Skip to main content

பனை மரங்கள் மூலம் மருத்துவப் பொருளாகும் பனங்கருப்பட்டி!

Published on 10/05/2020 | Edited on 10/05/2020
Workers



ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பனை மரத்திலிருந்து பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, பனங்கருப்பட்டி ஆகிய உணவுப் பொருட்கள் கிடைத்தன. பனை பொருள்களால் தொழுகை பாய், பெட்டி, நார், கம்பு என எண்ணிலடங்கா பொருட்கள் தயாரிக்கப்பட்டன. அதுபோல் காகிதம் கண்டறியும் முன் தமிழ் காப்பியங்களும் இலக்கியங்களும் வாழ்ந்ததே பனை ஓலைச் சுவடிகளில் தான். பனை ஓலை கூறை மேயவும், வைரம் பாய்ந்த பனங்கட்டைகளை ஓட்டு வீடுகளுக்கு உத்திரமாக பயன்படுத்தப்படும் மட்டைகள் வேலிகளாகவும், நார் பிரித்து கட்டில் கட்டுவதற்கும் கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. இப்படி பனையின் ஒவ்வொரு அணுவும் மக்களின் ஆரோக்கியம் பொருளாதாரம் பேணும் பொருட்களாக இருந்து வந்தது.
 

 

 

Worker



ஆனால் இந்த நவீன கால மாற்றம் மூலம் இப்பனை பொருட்களின் பயன் பாட்டின் அருமை தெரியாமல் நாமும் அதனை உபயோகிக்காமல் குறைத்து கொண்டு வருகிறோம். இருந்தாலும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் தொகுதியில் இருக்கும் கோவிலூர், கோம்பை, மணல் காட்டூர், சின்ன அழகு நாயக்கனூர், பழைய தோப்பூர், குஜிலியம்பாறை எரியோடு உள்பட சில பகுதிகளில்  இருக்கும் பன மரங்களில் பாளையை  சீவி கலயத்தை கட்டி அதில்  சுண்ணாம்பை தேய்த்து விடுவர். மறு நாள் காலையில் அது பதநீராக இருக்கும். ஒரு மரத்திற்கு மூன்று அல்லது  ஐந்து கலயங்கள் கட்டுவதன் மூலம் பத்து லிட்டர் பதநீர் கிடைக்கும். அதை பனை தொழிலாளர்கள் அகன்ற கொப்பரையில் ஊற்றி அடுப்பில் வைத்து கூல் போல் காய்ச்சி சிறிதளவு விளக்கெண்ணையும் ஊற்றி குச்சியில் கிண்டியபின் அதை எடுத்து தேங்காய் சிரட்டையில் ஊற்றி வைத்து விடுவார்கள். அது சிறிது நேரத்தில் பனங்கருப் பட்டியாக வந்து விடுகிறது. 

 

Workers



அதை திண்டுக்கல் மட்டும்மல்லாமல் சேலம், ஈரோடு, மதுரை, தேனி திருச்சி உள்பட சில பகுதிகளில் உள்ள வியாபாரிகளும் வாங்கி செல்கிறார்கள். இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருந்துள்ளன. ஆனால் வறட்சி மற்றும் மக்களின் புறக்கணிப்பால் பல ஆயிரம் மரங்கள் அழித்து போயின. அதை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து வருகிறார்கள்.

 

இருந்தாலும் பனை கருப்பட்டியின் மருத்துவ பயன் சர்க்கரையை விட மிகுதியாக உள்ளன. இதில் இரும்பு, கால்சியம் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. விட்டன் பி, அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த பனங் கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. அதுபோல் பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும் சேர்த்து களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். அதுபோல் குழந்தை பெற்ற தாய்மார்களும் சாப்பிடலாம்.  இந்த கருப்பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். சர்க்கரைக்கு பதிலாக டீ, காப்பி தயாரிக்க கருப்பட்டியை பயன்படுத்தலாம். பழங்கால தமிழர் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த பனங்கருப்பட்டி தற்போது ஒரு மருத்துவ பொருளாகவும் இருந்து வருகிறது.

 

Worker



இது சம்பந்தமாக காட்டி சாலையை சேர்ந்த தொழிலாளர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, எங்க தாத்தா காலத்திலிருந்து இந்த பனைமர தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 2000 குடும்பத்தினர் இப்பகுதிகளில் இருந்தனர். தற்பொழுது போதிய வருமானம் இல்லாததால் 500 குடும்பத்தினர் இத்தொழிலை நம்பியுள்ளோம். அதிலேயும் ஆண்டுக்கு நான்கு மாதம் மட்டுமே இந்த பனங்கருப்பட்டி தயாரிக்கிறோம். இப்படி தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டி தண்ணீர் படாமல் இருந்தால் மூன்று ஆண்டுகள் வரை கூட கெடாமல் இருக்கும். பதனீரில் சுண்ணாம்பு தவிர வேற எந்த விதமான ரசாயனமும் கலப்பது கிடையாது. அதனால் உடல் நலத்திற்கும் நல்லது. அப்படி இருந்தும் கூட ஒரு கிலோ 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய்கு வியாபாரிகள் வாங்கிச் சென்று அதை கிலோ 400 ரூபாய் வரைக்கும் விற்கிறார்கள் என்று கூறினார். 
 

 

 

Worker


 

இது சம்பந்தமாக கோவிலூர் சி.பி.எம்.கிளை செயலாளர் சண்முகம் நம்மிடம் பேசும்போது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பனை வாரியம் அமைக்கப்பட்டு இப்பகுதியில் அரசு மூலம் கட்டடங்கள் கட்டப்பட்டு அலுவலகம் செயல்பட்டு வந்தது. அது காலப் போக்கில் செயல் படாமல் போய்விட்டது. அதை அரசும் கண்டு கொள்ளவில்லை. கடந்த கஜா புயலில் இப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட மரங்கள் அழிந்துவிட்டன. அது போல் ஆண்டுதோறும் மழை தண்ணீர் இல்லாததால்  மரங்களின் எண்ணிக்கையும் குறைகிறது. அதனால பனை தொழிலை பாதுகாக்க பனை வாரியமும் செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தினால் தான் பனைத் தொழிலாளர்கள் தயாரிக்கும் கருப்பட்டிக்கு நியாயமான விலை கிடைக்கும். அதுபோல் மருத்துவ குணம் கொண்ட இந்த பனங்கருப்பட்டியை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் பனை கருப்பட்டி செய்யும் தொழிலாளர்களுக்கும் போதிய வருமானம் கிடைக்கும். அதன் மூலம் பனை மரங்களையும்  பாதுகாக்க முடியும். இந்த கரோனா எதிரொலி மூலம் பனை தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக இந்த அரசு அறிவித்தும் கூட அந்த பணம் தொழிலாளர்களுக்கு இன்னும் கொடுக்க வில்லை. அதை உடனே கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.


 

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.