'நேர்கொண்ட பார்வை' படம் ஓடும் தியேட்டர்கள் லிஸ்ட் ரெடி!

தல அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நேர் கொண்ட பார்வை. இந்தியில் அமிதாப், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் பரபரப்பை கிளப்பிய படம் பிங்க் அந்தப்படத்தின் தமிழ் ரிமேக்காக உருவாகியுள்ள படம் தான் நேர் கொண்ட பார்வை. பெண்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும், இந்திய சமூகத்தில் பெண்கள் மீது நிலவும் பாலியல் பிரச்சனைகளையும் அழுத்தமாக பேசிய படம் தான் பிங்க். முழுக்க பெண்கள் மிக முக்கியப் பாத்திரத்தில் நடித்த இந்தப்படத்தில் அமிதாப் சிறிய நேரமே வரக்கூடிய முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் அமிதாப் கேரக்டரில் தல அஜித் நடிக்கிறார்.

ajith

அமிதாப் கேரக்டர் போல் இல்லாமல் தமிழ்ப் படத்தின் அஜித்தின் கேரக்டர் அதிக நேரம் வரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படம் ஆக்‌ஷன் கலந்ததாக உருவாக்கபப்ட்டுள்ளது. வித்தியாபாலன் அஜித் ஜோடியாக நடித்துள்ளார். கல்கி கொச்சிலின், ஸ்ரதா ஸ்ரீநாத், பிக்பாஸ் அபிராமி, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வியாபார சிக்கல்களில் இருந்ததாக வதந்தி பரவிய நிலையில் தற்போது ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் எந்தெந்த தியேட்டரில் வெளியிடப்படுகிறது எனும் விவரம் வெளியாகி உள்ளது.

ajith nerkonda parvai
இதையும் படியுங்கள்
Subscribe