கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமித்ஷா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வேலூர் தேர்தல் தோல்வி, அதிமுக-பாஜக கூட்டணி, பாமகவின் செல்வாக்கு குறித்தெல்லாம் விசாரித்திருக்கிறார் அமீத்ஷா. இதற்கெல்லாம் விளக்கமளித்த எடப்பாடி, தனது வெளிநாடு பயணம் குறித்து பேசியிருக்கிறார்.

Advertisment

ops-eps-admk

Advertisment

இதற்கெல்லாம் விளக்கமளித்த எடப்பாடி, தனது வெளிநாடு பயணம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது, தனது வெளிநாட்டு பயணத்தின்போது தன் துறைப் பொறுப்புகளை ஓ.பி.எஸ்.சிடம் ஒப்படைக்க விரும்பவில்லை. அவர் தந்திரமானவர் என்று கூறியிருக்கிறார். அப்போது வந்த ஓ.பி.எஸ்., என்னை டம்மியாகவே வச்சிக்கப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. தன் பொறுப்பை இன்னொரு அமைச்சரிடம் கொடுத்து, ஏனைய அமைச்சர்கள் முன்பு என் இமேஜை எடப்பாடி சரிக்க நினைக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வம் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டடிருக்கிறது. அமித்ஷாதான் அமைதிப்படுத்தியிருக்கிறார். அப்போது, உங்கள் வசம் உள்ள பொறுப்புகள் அனைத்தையும் துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் ஒப்படைத்து விடுங்கள் என அமீத்ஷா அட்வைஸ் செய்ய, அவரிடம் ஒப்படைக்க தனக்கு விருப்பமில்லை. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் கவனித்துக்கொள்வார்கள் என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. துணை முதல்வருக்கு உரிய மரியாதையை கொடுத்தே ஆகணும் என்று அமித்ஷா கறார் குரலில் சொல்லியிருக்கிறார்.