ADVERTISEMENT

விண்ணைத் தாண்டிச் சென்றவர்!

01:29 PM Mar 17, 2018 | raja@nakkheeran.in

மார்ச் 17 - கல்பனா சாவ்லா பிறந்த நாள்

ADVERTISEMENT

விண்வெளியில் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய நேரத்தில் 21ஆம் நூற்றாண்டில் பெண்களும் விண்ணை ஆள முடியும் என சாதித்துக்காட்டியவர் கல்பனா சாவ்லா.

இந்தியாவின் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்கிற இடத்தில் 1962 மார்ச் 17ந்தேதி பிறந்தவர் கல்பனா சாவ்லா. இவரது தந்தை பனாரஸ் லால் சாவ்லா, தாய் சன்யோகிதா தேவி. வீட்டில் கல்பனா சாவ்லா தான் கடைக்குட்டி. அவருக்கு முன்பே பிறந்தவர்கள் சுனிதா, தீபா என இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என ஒரு சகோதரன்.

கர்னலில் இருந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் தான் பள்ளிக்கல்வியை கற்று முடித்தார். பின்னர் சண்டிகரில் இருந்த பஞ்சாப் நேஷ்னல் கல்லூரியில் அக்காலத்தில் பிரபலமாகாத, பெண்கள் யாரும் விருப்பி படிக்காத ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவில் சேர்ந்தார். சண்டிகரில் செயல்பட்டு வந்த விமான பயிற்சி மையத்தில் முதலில் இணைந்தது சஞ்சய். தங்கையின் விமான ஓட்டுநர் ஆசையை அறிந்த அண்ணன் தங்கை கல்பனாவை அந்த மையத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டார். அதில் பயிற்சி எடுத்துக்கொண்டே இளங்கலை பொறியியல் படிப்பை சண்டிகரில் படித்து முடித்தவர், முதுநிலை பொறியியல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.

ADVERTISEMENT



அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள அர்லிங்டோனின் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பாடப்பிரிவை தேர்வு செய்து இணைந்து படிக்கதுவங்கினார். அங்கு தனது இந்திய நண்பரான ராஜ், அமெரிக்காவில் புகழ்பெற்ற விமான பயிற்றுநராக விளங்கிய ஜீன் ஹாரிசன் என்பரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியை அமெரிக்காவில் கற்றுத் தந்தார். கல்பனாவிடமிருந்த கூச்ச சுபாவத்தைப் போக்கவும், உயரத்தில் இருந்து குதிப்பதால் ஏற்படும் பயத்தை போக்கவும் ஸ்கூபா டைவிங்கை கற்று தந்தார். அவரின் செயல்பாடு கல்பனாவை கவர்ந்தது. கல்பனாவின் பேச்சு, அழகு, திறமை ஜீன்னை கவர்ந்தது. இருவரும் காதலிக்கத் துவங்கினர். இதனை கல்பனாவின் குடும்பம் கடுமையாக எதிர்த்தது. எதிர்ப்பை புறந்தள்ளி 1983ல் விமான பயிற்சியாளரான ஜீன் ஹாரிசனை திருமணம் செய்துக்கொண்டார். அந்த வகையில் தொழில்ரீதியாக மட்டுமல்ல, காதலுக்காகவும் விண்ணைத் தாண்டியவர் கல்பனா சாவ்லா.

திருமணத்துக்குப் பின் முனைவர் பட்டத்தை 1988ல் கொலடரா பல்கலைக்கழகத்தில் படித்து பெற்றார். படித்து முடித்ததும் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தான் பணிக்கு சேர்ந்தார். அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்த நிலையில் அமெரிக்க அரசின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சிக்கு விளம்பரம் செய்தது. அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் கல்பனாவும் ஒருவர். அங்கு வைக்கப்பட்ட தகுதித் தேர்வில் கல்பனாவும் கலந்துக்கொண்டார். இறுதியில் 6 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதில் கல்பனாவும் ஒருவர். நாசாவிற்குள் நுழைந்தார் இந்திய பெண்ணான கல்பனா.

1988ல் நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்து அதன் துணை தலைவராக உயர்ந்தார். அங்கு ஆராய்ச்சி செய்துக்கொண்டே விமானம் மற்றும் கிளைடர்களை இயக்கும் பயிற்சியில் ஈடுப்பட்டு சிறந்த விமானியாக தகுதி சான்றிதழ் பெற்றார்.

1995ல் அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்ப முயன்ற விண்வெளி வீரர்கள் குழுவில் கல்பனாவை இணைத்தது நாசா. அங்கு பயிற்சி பெற்ற கல்பனா சாவ்லா, கொலம்பியா விண்வெளி ஊர்த்தியான எஸ்.டி.எஸ்-87 என பெயரிடப்பட்ட விண்கலத்தில் பயணத்தை மேற்க்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 6 வீரர்களில் கல்பனா சாவ்லாவும் ஒருவர். கொலம்பியா விண்வெளி ஓடம் என்பது நாசாவின் விண்கலம் ஆகும். 1981 முதல் இந்த விண்கலம் மூலம் பூமியில் இருந்து விண்வெளி விஞ்ஞானிகள் வான்வெளிக்கு சென்று வான்வெளியில் உலாவரும் செயற்கைகோள்களில் ஏற்பட்டுள்ள தவறுகளை சரிசெய்துவந்தது.



1997 நவம்பர் 19ந்தேதி கல்பனாசாவ்லாவின் முதல் பயணம் தொடங்கியது. முதல் பயணத்தில் 372 மணி நேரம் சக வீரர்களுடன் விண்வெளியில் பறந்து பூமியை சுற்றி வந்தார். வாண்வெளிக்கு சென்று வந்ததன் மூலம் இந்தியா வம்வாவளியை சேர்ந்த முதல் பெண் வான்வெளி வீரங்கனை என்ற பெயரை பெற்றார்.

கொலம்பியா விண்கலம் 28வது முறையாக 2003ல் வான்வெளிக்கு சென்றது. 2003 ஜனவரி 16ந்தேதி இரண்டாவது முறையாக கொலம்பியா விண்கலம், அமெரிக்காவின் கென்னடி வான்வெளி நிலையத்தில் இருந்து கொலம்பியா எஸ்.டி.எஸ் -107 விண்கலம் இரண்டாவது பயணத்தை தொடங்கியது. அந்த குழுவில் இரண்டாவது முறையாக 7 பேருடன் ஒருவராக கல்பனா சாவ்லா சென்றார். அதே ஆண்டு பிப்ரவரி 1ந்தேதி தனது பணியை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பிக்கொண்டு இருந்தது. பூமியை வந்தடைய 16 நிமிடம் இருந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்கு நேர் எதிரே வான்வெளியில் வெடித்து சிதறியது. அதில் இருந்த கல்பனா சாவ்லா உட்பட 7 வீரர்கள் மரணித்தனர். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கல்பனா சாவ்லா உட்பட அந்த விண்கல வெடிப்பில் உயிரிழந்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்கா பல வரலாற்று சின்னங்களுக்கும், பல்கலைகழகங்களுக்கு கல்பனா பெயரை சூட்டியது. கல்பனா உயிரோடு இருந்தபோதே வான்வெளியில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோள்க்கு கல்பனாவின் பெயரை சூட்டியது நாசா. தமிழகம், கர்நாடகா உட்பட இந்தியா அரசு கல்பனா சாவ்லா பெயரில் சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுவருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT