Advertisment

பெப்சிக்கு 5500 கோடி நஷ்டம்???

இன்று உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும். பெப்சி நிறுவனம் மிகப்பெரிய நஷ்ட்டத்தை சந்தித்தது. ஒரு சிறிய தவறுகூட மிகப்பெரிய சேதாரத்தைஏற்படுத்திவிடும்என்பதற்கு பெப்சி நிறுவனமே மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் அமைந்தது. ஆனால் இதெல்லாம் நடந்ததுதற்போது இல்லை, 1992ம் ஆண்டு. பெப்சி தனதுவிளம்பரத்திற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்ட போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.

Advertisment

pepsi

பாட்டிலின் மூடியில் பல எண்கள் இருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட எண்ணை நிறுவனம் கூறும் அந்த எண்ணுள்ள மூடியை கொண்டுவருபவருக்கு குறிப்பிட்ட அளவு பரிசு என அறிவித்திருந்தது. அதன்படியே 349 என்ற எண்ணிற்கு 40,000 டாலர்களை பரிசாக அறிவித்தது நிர்வாகம். ஆனால் வந்தது ஒருவர் அல்ல. இலட்சக்கணக்கான நபர்கள். ஆம் இலட்சக்கணக்கான மக்கள்தான் பரிசுக்காக வந்தது. பெப்சி நிறுவனத்திற்கு மூடி தயாரித்த நிறுவனம் 349 என்ற எண்ணில் ஒரு மூடியை மட்டும் தயாரிக்காமல், எட்டு இலட்சம் மூடிகளை தயாரித்திருந்தது. பெப்சி நிறுவனமும் அதை கவனிக்காமல் விற்பனைக்கு அனுப்பிவிட்டு, அதே எண்ணைபரிசு எண்ணாகவும்அறிவித்திருந்தது. இதனால்தான் இலட்சக்கணக்கான மக்கள் கூட்டம் பரிசுக்காக வந்து நின்றது. பின்பு தவறு நடந்திருக்கிறது என்று நிறுவனம் பரிசு தொகையை வழங்க மறுத்தது. கோபமடைந்த வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின்மீது 680 குற்ற வழக்குகளையும், 5200 மோசடி வழக்குகளையும் பதிவு செய்தனர். அனைவருக்கும் 40,000 டாலர்கள் கொடுத்தால் 5,500 கோடி டாலர்நஷ்டம் ஏற்படும் என வாதாடியதுபெப்சி. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒவ்வொரு மூடிக்கும் 2000 டாலர்கள் வழங்கவேண்டுமென உத்தரவிட்டது. இதனால் பெப்சி நிறுவனம் அப்போதே இந்திய மதிப்பில் ரூ.60 கோடிக்கும்மேல் நஷ்டத்தை அடைந்தது.

protest pepsi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe