத்துள்ளார்.

ப்ரதீபாவின் கனவு மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்பதில் இருந்துள்ளது. அதனால் அப்போது மருத்துவ கவுன்சலிங்கில் கலந்துகொண்டுள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்தது. கட்டணம் அதிகம் என்பதால் கொத்தனார் வேலை செய்யும் தனது தந்தையால் படிக்கவைக்க முடியாது என்பதால் அதில் சேரவில்லை.

 

 


இதனால் ஒரு வருடம் வீட்டில் இருந்து 2017ஆம் ஆண்டு மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொள்ள நினைத்தபோது, மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வை கொண்டு வந்தது. அதனை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த ஒப்புக்கொண்டது. இதனால் கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றது. ப்ரதீபாவும் நீட் தேர்வு எழுதினார். 155 மதிப்பெண்கள் எடுத்தார். இதனால் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. மனம் தளராமல் 2018ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதினார்.

 

 

police negotiating



நீட் தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது தொடர்பாக வாரியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என மாணவர்கள் சிலர் தொடுத்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ளது. இந்நிலையில், 2018 ஜூன் 4ந்தேதி மதியம் நீட் ரிசல்ட் வெளிவந்தபோது, ப்ரதீபாவின் சகோதரி பார்த்தார். ப்ரதீபா தேர்ச்சி பெறவில்லை என தெரியவந்தது. இதனால் அந்தத் தகவலை அவருக்குத் தெரியப்படுத்தவில்லை. இதை நண்பர்கள் வழியாக தெரிந்துக்கொண்ட ப்ரதீபா, அதிர்ச்சியாகி வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்துள்ளார். ப்ரதீபாவின் இந்த முடிவை தாமதமாக தெரிந்துகொண்ட குடும்பத்தார் மருத்துவமனையில் சேர்த்தும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

 

 


அவரது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது. செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ மஸ்தான் (திமுக), விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள், அதிமுகவின் தினகரன் அணியினர் மருத்துவமனையில் திரண்டனர்.

இறந்த ப்ரதீபாவின் சார்பில் மூன்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதாவது, நீட் தேர்வு தடை செய்ய வேண்டும், நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கை மனுவை கலெக்டர் கந்தசாமியிடம் வழங்கினர்.

 

 

protest



மனுவளித்தபின் போலீஸார் நடவடிக்கை மாறியது. வேலூர் மண்டல காவல்துறை தலைவர் வனிதா தலைமையிலான போலீஸார், கைது செய்து மண்டபத்தில் அடைத்துவிட்டு ப்ரதீபாவின் பெற்றோர்களை மிரட்டி கையெழுத்து வாங்கி உடற்கூறாய்வு செய்து உடலை ஒப்படைத்தனர்.

ப்ரதீபாவின் உடல் சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ப்ரதீபாவின் உறவினர்கள், கட்சியினர் மறியலில் ஈடுப்படக்கூடாது என பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

'ப்ரதீபா, நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்யவில்லை, வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துக்கொண்டார், அதனால்தான் விஷம் குடித்த அவரை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் மாவட்டம் மாறி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கொண்டு வந்தார்கள்' என்கிற தகவலை அரசியல் கட்சியினர் மத்தியில் மருத்தவமனை வளாகத்தில் போலீஸார் பரப்பினர். 'நாங்கள் சொல்கிறபடி கேட்காவிட்டால் தற்கொலைக்கு காரணமே பெற்றோர்தான்' என வழக்கு போடுவோம் என மிரட்ட ஆர்ப்பாட்டத்தில் இருந்தவர்கள், இந்தத் தகவலால் பயந்து பின்வாங்கிய நிலையில் அவசர அவசரமாக உடற்கூறாய்வு செய்ய கையெழுத்து வாங்கி உடலைத்தந்து அனுப்பி நிம்மதியடைந்துள்ளது திருவண்ணாமலை மாவட்ட போலீஸ்.





 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.