சமூக வலைத்தளத்தில் மோடியின் பிரதமர் பதவியேற்பு விழா, ஆந்திராவில் ஜென்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழா என எல்லாவற்றையும் ஓரம் கட்டிவிட்டது "பிரே பார் நேசமணி".

Advertisment

hammer ... !!

நம்ம சுப்பிரமணிக்கு என்னாச்சு, ஆஸ்பத்திரிக்கு போனாரா? டாக்டர் என்ன சொன்னாராம் என கேட்பது மாதிரி ஆளாளுக்கு நேசமணிக்கு என்ன ஆச்சு? உயிருக்கு ஒன்னும் இல்லியே? நேசமணி உடல்நிலை காரணமாக பதவியேற்பு விழா தள்ளிபோகாதுல்ல என்பது மாதிரியான போஸ்ட்டுகள் சமூக வலைத் தளங்களில் பறக்கின்றன. உலகளவில் டிரெண்டு ஆன இந்த நேசமணி போஸ்டுக்கு மூலப் புள்ளி வைத்தவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் புதூரை சேர்ந்த விக்னேஷ் பிரபாகர்.

hammer ... !!

Advertisment

தற்போது துபாயில் பொறியாளராக வேலை பார்க்கும் இவர், "சிவில் என்ஜினியரிங் லேனர்ஸ்" என்ற பேஸ்புக் பக்கத்தில் சுத்தியல் படத்தை பதிவிட்டு, இதன் பெயர் 'சுத்தியல்' உங்க ஊரில் இதற்கு என்ன பெயர்? இதை வைத்து எதையாவது அடித்தால் டங் டங் என சத்தம் வரும், கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் பட்டு இது காயம் ஏற்படுத்தியது (பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் நேசமணி அவரது தலையில் சுத்தியல் விழுந்ததை) என குறிப்பிட்டிருந்தார்.

hammer ... !!

அதற்கு பின்னூட்டமாக அவரது நண்பர்கள், "இப்போது கான்ட்ராக்டர் நேசமணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு நலமாக இருக்கிறார். இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்'' என பதிவிட, இப்போது நேசமணி குணமடைய இந்தியா முழுவதும் கூட்டுப்பிரார்த்தனை நடத்துகிற அளவுக்கு ட்ரெண்ட் மாறி இருக்கிறது.

Advertisment

nesamani

இதுதொடர்பாக விக்னேஷ் பிரபாகரை தொடர்பு கொண்டு பேசினோம். "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சுத்தியலால் அடித்தால் டங்..டங்.. சத்தம் வரும்னு போட்டது பிரபலமாகும்னு எதிர்பார்த்தேன். ஆனால், நேசமணி கேரக்டர் அதை ஓவர்டேக் பண்ணியிருக்கிறது. நினைச்சுக்கூட பார்க்கலை, விளையாட்டுக்காக பதிவிட்ட கமெண்ட் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இதை வச்சு மீம் கிரியேட்டர்கள் செம்மையா கிரியேட்டிவ் பண்ணி பதிவுகளை வெளியிட்டிருக்காங்க. நான் போட்ட பதிவில நேசமணி பத்தி நலம் விசாரிப்பவரும் என் நண்பர்தான். அவருக்கு நக்கலுக்காக சீரியஸாக கேட்க, நானும் அதே டோன்ல ரிப்ளெ பண்ணினேன். இது இப்படி டிரென்ட் ஆகும்னு எதிர்பார்க்கல" என்றார்.

நாமும் பிரார்த்திப்போம் நேசமணி(?) குணமடைய.!