Skip to main content

கரோனா-வை கட்டுப்படுத்த கோலி, சச்சினிடம் ஆலோசனை கேட்பதா...? - பியுஸ் மனுஷ் அதிருப்தி!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

கரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு பெரும்பாலான வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேஸ்புக் நேரலையில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், "ஒற்றுமைக்காக விளக்கேற்றுவதாக பலரும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்கள் முற்றிலும் வேறுபாடு நிறைந்ததாக இருக்கிறது. அவர்களின் சமூக வலைதள பக்கத்திற்கு சென்று பார்த்தால் குறிப்பிட்ட மதத்தினர் மீது சேற்றைவாரி இறைத்திருப்பார்கள். யுனிட்டி என்றால் என்ன, எனக்கு தெரிந்த வரைக்கும் ஒருவருக்கொருவர் ஒன்றுமையாகவும் உதவும் மனப்பான்மையோடும் இருப்பதுதான்.

  d



இதுதான் எனக்கு தெரிந்த ஒற்றுமை. ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது. ஆபத்தில் இருப்பவர்களை இப்படித்தான் நெருப்பில் தள்ளிவிடுவீர்களா? சில நாட்களுக்கு முன்பு இவர்களை கைதட்ட சொன்னபோதே தெரியவில்லையா? இவர்கள் என்ன செய்தார்கள் என்று. சிலர் கையை, காலை கொளுத்திக்கிட்டு வீட்டிலேயே கட்டுப்போட்டு இருக்கிறார்கள், மருத்துவமனைகளில் வேறு அட்மிஷன் இல்லை. 5 நாட்களுக்கு முன்னர் கைதட்ட சொன்ன போதே இவர்கள் லட்சணம் உங்களுக்கு தெரிந்திருக்குமே? அப்படி தெரிந்திருந்தும் அவர்களை விளக்கேற்ற சொன்னது எப்படி சரியாகும். விளக்கை வைத்து விபரீத செயல்களில் பெரும்பாலானவர்கள் ஈடுபட்டனர்.
 

nakkheeran app



இவ்வளவு பொது அறிவு கூட மோடிஜி-க்கு இல்லை என்றால் எப்படி. இன்னும் கொஞ்ச நாட்கள் வேறு இருக்கின்றது. அதில் என்ன கூத்து நடக்க போகின்றதோ தெரியவில்லை. ஆனால் எல்லோரும் கையில் தட்டு வைத்துக்கொண்டும், விளக்கு வைத்து கொண்டு நிற்கிறார்கள். 52 மருத்துவர்களுக்கு கரோனா பாசிட்டிவ் என்று காட்டியுள்ளது.  மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகின்றது. மோதுமான அளவு மாஸ்க் இல்லை என்று கூறுகிறார்கள். இவர்களின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லை. பணத்தின் மதிப்பை அதிகரிக்க போகிறோம் என்றார்கள், அது எங்கேயோ போயிடுச்சி.

பொருளாதாரத்தை சரி செய்யபோகிறோம் என்றார்கள். அதுவும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. வேலை வாய்ப்பை கொடுக்க போகிறோம் என்றார்கள், அன்றைக்கே நமக்கு புரிந்திருக்க வேண்டும் வேலை வாய்ப்பே இல்லை என்று. அவர்கள் சொல்வதற்கும், செய்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கரோனாவை கட்டுப்படுத்த சச்சின் டெண்டுல்கரிடம், கோலியிடமும் ஆலோசனை கேட்கிறார்கள். அந்த நிலைமையில்தான் நாடு உள்ளது" என்றார்.
 

 

Next Story

பறந்த முத்தம்; பதறிய பாஜக எம்பிக்கள் - வெளுத்து வாங்கும் பியூஷ்மனுஷ்

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Piyush Manush interview

 

சமீபத்திய பாராளுமன்ற நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் அவர்கள்...

 

கொடுக்கப்படாத ஃப்ளையிங் கிஸ் ஸ்மிருதி இரானியால் பாராளுமன்றத்தில் அரசியலாக்கப்பட்டது. மணிப்பூரில் வெளியான வீடியோவிலேயே இவ்வளவு கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றால், இன்னும் வெளியாகாத விஷயங்கள் எவ்வளவு இருக்கும்? மணிப்பூர் முதலமைச்சரே சொல்கிறார் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் அங்கு நடைபெற்றுள்ளது என்று. பாஜகவினர் தேசத்துரோகிகள் என ராகுல் காந்தி சரியாகச் சொன்னார். பாஜகவினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் கலவரங்களுக்கு அரசின் ஆதரவு இல்லையென்றால் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை?

 

இவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தான் இதில் அரசியல் இருக்கிறது என்கிறோம். மணிப்பூரில் நடந்தது அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட வன்முறை. சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் மக்களைத் துன்புறுத்துவது தான் தீவிரவாதம். 24 மணி நேரமும் இவர்களுடைய சிந்தனை மதம் குறித்தே இருக்கிறது. மக்கள் துன்பப்படுவதை மணிப்பூர் முதலமைச்சரால் நிறுத்த முடியவில்லை. ஆனால் அவரை மாற்றுவதற்கு பாஜக தயாராக இல்லை. சொந்த மாநிலத்தில் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். 

