Advertisment

நான் யார்... பெரியாரைப் பற்றி பெரியாரே கூறியது...

periyar

சாதி, மதக்கொடுமைகள் எப்போதெல்லாம் துளிர் விட நினைக்கின்றதோ, அப்போதெல்லாம் பெரியார் என்ற நெருப்பு கிளர்ந்துகொண்டு வருகிறது, அந்த விஷத்துளிரை கருகச்செய்ய. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று, அவரைப்பற்றி அவரே கூறியது இதுதான்...

Advertisment

ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணிசெய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

Advertisment

இதைத்தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததால், பகுத்தறிவையே அடிப்படையாகக்கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டிற்கு தகுதி உடையவன் எனக்கருதுகின்றேன். சமுதாயத்தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்.

periyar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe