Advertisment

எங்களுக்கு என்ன நடக்கும்னு தெரியாது... நித்தி யாரையும் விட்டு வைக்க மாட்டார்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

நித்தியின் ஆசிரமத்தில் கற்பழிப்புகள் மட்டுமல்ல, கொலைகளும் சகஜமாக நடக்கும். நித்தியை எதிர்ப்பவர்களை உயிருடன் நித்தி விட்டு வைக்க மாட்டார் என்பதுதான் ஒரு காலத்தில் நித்திக்கு நெருக்கமாக இருந்தவர்கள் வெளியே வந்தவுடன் சொல்லும் அதிர்ச்சிகரமான தகவல். அந்த வகையில் நித்தியின் மீது கொலைவழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் பார்வையில் இருக்கிறது. அந்த வரிசையில், "என்னுடைய உயிருக்கு ஆபத்து' என ஒரு புது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisment

nithy

அந்த வீடியோவில் பேசியிருப்பவர் மா நித்திய தத்வ பிரியானந்தா என்கிற பெண். "என் பெண்களை நித்தி கடத்திவிட்டார்' என குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ள ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகள்தான் இவர்.

nithy

Advertisment

"நித்தியானந்தம்... என் பேர் மா நித்திய தத்வ பிரியானந்தா. நிறைய பேர் வந்து எனக்கு என்ன, ஏ அழற, என்ன ஆச்சு... அப்படின்னு சொல்லிட்டு தமிழ்ல மெசேஜ் போட்டு இருந்தீங்க... (இடையில் வீடியோவில் அழுகிறார்) நா இப்ப என்ன சிச்சுவேஷன்ல மாட்டிண்டுருக்கேன் என்னென்ன நடந்துண்டுருக்கு அப்படிங்கறது உங்களுக்கு சொல்றதுக்காக வந்தேன்.

ஒண்ணே ஒண்ணு சொல்லணும் பர்ஸ்ட்... (அழுகிறார் வீடியோ கட்டாகிறது... திரும்ப பேசுகிறார்) லிட்ரலாவே லைஃப் திரட்டனிங்கான ஒரு சிட்சுவேஷன்ல இருக்கோம். அப்படின்னா (மேலே வெறித்துப் பார்க்கிறார்) எப்ப எங்களுக்கு ஆபத்து வரும் அப்படின்றது தெரியாது? அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல மாட்டிண்டு இருக்கோம்''. (இதையே ஆங்கிலத்தில் மீண்டும் பேசுகிறார்).

I will tell simultaneously in English also. I am struck in a life threatening situation. I don't know whether I am going to be alive to make the next video...

(தொடர்ந்து தமிழில் பேசுகிறார்...)

எனக்கு கண்டிப்பாகத் தெரியாது அடுத்த வீடியோ பண்றவரைக்கும் இருப்பேனான்ட்டு... எனக்கு அந்தளவுக்கு பயமா இருக்கு...'' இவர் தனது முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிடவில்லை. வேறொரு நண்பருக்கு அனுப்பி இந்த வீடியோவை வெளியிட வைத்திருக்கிறார். வீடியோவின் துவக்கத்தில் வழக்கமாக சொல்வது போல் "நித்தியானந்தம்' என சொல்லி ஆரம்பிக்கிறார். இவர் பேசிய வீடியோ நித்திக்கு தொடர்பேயில்லாத பலரது பக்கங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.

nithy

இந்த வீடியோவை பார்த்து அந்த பெண்ணின் அப்பாவான ஜனார்த்தன சர்மா கதறிவிட்டார். அவர் நித்திக்கு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த பலருக்கு இந்த வீடியோவை அனுப்பி அவர்களது கருத்துகளை கேட்டார். ஏற்கனவே சங்கீதா என்கிற பெண்ணை பிடதி ஆசிரமத்திலேயே கொலை செய்து அவரது மரணம் இயற்கையான மரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையும் பெற்றவர் நித்தி.

nithy

சங்கீதாவின் தாயார் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு வாங்கி பிரேத பரிசோதனை செய்யும் போது, சங்கீதாவின் மூளை இருந்த இடத்திலும்; இதயம், நுரையீரல் இருந்த இடத்திலும் கந்தை துணிகள் இருந்ததை பார்த்த சங்கீதாவின் தாயார் மயக்கமடைந்து விட்டார். அது நடந்தது பெங்களூரில். இன்று நித்தி இருப்பது வெளிநாட்டில். இந்திய சட்டம் என்னை ஒன்றும் செய்யாது' என சவால் விடும் நித்தி மா நித்திய தத்துவ பிரியானந்தாவையும் அவரது சகோதரியையும் அவர்களை நித்தி கடத்திக் கொண்டு போய்விட்டார் என வழக்கு போட்டார் என்பதற்காக கொலை செய்தால் என்ன ஆவது? எதற்காக இந்த வீடியோ இப்பொழுது வருகிறது. இது புதிய வீடியோவா? பழைய வீடியோவா? என கேட்டு வருத்தத்துடன் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதுபற்றி ஜனார்த்தன சர்மாவின் கருத்தை அறிய அவரை தொடர்பு கொண்டோம். சோகமாக இருக்கும் அவர் நம்மிடம் பேச மறுத்துவிட்டார்.

ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் அடிக்கடி வீடியோக்களில் பேசக் கூடியவர்கள். ஜனார்த்தன சர்மா "எனது மகள்களை நித்தி கடத்தி விட்டார்' என புகார் கொடுத்தபோது...

"எனது தந்தையின் புகார் அடிப்படை ஆதாரமற்ற புகார். எங்களை கடத்தி புஷ்பக் நகர் என்ற இடத்தில் இரண்டு வாரம் அடைத்து வைத்தார் நித்தி என புகார் தரப்பட்டது. புஷ்பக் நகரில் உள்ள வீட் டுக்கு நாங்கள் விடு முறையில் சென்றோம். அங்கு எங்களை சந்திக்க வருவதாக சொன்ன ஜனார்த்தன சர்மா வரவில்லை. நாங்கள் அங்கிருந்தவர்களிடம் சகஜமாக பேசிவிட்டு வந்தோம். அதன்பிறகு நாங்கள் கடத்தப்பட்டதாக என் தந்தை பொய் புகார் கொடுத்திருக்கிறார்'' என வீடியோ பேட்டி ஒன்றில் கூறினார்கள்.

ஜனார்த்தன சர்மா தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்த குஜராத் உயர்நீதி மன்றத்தில், நாங்கள் மேற்கத்திய தீவுகளில் இருக்கிறோம் என்றார்கள். அதன்பின் "அமெரிக்கா பக்கத்தில் உள்ள ஒரு நாட்டில் இருக்கிறோம்' என கூற "அந்த நாட்டு தூதரகத்தில் ஆஜராகுங்கள்' என கோர்ட்டு உத்தரவிட்டது. "நித்தியும் குற்றவாளியாகியுள்ள இந்த வழக்கை வாபஸ் பெற வைக்க நித்தி அவரது கட்டுப்பாட்டில் உள்ள ஜனார்த்தன சர்மாவின் மகளை இப்படி பேச வைத்துள்ளாரா? என்கிற சந்தேகம் இருக்கிறது' என்கிறார்கள் கர்நாடக போலீசார்.

இந்த பெண் 14 வயது மைனராக இருக்கும் போதே நித்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்பதால் போக்சோ சட்டத்தில் நித்தியை கைது செய்ய வேண்டும் என ஜனார்த்தன சர்மா புகார் கொடுத்துள்ளார். வழக்கு, விசாரணை, சாட்சியம், வாக்குமூலம் எனத் தொடர்ந்தால் மேலும் மேலும் சிக்கலாகும் என்பதால், இந்த பெண்ணைக் கொலை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள். நித்தி ஆசிரமத்தின் மர்மங்கள் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த புதிய வீடியோ மேலும் பல சர்ச்சைகளுக்கு வழி வகுத்திருக்கிறது. நித்தி வழக்கு அதிபயங்கரமான கிளைமேக்ஸை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

issues Young woman Investigation complaint nithyananda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe