Skip to main content

நான் தான் பேசுறேண்ணா... உங்ககிட்ட பெரிய ஸாரி கேட்கிறேன்...நிர்மலாதேவி ஆடியோ வாய்ஸ்!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

நக்கீரனில் அம்பலமான ஆடியோ மூலம் ஆளுநர் மாளிகை வரை அதிரவைத்தவர் நிர்மலாதேவி. அவர் மீதான வழக்கு விசாரணை நடை பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், வாய்தா தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் அங்கிருந்து வெளியேறாமல், கடந்த திங்களன்று சாமியாடியும், தொடர்பின்றி பலவற்றைப் பேசியும் தன் மனஉளைச்சலை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அதற்கு முந்தைய வாய்தாக்களின்போது அவர் அப்படி இருந்ததில்லை. "வழக்கு பற்றி ஊடகங்களிடம் பேசக்கூடாது' என்பதே அவருக்கான ஜாமீன் நிபந்தனை என்ப தால், அதுபற்றி பேசாமல் இறுக்கமாக இருந்தவர் நிர்மலாதேவி. எனினும், ஒரு பெண்ணாகத் தன் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளத் தவறியதில்லை.
 

nirmaladevi



பல்வேறு சந்தர்ப்பங்களில் நிர்மலா தேவி நம்மிடம் பகிர்ந்துகொண்டதன் ஆடியோ தொகுப்பு இது. ""ஹலோ அண்ணா... நான்தான் பேசுறேண்ணா. உங்ககிட்ட பெரிய ஸாரி கேட்கிறேன். அஸ் எ லேடி... அன்னைக்கு இருந்த மனநிலைல நான் சஸ்பென்சன் ஆர்டர் வாங்கி.. பத்திரிக்கைல வர்றதுக்கு முன்னாடி... நீங்க கால் பண்ணுனீங்க. அதனால, நான் அப்ப பயந்தேன். காலேஜ் மேனேஜ்மெண்டுக்குத்தான் நான் ஃபர்ஸ்ட் ஆன்சர் பண்ணணும்; அப்படிங்கிற அந்த ஒரு எண்ணத்தினாலதான் அன்னைக்கு உங்ககிட்ட பேசல. இப்ப மனசைத் தேத்திக் கிட்டேன். ஒரு அண்ணா மட்டும்தான் என்கிட்ட பேசிக்கிட்டிருக்காங்க. அது மாதிரி லாயர்.. அவங்க ரெண்டு பேரையும் மீறிதான், நான் உங்ககூட இப்ப பேசிக்கிட்டிருக்கேன்.

 

nirmaladevi



சொந்தக்காரங்களே இப்படி அப் படின்னா.. என் வீட்டுக்காரர், குழந்தை களோட நிலைமை எப்படி இருக் கும்னு பாருங்க. கிட்டத்தட்ட குழந்தைகளைப் பார்த்து ஒண்ணே கால் வருஷம் ஆச்சு. ஒன்றரை வருஷம் ஆச்சு. இன்னும் ஒரு வார்த்தைகூட பேசல. கிட் டத்தட்ட ஒன்றரை மாசமாச்சு வெளில வந்து. அந்தக் குழந்தைங் களோட வாய்ஸைக்கூட இன்னும் நான் கேட்கல. நான் வெளிய வந்தவுடனே வீட்டுக்காரருக்குத் தான் போன் பண்ணுனேன். லேடி வாய்ஸ் வந்துச்சு. அது பொண்ணா இருக்கலாம். என் பொண்ணா இருக்கலாம்னு அப்படிங்கிறது இப்பத்தான் எனக்குத் தெரிய வருது. அந்த அளவுக்கு வாய்ஸே மறந்து போச்சு. ஒரு அம்மா வோட ஸ்தானத்துல எப்படி இருக்கும்? என்னோட நிலைமைல இருந்து யோசிச்சுப் பாருங்க.’’ என்னுடைய குடும்ப சூழ் நிலையிலிருந்து எல்லாத்தையும் நீங்களே ஃபுல்லா விசாரிச்சிட் டீங்க. உங்க சீஃப் எடிட்டர் வந்து உள்ளே இறங்கி எல்லாமே விசாரிச்சிட்டாருங்கங்கிற தகவல் நம்பகமான ஆள்கிட்ட இருந்து எனக்கு வந்திருச்சு. அதனால, என்னைய பத்தி நான் சொல்லுற தகவல், முழு நம்பிக்கையா இருக் கும்கிறது உங்களுக்கே தெரியும்.


என் வீட்டுக்காரர்.. என் குழந்தைங்களுக்கு எந்த அளவுக்கு மன அழுத்தம் இருந்திருக்கும். சொந்தக்காரங்க மத்தியில இருந்து எத்தனை அம்புகள் அவங்க நெஞ்சைக் குத்தியிருக் கும்? நான் வெளியே வந்து ரெண்டு மாசமா யாரும் ஒரு வார்த்தையுமே கேட்கல. ஆனா.. ஒவ்வொருத்தரும் என்னைப் பார்க்கிற பார்வை தாங்க முடியல. பப்ளிக்கையும் நான் இப்ப அவாய்ட் பண்ணிட்டுத்தான் இருக்கேன். கோயிலுக்கு மட்டும் ஒருநாள் பிரதோ ஷத்துக்குப் போனேன். டென் மினிட்ஸுக்குள்ளயே அந்தக் கூட்டத்தினுடைய பார்வை என்னால தாங்க முடியல. ஒரு மாதிரி பார்த்தாங்க. அப்போ, அந்த தகவல்களெல்லாம் வந்தப்ப, இவங்க மூணு பேரும் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பாங்க.. அவங் கள எப்படியெல்லாம் பேசிருப்பாங்க அண்ணா!’’ நான் என்னுடைய திங்கிங்கை சொல்லிட றேன். இப்ப ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையில, அதுவும் எங்க காஸ்ட்ல.. நான் பட்ட கஷ்டம், யாரும் கண்டிப்பா பட்டிருக்க மாட்டாங்க. ஆண்டவன் எனக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறான் அப்படிங்கிறதுக்காக நான் தனியா உட்கார்ந்து அழமாட்டேன். இவ்வளவு கஷ்டத்தைக் கொடுக் கிறான்னா... எனக்கு அனுபவத்தைக் கொடுக்கிறான். இதைவிட கண்டிப்பா, ஒரு மேல்நிலைமைக்குப் போறதுக்கு உண்டான வழியைக் காமிக்கிறான் அப்படிங்கிறதுதான் என் நம்பிக்கை…

நான் ஒரு கார் எடுத்துட்டு ஓட்டிட்டு போறப்ப.. ஒரு டிராஃபிக் ஆகுது. ரூட் டைவர்ட் பண்ணுறான் அப்படிங்கிற ஒரு அர்ஜென்ஸியோட நான் போறேன் ஒரு நாள். அன்னைக்கு வந்து ரூட்ட டைவர்ட் பண்ணி விட்டாங்க. இருந்தாலும் ப்ராப்பரா டயம்க்கு போயிட்டேன். அதுவேற விஷயம். ஆனா.. அந்த டென்ஷனோட முக்கிய மான பார்ட்.. டைம் ரொம்ப முக்கியம். பாஸ் போர்ட் ஆபீஸுக்கு போனேன். அய்யோ.. இவ்வளவு டென்ஷன் ஆகுதே? டிராஃபிக் ஆகுதே. நாம போயிருவோமா? இல்லைன்னா.. ரிஜெக்ட் ஆகி வந்திருவோமான்னு சொல்லிட்டு.. பயத்துல பயந்துக்கிட்டு போனேன். ஆனா.. போயாச்சு. பாஸ்போர்ட் ஆபீஸ் உள்ள போயி வேலை முடிச்சிட்டு வந்தாச்சு. ஆனா.. அந்த ரூட் வந்து அன்னைக்கு தெரிஞ்சுக்கிட்டேன். அன்னிக்கு கஷ்டமா இருந்துச்சு. ஆனா.. அதே மதுரைல இதைவிட பெரிய டிராஃபிக் ஒண்ணு.. அந்த வழில போக முடியாது. இந்த வழியாத்தான் வரணும். மொதல்ல கஷ்டப்பட்ட வழில வந்தா ஈஸியா வந்துடலாம் அப்படிங்கிற ரூட் தெரிஞ்சதுனால, வேகமா வந்துட்டேன். இன்னிக்கு கொடுக்கிற கஷ்டம், வரப்போற எதிர்காலத்துக்கு உண்டான சொல்யூசனா அது இருக்கும்.

இன்னிக்கு ஒரு எக்ஸாம்பிளுக்குச் சொல்லுறேன். எப்பவுமே ஒரு கஷ்டம் வருது அப்படின்னா... அதுல இருந்து அனுபவம் ப்ளஸ் அதற்கடுத்த நிலைமைக்குப் போறதுக்கு உண்டான ஒரு இதாத்தான் நான் எந்த ஒரு கஷ்டத்தை யும் எடுத்துக்குவேன். என் னைய பார்த்தா.. பாதிப் படைஞ்ச பொண்ணு மாதிரியா இருக்கு? நான் இப்ப பேசுறது எனக்காக கேட்கல. எங்க வீட்டுக்காரரும் குழந்தைகளும் எவ்வளவு ரணம் பட்டிருப்பாங்க? அந்த ரணத்துக்கு மருந்து போட ணும். எங்க சொந்தக்காரங்க மனசுக்கு மருந்து போடணும். அதுமட்டும்தான். ஏன்னா... எனக்கு ஒரு நம்பிக்கை.. இன்னொருத்தருக்கு ஒரு நம்பிக்கை இருக்கலாம். அவங்க நம்பிக்கைக்குள்ள நாம போக முடியாது. அப்ப மத்தவங்க நம்மளால கஷ்டப்பட்டிருப்பாங்க... அதுக்கு மருந்து போடணும். அது மீடியாவால மட்டும்தான் முடியும்.


