கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" என்ற பெயரில் ஈரானிய ராணுவம், அணுசக்தி மற்றும் தலைமைத்துவ தளங்களை குறிவைத்து மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த உயர்மட்டத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல உயர் இராணுவ மற்றும் அரசியல் பிரமுகர்களின் இறந்துள்ளது பரபரப்பான சூழலை மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நட்பு நாடுகளான துபாய் பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் ஈரான் இஸ்ரேல் போர் சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
51
'Only one and a half months left; are we afraid of America or have we surrendered?' - Haleem, who braved the new storm Photograph: (INDIA)
ஈரானுடைய நீர்மூழ்கி கப்பல் இந்தியா அருகில் அமெரிக்காவால் தாக்கப்பட்டுள்ளது. எப்படி பார்க்கிறீர்கள்?
Advertisment
இது நம்ம பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் இல்லையா? உள்துறை அமைச்சகம் பதில் சொல்லியிருக்க வேண்டாமா? நீர்மூழ்கி கப்பல் எங்களுடைய அனுமதியுடன் தான் நிற்கிறது. அது சர்வதேச எல்லையில் இருப்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்று எந்த அறிக்கையாவது இன்னைக்கு உள்துறை அமைச்சகம் கொடுத்திருக்கிறதா?  அமித்ஷா வாயை திறக்கவில்லை. எந்த அமைச்சர்களும் வாயை திறக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு அச்சுறுத்தல் தென்னிந்திய பகுதியில் இருப்பது நமக்கு அதிர்ச்சி. எப்போதுமே நமக்கு எல்லைப் பிரச்சனை  என்பது வட இந்தியாவில் இருக்கும், பாகிஸ்தான் பார்டரில் இருக்கும், சைனா பார்டரில் இருக்கும். பங்களாதேஷ் பார்டரில் இருக்கும். இலங்கையின் பார்டரில்  நமக்கு பிரச்சனை இருக்காது. தமிழக மீனவர்கள் தான் போய் மாட்டிக் கொள்வார்கள். இலங்கை நேவியோடுதான் நம்ம சண்டை போடுவோம். சில நேரம் சண்டையும் போட மாட்டோம். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை பிடித்துக்கொண்டு போயிவிட்டார்கள்  என்போம். இது மட்டும் தான் நடக்கும்.
நாம் இதுவரை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் தென்னிந்திய பகுதி பாதுகாப்பானது. வங்காள விரிகுடாவும், தென்னிந்திய கடலும், அரபிக் கடலும் பாதுகாப்பானது. இங்கு எந்த பிரச்சனையும் இல்லை. பக்கத்தில் இலங்கை இருக்கிறது. நமக்கு அனுசரணையான நாடு. ராமேஸ்வரத்தில் எடுத்துகொண்டால் இந்திய கடற்படை கப்பல் குறைவு. வட இந்திய அளவுக்கு கற்படை கப்பல்கள் இல்லை. கல்கத்தா, விசாகப்பட்டினம், கொச்சின் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அளவுக்கு இங்கு கடற்படை கப்பல்கள் இல்லை. காரணம் இங்க ஆபத்துகள் கிடையாது.  ஆனால் அமெரிக்காவுடைய நீர்மூழ்கிக் கப்பல் எனும் இவ்வளவு பெரிய ஆபத்து உள்ளே இருந்துள்ளதே. இதைப்பற்றி நாம் ஏன் வாயை திறக்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் நம்மிடம் அனுமதி கேட்காமல் கூட ஏவுகணை மூலமாக தாக்கி அடிச்சிருக்காங்க. ஒரு யுத்தம் நடந்திருக்கிறது. ஒரு மிகப்பெரிய யுத்தம். நாம்  என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறோம் ஈரானில் ஒரு யுத்தம் நடக்கிறது. கல்ப் நாடுகளில் நடக்கிறது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் சண்டை நடக்கிறது. அங்கு இஸ்ரேலுக்கு லெபனானுக்கு சண்டை நடந்து கொண்டு இருக்கிறது. தூரமாக இருக்கும் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறோம் அல்லவா? அதற்கு இன்னைக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். ட்ரம்ப் நம்மிடம் (இந்தியாவிடம்) கேட்காமல் எப்படி அனுமதி கொடுத்தார். ஒரு வார்த்தை சொல்லி இருக்கிறாரா? இதில் இந்தியாவுக்கு ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு. 40க்கு மேற்பட்ட நாட்டு கப்பல்கள் நம்மை நம்பி தான் வந்தார்கள். நம்முடைய நிகழ்ச்சிக்கு வந்தவர்கள். திரும்பி நாட்டுக்கு போகும் வரைக்கும் நமக்கு ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கா இல்லையா? ஒரு நிகழ்ச்சி நடக்கிறது அல்லது ஒரு கூட்டம் நடக்கிறது. தலைவர் என்ன சொல்லுவார் மேடையில 'நிகழ்ச்சிக்கு எல்லாம் வந்திருக்கீங்க பாதுகாப்பாக வீட்டுக்கு போங்க. எப்படி வந்தீங்களோ அப்படி போங்க. விபத்து ஏற்படுத்தி விடக்கூடாது. சேதாரம் வந்துவிடக்கூடாது. எல்லாம் காலத்தோடு சேர்ந்து போய் வீட்ல போய் சேர வேண்டும்' என்று சொல்வார். இது என்ன மாதிரியான  ரெஸ்பான்சிபிலிட்டி, அக்கரை. ஏனென்றால் நம்மை நம்பி வந்திருக்காங்க. அது ஈரானாக இருக்கட்டும் யாராக இருக்கட்டும். திரும்பி போற வரைக்கும் நமக்கு ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கா இல்லையா?
இன்னைக்கும் ஹார்மோஸ் மூலம் 140 கப்பல்கள் சிக்கியிருக்கின்றன. 140க்கு மேற்பட்ட கப்பல்கள். அதில் 40 கப்பல்கள் இந்திய கப்பல்கள் என்று சொல்கிறார்கள். அதைப்பற்றி  நம்ம யாருமே இன்னும் பேசவில்லை. நமக்கு ஒவ்வொரு நாளும் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு ஹார்மோஸ் மூலம் ஈரானில் இருந்து வருகிறது. இன்னைக்கு அது தடைபட்டிருக்கிறது. நம்முடைய இந்தியாவில் கையிருப்பு ஒரு 10 கோடி பேரரல் தான். இன்னும் ஒரு ஒன்றரை மாதம் தாக்கு பிடிக்கும். இன்னும் இந்த யுத்தம் ஒன்றை மாசம் தொடர்ச்சியாக நடந்தால் நம் நிலைமை என்ன? இதையெல்லாம் பார்க்கும் பொழுது நாம் அமெரிக்காவிடம் அச்சப்படுகிறோமா அல்லது அமெரிக்காவிடம் அடிபணிந்து போய்விட்டோமா? என்ற கேள்வி வருகிறது.