other side of AIADMK candidate Saravanan

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை முன்னிறுத்தி தீவிரப் பரப்புரை செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர் டாக்டர் சரவணன். இவர், மதுரையில் உள்ள பிரபலமான சரவணா மருத்துவமனை குழுமத்தின் தலைவராகவும், சூர்யா டிரஸ்ட்டின் நிறுவனராகவும் உள்ளார்.

இந்த முறை மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் போட்டி சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என சொல்லப்படுகிறது. திமுக கூட்டணி சார்பில் சு.வெங்கடேசன் ஸ்டார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த வேண்டும் என இந்த முறை அதிமுக தலைமை டாக்டர் சரவணனுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. டாக்டர் சரவணன் மருத்துவப் படிப்பை முடித்த கையோடு 1996 ஆம் ஆண்டிலிருந்து சூர்யா டிரஸ்ட்டை நடத்தி வருகிறார். அதன் மூல பல ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் செய்துவருகிறார். இதனால், மதுரை மாவட்ட மக்களிடம் நன்கு அறிந்த முகமாக டாக்டர் சரவணன் இருப்பதால் அதிமுக தலைமை அவருக்கு ‘சீட்’ வழங்க முன்னுரிமை அளித்ததாகச் சொல்லப்படுகிறது. டாக்டர் சரவணன் நடத்தி வரும் சூர்யா டிரஸ்ட்டின் நோக்கமே , ''பொருளாதார சூழ்நிலையால் எந்த நோயாளிக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் போகக் கூடாது..'' என்பதாகும்.

தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அதிமுக மக்களவை வேட்பாளரும், டாக்டருமான சரவணன் 1992 ஆம் ஆண்டு முதல் தனது சொந்த மருத்துவமனையில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நோயாளிகளுக்கு குறைந்த செலவிலும், சில சமயம் இலவசமாகவும் சிகிச்சை வழங்கி வருகிறார். தொடர்ந்து, 30 வருடமாக மருத்துவ சேவையை டாக்டர் சரவணன் வழங்கி வருகிறார். இதனிடையே, தொடர்ந்து கால்கள் இழந்த நோயாளிகளுக்கு செயற்கை கால்களை தனது தொண்டு நிறுவனம் மூலம் இலவசமாகப் பொருத்தி மதுரையில் மருத்துவ சேவையை கொடையாக செய்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில்தான், வேட்பாளராக டாக்டர் சரவணன் களம் இறக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அவரின் சேவை குணம் வாக்கு வங்கியாக மாறும் என மதுரை மாவட்ட அதிமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மருத்துவத்துறையில் கொடிகட்டி பறந்து வரும் டாக்டர் சரவணன்.. மீண்டும் அதிமுகவின் கோட்டையாக மதுரையைமாற்றுவார் என அதிமுக தலைமை நம்பிக்கை வைத்துள்ளது.

எடப்பாடியை கவர்ந்த வேட்பாளரான டாக்டர் சரவணன், திரையுலகிலும் சில காலம் பயணித்தார். அகிலன் என்ற திரைப்படத்தை தயாரித்து தனது நடிப்பு திறமையும் வெளியுலகத்திற்கு காண்பித்தார். தொடர்ந்து, மருத்துவத்தில் செய்த மக்கள் சேவையை அரசியலிலும் செய்ய நினைத்தார். அதன் காரணமாக மதிமுகவில் தொடங்கிய அவரது அரசியல் பயணம் இன்று அதிமுக வரை நீண்டுள்ளது. தொடர்ந்து, களத்தில் இறங்கி தீவிர வேலை செய்வதன் மூலம் கட்சித் தலைமையிடம் நற்பெயரைத்தொடர்ந்து பெற்று வந்தார்.

இந்த நிலையில், தான் மதுரை நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் அதிமுக அணியின் வேட்பாளராக டாக்டர் சரவணன் களம் காண்கிறார். இந்த முறை அவரது வெற்றியை உறுதி செய்ய அவரது கட்சியினர் தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்து வருகின்றனர். களமும் இருமுனை போட்டியாக இருப்பதால் அதிமுக கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் வேட்பாளர் டாக்டர் சரவணனை முன்னிறுத்தி ஈடுபட்டு வருகின்றனர். மதுரை டாக்டரின் மருத்துவ சேவை ஓட்டு வங்கியாக பிரதிபலிக்குமா? என்பதை ஜூன் 4 ஆம் தேதி தான் பதில் சொல்லும்.

Advertisment

மதுரை மக்களவை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் அரசியல் கடந்து தொண்டு நிறுவனம் தொடங்கி மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து, டாக்டர் சரவணனின் மருத்துவ சேவையை, அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடையே கொண்டு சென்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியைகவர்ந்த வேட்பாளர் டாக்டர் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.