பரபரப்பை கூட்டி இருக்கும் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு கட்ட வாக்குப் பதிவுகளும் நிறைவடைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மீதான சர்ச்சை, ராகுல் எழுப்பிய வாக்கு திருட்டு சர்ச்சை என பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 6ஆம் தேதி 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி முடிந்தது.
மீதமுள்ள 122 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரமும் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று 122 சட்டமன்றத் தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது. முதற்கட்ட வாக்குப் பதிவின் போது 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.14 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இரண்டாம் கட்டத்தில் வாக்களிப்பு சதவிகிதம் கூடுதலாகி உள்ளது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெருமான்மைக்கு 121 இடங்கள் தேவை என்ற நிலையில் பீகார் தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் முடிவு கணிப்புகள் வெளியாகியுள்ளது.
அதன்படி 'TIMES NOW ' வெளியிட்டுள்ள கணிப்பின்படி பாஜகவின் என்டிஏ கூட்டணி 142-145 இடங்களும் இண்டியா கூட்டணி 89-91 இடங்களும் மற்றவை 0 இடத்தை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
'MATRIZE ' வெளியிட்டுள்ள கணிப்பின்படி பாஜகவின் என்டிஏ கூட்டணி 147-167இடங்களும், இண்டியா கூட்டணி 70-90 இடங்களும்,ஜன் சுராஜ் 0-1 இடத்திலும், மற்றவை 0 இடத்தை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
'PEOPLES PULSE' வெளியிட்டுள்ள கணிப்பின்படி பாஜகவின் என்டிஏ கூட்டணி133-159 இடங்களும், இண்டியா கூட்டணி 75-101 இடங்களும், ஜன் சுராஜ் 0-5 இடத்திலும், மற்றவை 0 இடத்தை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
'JVC' வெளியிட்டுள்ள கணிப்பின்படி பாஜகவின் என்டிஏ கூட்டணி 135-150 இடங்களும், இண்டியா கூட்டணி 88-103 இடங்களும், ஜன் சுராஜ் 0-1 இடத்திலும், மற்றவை 3-6 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
PEOPLE'S INISIGHT' வெளியிட்டுள்ள கணிப்பின்படி பாஜகவின் என்டிஏ கூட்டணி 133-148 இடங்களும், இண்டியா கூட்டணி 87-102 இடங்களும், ஜன் சுராஜ்0-2 இடத்திலும், மற்றவை 3-6 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
'NDTV' வெளியிட்டுள்ள கணிப்பின்படி பாஜகவின் என்டிஏ கூட்டணி 133-159 இடங்களும், இண்டியா கூட்டணி 75-101 இடங்களும், ஜன் சுராஜ் 0-5 இடங்களிலும், மற்றவை 2-8 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
'P-MARQ' வெளியிட்டுள்ள கணிப்பின்படி பாஜகவின் என்டிஏ கூட்டணி 142-162 இடங்களும், இண்டியா கூட்டணி 80-97 இடங்களும், ஜன் சுராஜ் 1-4 இடங்களிலும், மற்றவை 0-3 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/media_files/2025/11/11/012-2025-11-11-19-05-18.jpg)