up Photograph: (police)
உடலை 15 துண்டுகளாக வெட்டி பகீர் கொலை, உடலை வெட்டி குக்கரில் விசில் வைத்த உறைய வைக்கும் கொலை, உடலை ட்ரம்மில் வைத்து சிமெண்ட் கொண்டு பூசி கொடூரக் கொலை என பல்வேறு அதிர்ச்சி தரும் வினோத கொலை சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம். அதேபோன்ற வினோத வரிசையில் அரங்கேறியுள்ளது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இந்த நூதன கொலை சம்பவம்.
Advertisment
கடந்த 15ஆம் தேதி பத்ராபா மாவட்டத்தில் உள்ள 'இட்கா' எனும் பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் சிதைக்கப்பட்ட நிலையில் மனித உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 15க்கும் மேற்பட்ட துண்டுகளாக கிடந்த அந்த மனித உடலை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருந்தன.
Advertisment
ஸ்பாட்டுக்கு விரைந்த போலீசார் தலை இல்லாமல் கிடந்த அந்த சடலத்தின் பாகங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். துண்டாக கிடந்த கை பகுதியில் 'ராகுல்' என பச்சை குத்தப்பட்டிருந்தது. இதை முக்கிய ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சமீபத்தில் அந்தப் பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை வைத்து போலீசார் விசாரணை செய்தனர். கடந்த 18 ஆம் தேதி தனது கணவர் ராகுலை காணவில்லை என ரூபி என்ற பெண், காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தது தெரிந்தது. கைப்பற்றப்பட்ட சடலத்தின் கையில் ராகுல் என்று பச்சை குத்தப்பட்டிருந்ததால் அது காணாமல் போன ரூபியின் கணவர் ராகுலாக இருக்கலாம் என்பதை ஓரளவிற்கு போலீசார் உறுதி செய்தனர்.
தொடர்ந்து விசாரிப்பதற்காக ரூபியின் வீட்டிற்கு சென்றபோது படுக்கை அறையில் இரத்தக்கரைகள் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் போலீசாரின் பார்வை ரூபி மீது திரும்பியது. ரூபியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் மேலும் வலுத்தது. கிடுக்குபிடி விசாரணையில் ரூபி சொன்ன தகவல்கள் போலீசாரையே ஒருகணம் அதிர்ச்சியில் உறையவைத்தது.
காசியாபாத் பகுதியை சேர்ந்த ராகுல்- ரூபி தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தநிலையில் ரூபிக்கும் அதேபகுதியில் வசித்து வந்த கௌரவ் என்ற இளைஞருக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. ராகுலுக்கு ஒருநாள் இது தெரியவர ரூபியை கண்டித்தததோடு மட்டுமல்லாமல் கண்காணிக்கவும் தொடங்கியுள்ளார்.
அப்படி ஒருநாள் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற ராகுல், சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரூபி கௌரவ் உடன் தனிமையில் இருந்துள்ளனர். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ராகுல் ரூபியை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ராகுலை முடிக்க ரூபி, கௌரவ் மற்றும் கௌரவ்வின் நண்பர் அபிஷேக் ஆகிய மூவரும் திட்டம் தீட்டி இருக்கிறார்கள். இரவில் தூங்கி கொண்டிருந்த ராகுலை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். சடலத்தை எப்படி அகற்றுவது என யோசித்த மூவரும் மறுநாள் பெரிய அளவிலான பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் கிரைண்டர் ஒன்றையும் வாங்கியள்ளனர். ராகுலின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் சில உடல் பாகங்களை போட்டு அரைத்திருக்கிறார்கள்.
அப்படி அரைக்கப்பட்ட ராகுலின் உடல் பாகங்கள் நகரின் வெவ்வேறு பகுதிகளில் வீசப்பட்டது தெரிய வந்தது. ரூபியின் மகளிடம் போலீசார் விசாரித்தபோது அடிக்கடி வீட்டிற்கு கௌரவ் மற்றும் அவரின் நண்பர் அபிஷேக் வந்ததாகவும், வரும்போதெல்லாம் தின்பண்டங்கள் கொடுத்து வெளியே சென்று விளையாடுமாறு சொன்னதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர கொலையை நிகழ்த்திய ரூபி, கௌரவ், அபிஷேக் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். உடலை அப்புறப்படுத்த பயன்படுத்தப்பட்ட கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us