நானே சமைச்சு நானே சாப்பிடறது கஷ்டமில்ல. ஆனா, குழந்தைங்களுக்கும் வீட்டுக்காரருக்கும் சமைச்சுக் கொடுத்து நான் சாப்பிடறப்ப, ஒரு பெண் அப்படிங்கிற ஒரு கடமை நிறைவேறுது. இங்கே அது தவறுது. வீட்டுக்காரரும் குழந்தை களும் உணவுக்கு, மற்ற அத்தியாவசிய தேவை களுக்கு கஷ்டப்படறாங்க. நான் இங்கே சமைச்சு சாப்பிட்டுக்கிட்டிருக்கேன் அப்படிங்கிற கவலை எனக்கு ரொம்ப. அவங்களுக்கு எவ்வளவு வேதனை இருக்கும்? அவங்க மனசுல என்ன இருக்குங்கிறது ஒரிஜினலா இன்னும் எனக்குத் தெரியல; பேசல. ஆனாலும், அவங்க எவ்வளவு வேதனைப்பட்டி ருப்பாங்க. அதுக்கு மருந்து? அவங்க நம்பிக்கை எதுன்னாலும் இருக்கட்டும். அதுக்கு மருந்து? என்னால ஏற்பட்ட ரணத்துக்கு மருந்து. அது மீடியாவினால மட்டும்தான் முடியும். மீடியாவால மட்டும்தான் முடியும். அப்ப அவங்களுக்கு மருந்து போடறப்ப.. ஆட்டோ மேடிக்கா என் பேர்ல இருக்கக்கூடிய கெட்ட பேரும் மாறும். ரெண்டா வதாதான் என்னைப் பத்தி யோசிக்கிறேன்''’’

இப்படி நிறைய பேசியிருக்கிறார் நிர்மலா தேவி. கல்லூரி பேராசிரிய ராக கம்பீரத்துடன் பய ணிக்க வேண்டிய நிர்மலா தேவியின் வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலையால், சக வாசத்தால், வி.வி.ஐ.பி.க் களின் சுயநலத்தால், உலகமே வேடிக்கை பார்க்கும் அள வுக்கு, தடம் மாறிப்போனது. வழக்குகளை எதிர்கொண்டு, நிபந்தனை ஜாமீன் பெற்று, வழக்கு விவரங்கள் தொடர்பாக எதுவும் பேசாமல் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடந்துவந்த நிலையில்தான், கடந்த திங்களன்று நீதிமன்ற வளாகத்திலும் வெளியிலும் சாமியாடியும், சம்பந்தமில்லாமல் பேசியும் தனக்குள் ஏற்பட்டிருக்கும் உளவியல் சிக்கலை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார் நிர்மலாதேவி.

மாணவிகளைத் தவறாகப் பயன்படுத்த முயன்ற குற்றச்சாட்டு அடிப்படையிலான வழக்கு, நிர்மலாதேவியுடன் முடிவதில்லை. அதன் நீட்சி, அதிகார மையங்களை நோக்கிச் செல்கிறது. இந் நிலையில், உளவியல் தாக்கத்தால் நிர்மலாதேவி யிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் செயல்பாடு களும், வழக்கின் தன்மையை நீர்த்துப் போகச் செய்து, பின்னணியில் உள்ள பெரிய ஆட்களைத் தப்பிக்க வைத்துவிடும் என்கிற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள் சட்டம் அறிந்தவர்கள்.
 

 

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்?; தொடரும் இந்திய மாணவர்களின் மர்ம மரணம்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Continued incident on Indian students in America

அமெரிக்க நாட்டில் படிக்கும் இந்தியர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் எம்.பி.ஏ படித்து வந்த இந்தியரான விவேக் சைனி (25) என்பவர் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, மர்ம நபர் ஒருவரால் கொடூரமான முறையில் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து, இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்தியரான அகுல் பி. தவான் (18) அதே மாதத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பர்டியூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்தியரான நீல் ஆச்சார்யா காணாமல் போனதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவரைப் போலீசார் தேடி வந்தனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் மஜாகீர் அலி என்ற ஐ.டி. மாணவர் ஒருவர் சிகாகோ நகரில் கடந்த 4 ஆம் தேதி மர்ம நபர்களால் துரத்தி துரத்தி தாக்கப்பட்டார். கொடூரமாகத் தாக்கப்பட்ட சையத் மஜாகீர் அலி, உதவிக்காக கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தாக்குதலுக்குள்ளான அலியின் குடும்பத்தினர், அவரை சந்திக்க அவசர விசா வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த நாளே இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்டியூ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியலுக்கான முனைவர் படிப்பு படித்து வந்த சமீர் காமத் (23) என்ற இந்திய மாணவர், வாரன் கவுண்டி பகுதியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கிளெவ்லேண்ட் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் உமா சத்யசாய் கத்தே திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தை நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் கூறுகையில், உமா சத்யசாய் கத்தேவின் இறப்புக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவருடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர அனைத்து உதவிகளை செய்து தர தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்திய மாணவர் அல்லது இந்தியர் ஒருவர் மரணம் அடைவது இவரோடு சேர்த்து இது 10ஆவது சம்பவம் ஆகும். இந்த தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.