Advertisment

"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்

டாக்டர் ஆகவேண்டும் என்பது சங்கீதாவின் ஆசை. நீட் எழுதினார், தேர்ச்சி பெறவில்லை.

Advertisment

மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு உரிய செவிலியர் கல்லூரி, எலியார்பத்தியில் இயங்குகிறது. அதற்கு அருகில்தான் சங்கீதாவின் வீடு.

Advertisment

apollo-studentஅந்தக் கல்லூரியில் நர்ஸிங் படிப்பிற்காக விண்ணப்பித்தார். முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றதால் உடனே வாய்ப்பு கிடைத்தது. ஒரு லட்சத்து 60 ஆயிரம் கட்டச் சொன்னார்கள். தையல் தொழிலாளியான அய்யனார்-சேதுரத்தி மகளான சங்கீதாவிடம் அவ்வளவு பணம் ஏது? சொந்த பந்தங்களிடம் கடன் வாங்கி கட்டினார்.

27-8-19 அன்று அப்பல்லோ நர்ஸிங் கல்லூரியில் இருந்து சங்கீதாவின் அம்மாவுக்கு போன். ""உங்க பொண்ணு மாடியில இருந்து குதித்துவிட்டாள். உடனே வாங்க...''

அப்பல்லோ தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் சங்கீதா. முதுகுத்தண்டுவடமும், கால்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன; சிகிச்சை தொடர்ந்தது.

""கல்லூரி முதல்வரும் வகுப்பு ஆசிரியை கல்பனாவும் கொடுத்த டார்ச்சரால்தான் சங்கீதா தற்கொலைக்குத் துணிந்திருக்கிறாள். அப்பல்லோ கொடுத்து வந்த சிகிச்சையை நிறுத்தப்போவதாகச் சொல்கிறார்கள். சங்கீதா படுத்த படுக்கையாக இருக்கிறாள். அவளைத் தற்கொலைக்குத் தூண்டியவர்களைத் தண்டிக்க வேண்டும்'' என்று சங்கீதாவின் பெற்றோரும் உறவினர்களும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்கள்.

சங்கீதாவின் தாயாரை நாம் சந்தித்தோம்...

apollohospital

""வகுப்பு ஆசிரியை என் மகளுக்கு மட்டும் அதிக வேலை கொடுத்திருக்கிறார். அசைன்மென்ட் மார்க்கும் ஒழுங்கா போடல. என் மகளுக்கு அம்மை போட்டிருந்தது. ஒரு மாதம் லீவு போட்டிருந்தாள். இதையே காரணமா காட்டி டார்ச்சர் பண்ணீருக்காங்க. டிரைனிங் sangeethaஃபீஸ் கட்டலைனு திட்டியிருக்காங்க. கூடப்படிக்கிற பையன் ஒருத்தன் லவ் லெட்டர் எழுதி சங்கீதா பேக்ல சங்கீதாவுக்குத் தெரியாமலே வச்சிருக்கான். இதனால ஒழுக்கம்கெட்ட பொண்ணுனு பழி சுமத்தியிருக்காங்க'' கண்ணீருடன் சொன்னார் தாய் சேதுரத்தி.

அம்மா சொன்ன காரணங்களையே அப்பல்லோ தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற சங்கீதாவும் சொன்னார்.

ஆனால் அப்பல்லோ நர்ஸிங் கல்லூரி முதல்வர் ஹெலன்பிரிட்டோ நம்மிடம், ""சங்கீதாவுக்கு எங்க ஹாஸ்டல் கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை போலும். வீட்டில் என்ன பிரச்சினையோ? இந்த லட்சணத்தில் காதல் வேறு. முழு சிகிச்சையும் கொடுத்திருக்கிறோம். இப்ப வீட்டுக்குக் கூட்டிச் செல்லுங்கள் என்றால் நஷ்டஈடு வேண்டுமாம்... மனிதாபிமானத்திற்கும் அளவுண்டு'' சங்கடப்பட்டார்; சலித்துக்கொண்டார். அப்பல்லோ என்றாலே "அம்மா'டியோவ்!

Apollo Hospital
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe