Skip to main content

"மோடி மக்களுக்குப் பணம் தர மாட்டார்... ஆனால் மக்களிடம் இருந்து வாங்குவார்.." - பியுஷ் மனுஷ் பேச்சு!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020


தற்போது ஒரு அதிர்ச்சியான செய்தி வெளிவந்திருக்கிறது. இந்தியா கொள்முதல் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தற்போது தோல்வி அடைந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றது. சீனா நாங்கள் கூறுகின்ற நிறுவனத்திடம்தான் டெஸ்ட் கிட் வாங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அந்த வகையில் சீனா இந்த விவகாரத்தில் கையை விரித்துவிட்டார்கள். மக்களிடம் அரசாங்கத்தைப் பார்த்து சப்போர்ட்டாகப் பேச வேண்டும் என்று கூறுகிறார்கள். அரசாங்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது என்றால் என்ன என்பது பற்றி நான் சொல்கிறேன்.
 

 

ேி



மக்களுக்குச் செய்கின்ற அளவுக்கு அரசாங்கத்திடம் சொத்துக்கள் இருக்கிறது. அதனை மக்களுக்கு முறையாகச் செய்தார்கள் என்றால், யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இன்றி நன்றாக இருப்பார்கள். நமக்குச் சென்னையில் வெள்ளம் வந்த போது அமெரிக்காவில் காத்தரீனா புயல் வந்தது. நாம் வெள்ளத்தில் இருந்து நம்மைத் தற்காத்து கொண்டோம். ஆனால், அமெரிக்கா அதனைச் சரியாகச் செய்ய முடியவில்லை. நம்மிடம் ஏராளமான ரிசோர்ஸ் இருக்கின்றது. ஆனால் அதனை நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இல்லை, அதில் லூட்டி அடிக்கிறோம். மாஸ்க்-கை பதினேழு, பதினெட்டு ரூபாய் கொடுத்து இபிஎஸ் அரசாங்கம் வாங்கியுள்ளது. 

நம்ம ஏற்கனவே ஒரு பதிவு போட்டு இருந்தோம். கோவை அரசு மருத்துவமனையில் பணியாளர்களுக்குப் போதுமான அளவு என்-95 மாஸ்க் இல்லை. நாம் அதைப் பற்றி பதிவு போட்டபிறகு அதிகாரிகள் ஓடிப்போய் பார்க்கிறார்கள். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும் போதுமான அளவு பாதுகாப்பு உள்ளிட்டவைகளைச் செய்யவில்லை என்று கூறி, அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்கள் ஒரு டாக்டரைப் புதைக்க விடவில்லை. மத்திய அரசைப் பற்றி பேசவே அருவருப்பாக இருக்கிறது. மக்களுக்குப் பணம் கொடுக்க மாட்டார், ஆனால் பிஎம் கேர் என்று சொல்லி மக்களிடம் இருந்து பணம் வாங்குவார்.
 

http://onelink.to/nknapp


வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் எப்படி போனால் நமக்கென்ன என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இந்த அரசுக்கு இது எல்லாம் கேவலமாக இல்லை. வெளிமாநில தொழிலாளர்களை அவர்கள் வீட்டில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இந்த அரசுக்கு இருப்பதில்லை. இதே போலத்தான் காஷ்மீரில் எட்டுமாதமாக லாக் டவுன் செய்துள்ளார்கள். காஷ்மீரை சுவிட்சர்லாந்து மாதிரி ஆக்கி காட்டுகிறேன் என்று அமித்ஷா ரீல் விட்டார். இப்போது அங்கு என்ன நிலமை இருக்கிறது. எல்லாமே ஏமாற்று வேலையாக இருக்கிறது.