Advertisment

இதற்காகத்தான் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி, இறக்கினார்களா???

petrol diesel

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நாட்டின் பொருளாதாரம், விலைவாசி என அனைத்தையும் நிர்மாணிப்பது பெட்ரோல், டீசல் விலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது 2018 ஜூலை 5ம் தேதியிலிருந்து அக்டோபர் 4ம் தேதிவரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. அதன்பின் அக்டோபர் 5 முதல் தற்போதுவரை(டிசம்பர் 1) குறைந்துகொண்டே வருகிறது. இந்த விலையேற்றம் மற்றும் குறைவிற்கு அந்நிய செலாவணியில் ஏற்பட்ட மாற்றம், கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றத்தாழ்வு ஆகிய காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் இந்த விலை மாற்றத்தினூடே, இன்னொரு மாற்றமும் நிகழ்ந்துள்ளது...

Advertisment

(சென்னை விலையை அடிப்படையாகக்கொண்டது)ஜுன் 16, 2017 அன்று முதல்தான் தினசரி விலைமாற்றம் அமலுக்கு வந்தது. அன்றைய பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ.69.83, ரூ.59.22. 2017ன் முடிவில் பெட்ரோல், டீசல் விலை 72.53, 62.83. அதன்பின் மார்ச் 31ம் தேதியன்று அதாவது 2018ம் ஆண்டின் காலாண்டு முடிவில் பெட்ரோல், டீசல் விலை 76.29, 67.93, அதன்பின் அக்டோபர் 4ம் தேதி அன்றுமுதல்தான் பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்வைக் கண்டது. அன்றைய விலை 78.57, 71.24. அதன்பின் 94 நாட்கள் அதாவது அக்டோபர் 5வரை தொடர்ந்து விலை ஏறிக்கொண்டே இருந்தது. 94 நாட்களின் முடிவில் பெட்ரோல் விலை ரூ8.76 உயர்ந்து ரூ.87.33 ஆக இருந்தது. டீசல் விலை ரூ.8.65 உயர்ந்து 79.89 ஆக இருந்தது.

petrol

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதன்பின் டிசம்பர் 1வரை அதாவது 60 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் குறைவு காணப்படுகிறது. டிசம்பர் 1 அதாவது இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை முறையே 75.62, 71.59. இவற்றிற்கிடையேயான வித்தியாசதொகை ரூ.11.91, ரூ.8.3. இதிலென்ன என நீங்கள் நினைக்கலாம். தினசரி விலைப்பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளில் பெட்ரோல், டீசல் இரண்டிற்குமான வித்தியாசத்தொகை ரூ8.54, 2017ன் முடிவில் ரூ9.7, இப்படியாகவே இருந்தது. தொடர்விலையேற்றம் தொடங்கிய தினமான ஜூலை 5ன் போது வித்தியாசதொகை 7.33, தொடர் விலையேற்றம் முடிவுக்கு வந்த தினமான அக்டோபர் 4 ம் தேதி பெட்ரோல், டீசல் இரண்டிற்குமான வித்தியாசதொகை ரூ.7.44. ஆனால் இன்றைய தின விலைப்பட்டியலின்படி (தொடர் விலைக்குறைப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில்) பெட்ரோல், டீசல் விலைகளில் உள்ள வித்தியாச தொகை ரூ.4.03 மட்டுமே.

தொடர் விலையேற்றத்தின் போது இரண்டும் தொடர்ந்து ஒரே சீரான நிலையில் ஏறிக்கொண்டிருந்தபோது குறையும்போது மட்டும் எப்படி இவ்வளவு வித்தியாசம் வந்ததுதான் சந்தேகத்திற்கு காரணம். ஒருவேளை பெட்ரோல், டீசல் விலையை சமப்படுத்துவதற்குதான் இந்த முயற்சியோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கச்சாஎண்ணெய்யில் உள்ள மாற்றம் என நினைக்கவேண்டாம், கச்சா எண்ணெய் என்பது பெட்ரோலியம்தான் இதில் பெட்ரோல் உள்ளிட்ட 20 பொருட்கள் கலந்திருக்கும். சுத்திகரிப்பு செலவிலும் இவ்வளவு பெரிய மாற்றம் வர சாத்தியமில்லை. அதனால் இதற்கான காரணம் என்ன என்பதை அந்தந்த நிறுவனங்களும், கண்காணிக்காமல் விட்ட அரசுகளும்தான்விளக்க வேண்டும்...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

diesel higher price India petrol price
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe