Skip to main content

"நேருவால் மட்டுமல்ல... ஆர்எஸ்எஸ் அமைப்பை யாராலும் எதுவும் செய்ய முடியாது.." - எல்.முருகன் தடாலடி

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

 

ரகத

 

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக காவல்துறையினர் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " இன்று இந்தியா 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி  முடிந்துள்ளது. விரைவில் 100வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் அடைய வேண்டிய வளர்ச்சி தொடர்பாக நாம் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளோம். இதன்படியே இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 

 


இதில் நாம் எந்த ஒரு சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை, நாட்டு மக்களின் நலம் சார்ந்த கொள்கைகளை, கோட்பாடுகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக பாஜகவின் இந்த எட்டு ஆண்டு ஆட்சியில் தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். சுகாதாரத் திட்டங்களுக்கு நாம் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வருகிறோம். இன்றைக்கு நாட்டில் யார் வீட்டிலும் கழிவறை இல்லாமல் இல்லை என்ற நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இதற்காகக் கடுமையான கஷ்டங்களை இந்த அரசு எதிர்கொண்டது. மக்களுக்காக எந்த ஒரு கடினமான நிலையைக் கூட நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இன்றைக்கு காந்தியடிகள் பிறந்தநாள். அவரின் எண்ணத்தின்படியே இந்த ஆட்சி நல்லாட்சியாகச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் கர்ம வீரர் காமராஜரின் எண்ணப்படியே எங்களின் நற்பயணத்தை அமைத்துக்கொண்டுள்ளோம். அவரின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இன்றைய வளர்ச்சி திட்டங்களுக்கு காமராஜர் அன்றே முன்னெடுப்புக்களைச் செய்திருந்தார். பெருவாரியான அணைகளைக் கட்டி விவசாயம் செழிக்க அவர் பாடுபட்டார். இதற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். அதற்காகவே நாம் அவரை கொண்டாடி வருகிறோம். 

 

இன்று வந்தவுடனேயே ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடர்பாகவும், அந்த அமைப்பு நடத்தவுள்ள பேரணி தொடர்பாகவும் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அது நேற்று முளைத்த அமைப்பு அல்ல. 1925ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு. இன்னும் சில வருடங்களில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கின்ற ஒரு அமைப்பு. இந்த பெருமைக்கு காரணமான ஒரு உன்னதமான அமைப்பு ஆர்எஸ்எஸ். அதன் பெருமைகளை யார் நினைத்தாலும் குலைக்க முடியாது. எத்தனையோ முறை இந்த அமைப்பை சிதைக்க முனைத்திருக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து ஆர்எஸ்எஸ் இயக்கம் மீண்டு வந்து, மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக நேருவே அதனை தடை செய்ய முயன்றார், ஆனால் அதிலிருந்து மீண்ட இயக்கம்தான் இந்த அமைப்பு. எனவே யாராலும் இந்த அமைப்பை எதுவும் செய்துவிட முடியாது. நாங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், சட்டத்தின் ஆட்சியை விரும்புகிறவர்கள். எனவே சட்டம் என்ன உரிமையைக் கொடுத்துள்ளதோ அதன்படியே எங்களின் செயல்பாடுகள் இருக்கும்" என்றார். 


 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.