 

கொஞ்சமாவது மனசாட்சி இருந்திருந்தால் மணிப்பூர் முதலமைச்சரை இவர்கள் மாற்றியிருப்பார்கள். மணிப்பூர் மக்கள் யாரும் அவரை விரும்பவில்லை. ராகுல் காந்தி யாருக்கும் ஃப்ளையிங் கிஸ்  கொடுத்தது போல் வீடியோவில் தெரியவில்லை. ஆனால் இவர்கள் பொய்யைப் பரப்புகின்றனர். மணிப்பூரில் அவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்ட விஷயத்தை விட்டுவிட்டு, எந்த விஷயத்துக்காக இவர்கள் சபாநாயகரிடம் புகார் கொடுக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். சொந்த மக்களையே இவர்கள் இன அழிப்பு செய்கிறார்கள். 

 

பிரதமரைப் பேச வைப்பதற்காகத் தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர் பேசுவதற்கு தயாராக இல்லை. பஸ்ஸில் 10 கிலோமீட்டர்கள் சென்றுவிட்டு வெறும் 2 கிலோமீட்டர்கள் மட்டும் நடப்பது தான் அண்ணாமலையின் நடைபயணம். இந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு என்ன மக்கள் நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? சிலிண்டர் விலையை உயர்த்தியது, மக்கள் சொத்துக்களை அதானியிடம் கொடுப்பது தான் சாதனையா? இவர்கள் வாயைத் திறந்தாலே பொய்தான் பேசுகிறார்கள். இவர்கள் நாட்டை மொத்தமாகக் கொள்ளையடிக்கிறார்கள்.

 

 

 

Next Story

“இளம்பெண்கள் கடத்தல்; மோடி ஊரில் நடக்கும் அவலம்” - பியூஷ் மனுஷ்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Piyush Manush  Interview

 

குஜராத் மாநிலத்தில் பெண்கள் கடத்தப்படும் சம்பவம் மற்றும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து நம்மோடு சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் பகிர்ந்துகொள்கிறார்.

 

அவர் பேசியதாவது: “குஜராத் மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெண் சிசுக் கொலை அங்கு அதிகம் நடக்கிறது. பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர். ஆனால், வட இந்திய மக்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியாது. அவர்களுக்கு மதம் தான் முக்கியம். காங்கிரஸ் ஆட்சியில் தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் இருந்தன. பாஜக ஆட்சியில் தீமைகள் மட்டும் தான் இருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளில் 40000 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் எதன் மீதும் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. சங்கிகளுக்கு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு மட்டும் தான் அரசியல். ஏழை மக்கள் இருக்கும் பகுதிகளை எப்போதும் தடுப்பு வைத்து மறைக்கவே விரும்புபவர் மோடி. அவருக்கு இதுபற்றியெல்லாம் கவலை இருக்காது. மணிப்பூரில் கலவரத்தால் இவ்வளவு பேர் இறந்த பிறகும் மோடிக்கு கர்நாடக தேர்தலின் மீதுதான் ஆர்வம் இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் அவருடைய பக்தர்கள் கைதட்டுவார்கள். உக்ரைன்-ரஷ்யா போரைக் கூட அவரால் நிறுத்த முடியும் என்று நம்புவார்கள். 

 

மணிப்பூரில் நடைபெறும் கலவரம் பாஜக உருவாக்கியது தான். கலவரம் குறித்து மோடி, அமித்ஷா வாய் திறக்கவே இல்லை. கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருவரும் பிசியாக இருந்தனர். மோடிக்கு இந்து பெண்கள் பற்றிக் கவலையில்லை. அவர்களின் கல்விக்கு நீட் மூலம் தடை போட்டுள்ளார். பெண்களின் முன்னேற்றத்துக்காக எதையும் செய்யவில்லை. தேர்தலைச் சுற்றி மட்டும் தான் அவருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவருடைய பிரச்சார அணிவகுப்பில் மக்களையே காண முடியவில்லை. கட்சிக்காரர்களே நின்று பூக்களை அவர் மேல் தூவுகின்றனர். மத ரீதியான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இவர்கள் ப்ரமோட் செய்கின்றனர். 

 

தமிழ்நாடு குறித்து மணிஷ் காஷ்யப் அவதூறு பரப்பி வருவதை முதன்முதலில் நான் தான் வெளிப்படுத்தினேன். அந்த நேரத்தில் அவர்களால் முடிந்த அளவு அவதூறு செய்திகளைப் பரப்பினர். அதன் பிறகு மணிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டான். அவனுக்கு தண்டனை வாங்கித் தருவது தான் அடுத்து என்னுடைய வேலை. இதுபோன்ற ஆர்எஸ்எஸ் நபர்கள் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்தத் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்.”