Advertisment

நம்மிடமே பிறப்பு சான்றிதழ் இல்லாத போது அப்பாவின் பிறப்பு சான்றிதழுக்கு எங்கே செல்வது..? - பியூஷ் மனுஷ் கேள்வி!

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு என்ன பிரச்சனை வந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக எதிர்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் மக்களை சந்தித்து அவர்களிடம் இந்த சட்டத்தில் இருக்கும் பாதிப்புக்கள் குறித்து பேசினார். அப்போது, " சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தால் இதுவரை எந்த முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். அவருக்கு தற்போது சில தகவல்களை சொல்ல விரும்புகிறேன். என்சிஆர் மற்றும் என்பிஆர் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பாஜக கட்சியினரும் பைத்தியக்காரத்தனமாக ஒரு கோடி சேலஞ் செய்தார்கள். இதைப் பற்றித்தான் தற்போது பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.

Advertisment

jhk

இங்கே ஒரு காவலர் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விரும்பினால், நான் உதாரணத்திற்கு சொல்கிறேன். ஆனந்த் என்ற ஒரு தம்பி இருக்கிறார். அவர் இந்து என்று என்று வைத்துக்கொள்வோம். அவர் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அமித்ஷா என்ன சொல்லி இருக்கிறார் என்றால் இந்து என்று ஒருவரை நிரூபிப்பதற்கு எந்த சான்றும் தேவையில்லை என்று கூறியிருக்கிறார். அவர் பேசிய வீடியோக்கள் நம்மிடம் இருக்கின்றது. மற்றொரு பேட்டியில் இந்திய குடியுரிமையை நிரூபிக்க ஆதார் கார்டு, பாஸ்போர்ட், லைசென்ஸ் உள்ளிட்ட எதுவுமே செல்லாது என்று கூறுகின்றார். இப்போது முஸ்லிம்கள் 2014க்கு முன்பு இங்கே பிறந்தவர்கள் தாங்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். அவர்கள் உங்களை பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று நிரூபிக்க பார்ப்பார்கள். அதனால் அவர்களின் நோக்கம் எதை நோக்கி இருக்கின்றது என்பதை நாம் எளிதாக அறிந்துகொள்ள முடிகின்றது. அப்படி என்றால் தற்போதைய நிலையில் மக்களிடம் இருக்கும் சான்றிதழ்கள் போதாது என்று சொல்கிறார்கள். அவர்களிடம் பிறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். அவர்கள் அனைவரிடம் அது இருக்குமா என்றால் அதற்கு வாய்ப்பு குறைவு. மேலும் அவர்களின் பிறப்பு சான்றிதழும், பள்ளி சான்றிதழும் ஒன்றாக இருக்கிறதா? அதுவே பலருக்கு ஒன்றாக இருக்க வாயப்பில்லை. ஆனால், அதையும் தாண்டி அவர்களின் பெற்றோரிடமும் பிறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். அவர்களிடம் அது இருக்குமா என்றால் அதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு. அப்படி என்றால் நீங்கள் வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று கதையை முடித்துவிடுவார்கள். உங்கள் குடியுரிமை சந்தேகத்துக்குரியது என்று கூறிவிடுவார்கள். இதுதான் சிஏஏ-வின் பாதிப்பு" என்றார்.

Advertisment

piyush manush
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe