Opposition leader issue with ops and eps

2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் நடந்த உட்கட்சி விவகாரத்தில் ஓ.பி.எஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் சட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம், இ.பி.எஸ்.-ஐ அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரித்தது.

Advertisment

இந்நிலையில், 2022 ஜூலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கும் ஓ.பி.எஸ்.ஸை நீக்கிவிட்டு, புதிய துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமித்தார் எடப்பாடி. மேலும், அவருக்கு எதிர் கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஒதுக்கும்படி சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்ததோடு, அவருக்கு இதுவரை 5 கடிதங்கள் வரை எழுதியிருக்கிறது எடப்பாடி தரப்பு. எனினும் எதுவும் நடக்கவில்லை.

Advertisment

Opposition leader issue with ops and eps

எனவே, தனது கோரிக்கையை சபாநாயகர் ஏற்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 27 ஆம் தேதி எடப்பாடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு எப்படிப் போகும் என்று, தேர்தல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களிடம் விசாரித்தபோது, எது குறித்தும் சபாநாயகருக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்குக் கிடையாது. அதேசமயம் ஒரு விவகாரம் குறித்து சபாநாயகர் முடிவு எடுத்துவிட்டால், அந்த முடிவை எதிர்த்து ஒரு வழக்கு நீதிமன்றத்துக்கு வருமாயின் அந்த முடிவு சரியா? தவறா? என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும் என்றார்கள். எனவே, எடப்பாடி தரப்பின் மனு தள்ளுபடி ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது.