Advertisment

ஓபிஎஸ் தம்பியின் பதவி பறிப்பு...அமைச்சர்களின் சதி வேலை...கடுப்பில் ஓபிஎஸ்!

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது மதுரை ஐகோர்ட். ஓ.ராஜாவின் இந்த பதவிப் பறிப்புக்குப் பின்னால் அமைச்சர்களின் சதி இருப்பது அம்பலமாகியுள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் அரசியலில் குதித்த ஓ.ராஜா, அத்தேர்தலில் வெற்றி பெற்று பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் ஆனார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த ரோசி நகர் தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, மதுரை ஆவின் தலைவர் ஆனார்.

Advertisment

admk

இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி 110 விதிமுறையின்படி தேனி, தர்மபுரி, கரூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 6 பால் உற்பத்தி சங்கங்களை பிரித்து தனி யூனியனாக செயல்படும்' என முதல்வர் அரசு ஆணை வெளியிட்டார். அதனால், மதுரை ஆவினிலிருந்து தேனி மாவட்டம் ஆவின் தனியாக பிரிக்கப்பட்டது. தேனி ஆவின் தலைவராக ராஜாவும், துணைத் தலைவராக செல்லமுத்து உட்பட 17 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர். இந்த இடைக்கால குழு தேர்வு செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. சங்கத்துக்கு தேர்தல் நடத்தி, வெளிப்படையாக உறுப்பினர்கள், தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதுவரை இடைக்கால குழு செயல்பட தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தலைவர் அமாவாசை தொடர்ந்த வழக்கில், ஓ.ராஜா உள்பட 17 பேர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள் சிவஞானம், தாரணி.

Advertisment

admk

இது குறித்து அமாவாசை, போலியான ரிக்கார்டுகளை தயார் செய்துதான் ரோசி நகர் தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ராஜா. அதை ரத்துசெய்ய வேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அது நிலுவையில் இருக்கும்போதே, அண்ணன் ஓ.பி.எஸ். துணைமுதல்வராக இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, தேனி ஆவின் தலைவராகிவிட்டார். ஆதாரங்களுடன் கோர்ட்டில் சமர்ப்பித்ததால்தான் ராஜா தலைவராக செயல்பட தடை விதித்திருக்கிறது' என்று ராஜா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

ராஜா விவகாரம் குறித்து மாவட்ட பொறுப்பில் உள்ள சில ர.ர.க்களிடம் பேசியபோது, ‘மதுரையில் ஓ.ராஜா கால் வைக்கக்கூடாது என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மூவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மதுரை ஆவின் தலைவர் ஆனதோடு அல்லாமல் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே மதுரை ஆவினில் உள்ள 60-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கணிசமான தொகையைப் பார்த்து வசூல்ராஜா ஆனதால் மூன்று அமைச்சர்களும் டென்ஷனின் உச்சத்திற்கே போனார்கள். அவர்கள் மூவரும் எடப்பாடியிடம் பொங்கியதால்தான், மதுரையில் இருந்து தேனி பிரிக்கப்பட்டு அதற்கு தலைவர் ஆக்கப்பட்டார் ராஜா.

மதுரை பதவியை பறித்த அமைச்சர்களுக்கு எதிராக, மாநில அளவில் பதவியை பிடித்து காட்டுகிறேன் என்று மார்தட்டியுள்ளார் ராஜா. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மூலம் இம்மாதம் இறுதிக்குள் 23 யூனியனில் இருந்து மாநில தலைவர் பதவியை நியமிக்க இருக்கிறார்கள். இதில் தலைவராகிவிட்டால் சைரன் வண்டியில் பவனி வரலாம் என்று முட்டிமோதிக்கொண்டிருக்கிறார் ராஜா. இந்த விசயம் தெரிந்ததும், ஆவின் மாநிலத் தலைவர் பதவிக்கு வரக்கூடாது என்று சைலன்டாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள் மூவரும் என்கிறார்கள்.

அமாவாசை சொல்லும் குற்றச்சாட்டுகள் குறித்தும், அமைச்சர்களின் சதி குறித்தும் கேட்க ஓ.ராஜாவை தொடர்புகொண்டபோது, "கோர்ட் தடை விதித்ததை பற்றி கோர்ட்டில் தான் கேட்க வேண்டும். என்கிட்ட எதுக்கு கேக்குறீங்க?''’என்று கேட்டவாறு அதற்குமேல் பேச விரும்பாமல் லைனை துண்டித்துவிட்டார்.

chairman aavin raja minister eps ops admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe