Advertisment

"பியூஷ் மனுஷ்தான் தலைமைப் பொறுக்கி!" - கரு.பழனியப்பன்

இயக்குனர் மஞ்சுநாத்தின் 'பொறுக்கீஸ் அல்ல நாங்கள்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கரு பழனியப்பன் பேசியது...

Advertisment

karu palaniyappan

"எனக்கு மஞ்சுநாத் அறிமுகம் இல்லை; அதனால் ராதாரவி சார்தான் எனக்கு போன் பண்ணி சொன்னார், உங்களுக்கு மஞ்சுநாத் போன் பண்ணுவார் என்று. அப்பறம் இயக்குனர் போன் பண்ணாரு. 'பொறுக்கிஸ் அல்ல நாங்கள்' படத்தோட இசை வெளியீட்டு விழா என்றார். அதுலயும் எனக்கு வெறும் 'பொறுக்கிஸ்' மட்டும் தான் காதில் விழுந்துச்சு, 'அல்ல நாங்கள்' அப்படின்றத அவரு கொஞ்சம் தேச்சுதான் சொன்னாரு. 'சரி பொறுக்கிங்க லிஸ்ட்ல நம்மள கூப்பிட்டு இருக்காங்க போல'ன்னு நான் நினைச்சுக்கிட்டேன். 'சரி அப்பறம் வேற யாரு எல்லாம் வர்றாங்க'ன்னு கேட்டேன். 'காமாட்சியைக் கூப்பிட்டு இருக்கேன்'னு சொன்னார். சரி, அடுத்த பொறுக்கி, 'அப்பறம் பியூஷ் மனுஷ்'ஷை கூப்பிட்டுருக்கேன்னு சொன்னார். 'ஆஹா.. தலைமைப் பொறுக்கி', சரி அந்த லிஸ்ட்லதான் நம்மளையும்கூப்பிட்டு இருக்காங்கனு நினைச்சி சந்தோசப்பட்டுக்கிட்டேன்".

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

இயக்குனர் பேசும் போது சொல்லிட்டு இருந்தாரு 'இது ஒரு சாதாரண படம்'னு. இப்படி கேட்டே ரொம்ப நாள் ஆச்சு. உலகத்துல அவனவன் நான் எடுத்ததுதான் காவியம், இந்த வெள்ளிக்கிழமையோட உலகம் மாறப் போகுதுனு சொல்லிட்டு இருக்கும் காலத்தில் இப்படி ஒருத்தரு சொல்றதுதான் அந்த படைப்பின் அடிப்படை. எல்லாருக்கும் தெரியும் 'உலகம் ஒரு நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள்'. ஆனாலும் சேக்ஷ்பியர் அதை அவர் கண்ணோட்டத்துல பார்த்து சொல்லும் போதுதான் அது காவியம் ஆகிறது. அந்த மாதிரி மஞ்சுநாத்தும் 'நான் ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன், அதை சொல்லி இருக்கேன்'னு சொல்றதுதான் பெரிய விஷயம். சமூகத்தின் மேல் இருக்கிற அதிருப்தியை நாம எல்லாரும் சொல்லணும், அவரவர் செய்கின்ற வேலையில் சொல்லணும், வேலை இல்லைனா கிடைக்கிற மேடையில் சொல்லணும், மேடை கிடைக்கிலைனா நாம் கூடுகிற இடத்தில் சொல்லணும். எங்கயாவது ஒரு இடத்தில் நாம் சொல்லிட்டே இருக்கணும்.

piyush manush

அப்படி சொல்வதனால்தான் பியூஸ் மனுஷ் மேல் ஒரு வழக்கு போடு இருக்காங்க! அவர் எதுவும் போராட்டம் கூட பண்ணல வெறும் ஃபேஸ்புக்ல பேசியிருக்காரு. அதைப் பார்த்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வழக்கு போட்டு இருக்காரு. ஒரு காலத்தில் மக்கள் யாராவது மன்னனுக்கு பிடிக்காத வேலை செஞ்சா அவனை ஊரை விட்டு ஒதுக்கி வச்சிடுவாங்க. பட்டினிதான் பெரிய தண்டனை. அதன் பிறகு பெரிய தண்டனை ஊர் பொது குளத்தில் அவன் தண்ணீர் எடுக்கக்கூடாது, அதுக்கு அப்பறம் மனித சமூகம் நாகரிகம் அடைஞ்ச பிறகு மின்சாரத்தை தடை பண்ணுவது. ஏன்னா மின்சாரம் ரொம்ப அத்தியாவசியம், இன்று அரசாங்கம் என்ன செய்யும்னு யோசிச்சீங்கனா எந்த ஊரில் எவன் ஒருவன் உரிமைக்காக குரல் எழுப்புகிறானோ அந்த ஊரில் இன்டர்நெட் கட் பண்ணிடுவாங்க. இப்போ அடிப்படை தேவை இன்டர்நெட். இது மூலமாகத்தான் எல்லா செய்தியும் பரப்புறாங்க. அதனால் அதைத்தான் முதலில் கட் பண்ணுவாங்க.

வள்ளுவன் சொல்றான்...

'செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு'

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ஒரு அரசை மக்கள் எப்போ விரும்புவாங்கனா ரொம்ப கடுமையான சொற்களால் விமர்சிக்கும்போது, உதாரணத்துக்கு ராதாரவி பேசற மாதிரி, பியூஸ் மனுஷ் பேசற மாதிரி, இந்தத் திரை படத்தின் இயக்குனர் மஞ்சுநாத் பேசுற மாதிரி, எவ்வளவு கடுமையான சொற்களாக இருந்தாலும் விமர்சனங்களாக இருந்தாலும் அது எல்லாவற்றையும் கேட்டுக்கணும். அப்படி இருக்கிற அரசாங்கம்தான் மக்களின் விருப்பமான அரசாக இருக்குமாம். இப்போ இருக்கும் அரசாங்கம் எல்லார்க்கும் விருப்பமான அரசாங்கமாக இருக்கா இல்லையான்னு நீங்களே யோசிச்சுக்குங்க..." என்றார்.

piyush manush karupazhaniyappan rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe