ADVERTISEMENT

“இளம்பெண்கள் கடத்தல்; மோடி ஊரில் நடக்கும் அவலம்” - பியூஷ் மனுஷ்

03:30 PM May 10, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் பெண்கள் கடத்தப்படும் சம்பவம் மற்றும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து நம்மோடு சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் பகிர்ந்துகொள்கிறார்.

அவர் பேசியதாவது: “குஜராத் மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெண் சிசுக் கொலை அங்கு அதிகம் நடக்கிறது. பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர். ஆனால், வட இந்திய மக்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியாது. அவர்களுக்கு மதம் தான் முக்கியம். காங்கிரஸ் ஆட்சியில் தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் இருந்தன. பாஜக ஆட்சியில் தீமைகள் மட்டும் தான் இருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளில் 40000 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் எதன் மீதும் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. சங்கிகளுக்கு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு மட்டும் தான் அரசியல். ஏழை மக்கள் இருக்கும் பகுதிகளை எப்போதும் தடுப்பு வைத்து மறைக்கவே விரும்புபவர் மோடி. அவருக்கு இதுபற்றியெல்லாம் கவலை இருக்காது. மணிப்பூரில் கலவரத்தால் இவ்வளவு பேர் இறந்த பிறகும் மோடிக்கு கர்நாடக தேர்தலின் மீதுதான் ஆர்வம் இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் அவருடைய பக்தர்கள் கைதட்டுவார்கள். உக்ரைன்-ரஷ்யா போரைக் கூட அவரால் நிறுத்த முடியும் என்று நம்புவார்கள்.

மணிப்பூரில் நடைபெறும் கலவரம் பாஜக உருவாக்கியது தான். கலவரம் குறித்து மோடி, அமித்ஷா வாய் திறக்கவே இல்லை. கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருவரும் பிசியாக இருந்தனர். மோடிக்கு இந்து பெண்கள் பற்றிக் கவலையில்லை. அவர்களின் கல்விக்கு நீட் மூலம் தடை போட்டுள்ளார். பெண்களின் முன்னேற்றத்துக்காக எதையும் செய்யவில்லை. தேர்தலைச் சுற்றி மட்டும் தான் அவருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவருடைய பிரச்சார அணிவகுப்பில் மக்களையே காண முடியவில்லை. கட்சிக்காரர்களே நின்று பூக்களை அவர் மேல் தூவுகின்றனர். மத ரீதியான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இவர்கள் ப்ரமோட் செய்கின்றனர்.

தமிழ்நாடு குறித்து மணிஷ் காஷ்யப் அவதூறு பரப்பி வருவதை முதன்முதலில் நான் தான் வெளிப்படுத்தினேன். அந்த நேரத்தில் அவர்களால் முடிந்த அளவு அவதூறு செய்திகளைப் பரப்பினர். அதன் பிறகு மணிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டான். அவனுக்கு தண்டனை வாங்கித் தருவது தான் அடுத்து என்னுடைய வேலை. இதுபோன்ற ஆர்எஸ்எஸ் நபர்கள் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்தத் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்.”


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT