Advertisment

புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சாப்பாடு கொடுக்கக் கூட மத்திய அரசால் முடியாதா..? - பியுஷ் மனுஷ் கேள்வி!

jk

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்புவதில் பல்வேறு சிக்கல் எழுந்த நிலையில் இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ் மத்திய அரசை விமர்சனம் செய்து பேசியதாவது, "மக்களுக்கு தண்ணியும் உணவையும் கொடுங்கள் என்று அரசாங்கத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும் நிலையில் நாடு இருக்கின்றது. பொதுமக்கள் உங்கள் ரயிலில் பணம் கொடுத்துச் செல்லும் போது அவர்களுக்குத் தேவையானதை நீங்கள் தானே கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கின்றது. அரசாங்கத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இப்போது நான் பேச உள்ளேன். அரசாங்கம் தற்போது என்ன கூறுகிறது என்றால் 97 லட்சம் பேரை அவர்கள் வேலை செய்யும் இடங்களில் இருந்து அவர்கள் வீடுகளுக்குக் கொண்டு சேர்த்து விட்டோம் என்று சொல்கிறது. அவர்கள் ரயிலில் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது மூன்று நாளில் இருந்து ஒருவாரம் கூட ஆகின்றது. குறைந்தது மூன்று நாட்கள் என்று வைத்துக்கொண்டால் கூட அரசாங்கம் இதுவரை 84 லட்சம் உணவு பாக்கெட்டுக்களை அந்தத் தொழிலாளர்களுக்குக் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

Advertisment

அப்படி என்றால் ஒரு ஆளுக்கு ஒரு பாக்கெட் கொடுத்துள்ளார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் உணவுக்கு என்ன செய்வார்கள். சாப்பிடாமல் அவர்கள் அனைவரும் ஊருக்குப் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? இது அனைத்தும் அரசாங்கம் கொடுத்த டேட்டா. நானாக எந்தத் தகவலையும் கூறவில்லை. அதுவும் மக்கிப் போன சாப்பாட்டைக் கொடுத்து மக்களைத் தூக்கி எறிந்துள்ளார்கள். 16 பேர் இறந்துள்ளார்கள், உணவில்லாமலும், வெப்பத்தின் காரணமாகவும் ரயிலில் மட்டும் இந்த இறப்பு நடைபெற்றுள்ளது. நாம் அனைவரும் பீகார் ரயில் நிலையத்தில் தாயைப் பறிக்கொடுத்துவிட்டு குழந்தை விளையாடிய வீடியோவை பார்த்திருப்போம். சில நாட்களுக்கு முன்பு இந்தத் தொழிலாளர்கள் செல்வதற்குரிய கட்டணத்தை 85 சதவீதம் மத்திய அரசு தருவதாக ஒரு தகவலைக் கூறினார்கள். உச்சநீதிமன்றத்தில் தற்போது அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் இந்தக் கட்டணங்களை மாநிலங்கள் பார்த்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்கள். அப்புறம் எதற்காக மக்களிடம் அவர்கள் பொய்க்கூற வேண்டும்.

Advertisment

நீங்கள் பி.எம். கேர் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் வைத்துள்ளீர்கள். இந்தப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒரு ரயில் டிக்கெட் எடுத்துக்கொடுத்துள்ளீர்களா? ஏன் எடுத்துக்கொடுக்கவில்லை. இதற்குப் பிரதமர் பதில் சொல்வாரா? அவரால் எதுவும் கூற முடியாது. அவர் மக்கள் நலனில் அக்கறை இருந்தால்தானே அது பற்றி சிந்திக்க முடியும். அந்த மாதிரியான சிந்தனைகள் எல்லாம் அவருக்கு ஒருபோதும் வராது. அவர்களுக்கு என்னவெல்லாமோ செய்ய இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர்களுக்குச் செய்தது என்ன, தண்ணீரும், உணவும் கேட்கிறார்கள். அதைக்கூட செய்ய மாட்டேன் என்று எதற்காகக் கூறுகிறீர்கள். யாரும் யோசிக்க முடியாத அளவுக்கு ஒரு மோசடி நடைபெற்று வருகின்றது" என்றார்.

piyush manush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe