Advertisment

அய்யோ..!! தப்புப் பண்ணிட்டேனே... அந்தம்மாவுக்கு மூனுமே பொண்ணுங்கனு இப்பத்தானே தெரியுது... அழுது அரற்றிய கார்த்திகேயன்!

அந்தம்மாவை நோக்கி கொலை செய்ய பாயும் போது ''எனக்கு மூனு புள்ளைக விட்டுடு''ன்னு கதறுனாங்க ஆனால், ஏதோ வேகத்துல அந்தம்மாவையும் கொன்னுட்டேன். கடைசியாத்தான் தெரியுது மாரியம்மாளுக்கு அத்தனையும் பெண்புள்ளைங்கன்னு.. அய்யோ தப்புப் பண்ணிட்டேனே என அழுது அரற்றி புலம்பி இருக்கின்றான் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலையின் சூத்ரதாரியான கார்த்திகேயன்.

Advertisment

KARTHIKEYAN

கடந்த 23ந் தேதி நண்பகலில் நெல்லை ரெட்டியாப்பட்டியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் உட்பட மூவரையும் கொலை செய்த கார்த்திகேயேனை கைது செய்துரிமாண்டிற்கு அனுப்பியது நெல்லைக் காவல்துறை. முன்னாள் மேயரும், அவரது கணவரும் கொல்லப்பட்டதற்கு கொடுக்கல் வாங்கல் மற்றும் முன்விரோதம்தான்என காரணம் கற்பிக்கப்பட்டாலும், எந்த விவகாரமும் அறியாத வேலைக்காரப்பெண் கொலை செய்யப்பட்டது பலத்த கோபத்தை உண்டாக்கியது பொதுமக்களிடமிருந்து. வழக்கின் வேகம் சூடுபிடித்து கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், " சார் எம் புள்ளையை அவன்ஏன் கொன்னான்னு நிக்க வைச்சு கேள்விக் கேட்கனும்அப்பத் தான் எங்க மனசு ஆறும். அதுக்கு ஏற்பாடு செய்யுங்களேன்" என கொலையுண்ட பணிப்பெண் மாரியம்மாள் தரப்பிலிருந்து நெல்லை காவல்துறைக்கு கோரிக்கைகள் வந்தது.

KARTHIKEYAN

Advertisment

செவ்வாய்க்கிழமையன்று கார்த்திகேயனிடமிருந்து வாக்குமூலம் பெற்ற காவல்துறை தனிப்படையினர், வாக்குமூலத்திற்கு பின்னர் கொலை நடந்த முன்னாள் மேயர் வீடு, கக்கன் நகர் பகுதி ஆகிய இடங்களுக்கு கார்த்திகேயனை அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதன் பின்னர் நீதிபதியிடம் ஆஜர்படுத்துமுன், மாரியம்மாள் உறவினர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க மேலப்பாளையம் காவல்நிலையத்திற்கு அவனை அழைத்து சென்ற காவல்துறை முன்னதாக கொலையுண்ட பணிப்பெண் மாரியம்மாளின் குழந்தைகள் வீரலெட்சுமி, ஜோதிலெட்சுமி, ராஜேஸ்வரி, அம்மா வசந்தா, அண்னன் குமார் மற்றும் உறவினர் கோலம்மாள் உட்பட அனைவரையும் வரவழைத்து அங்கேயே மறைவாய் காத்திருக்க வைத்திருந்தது.

KARTHIKEYAN

"உனக்கும் மேயருக்கும் தானே பிரச்சனை அப்புறம் ஏன் அந்த வேலைக்காரப் பெண்ணை கொன்றாய்?" எனக் கேட்டதற்கு, " சத்தியமாக அந்தம்மாவை கொலை செய்யுற எண்ணமே இல்லை. கதவை திறந்து வந்த அவளுக்கு ரெண்டு பேர் ரத்த வெள்ளத்தில் கிடப்பது தெரிந்ததைக் கண்டதும் அழுது கத்தத் தொடங்கினார். ஓடிப் போயிடு ஓடிப் போயிடுன்னு கோபமாய் கத்தியும் மாரியம்மாள் கிளம்பலை. வேற வழியில்லாமல், வெளியில் கத்திக் கூப்பாடுப் போட்டு நம்மளை மாட்டிவிட்டுடுவாளோ எனும் பயத்தில் அந்தம்மாவையும் இழுத்து தாக்கி குத்த வேண்டியாதாச்சு. அப்பக் கூட அந்தம்மா, " எனக்கு மூனு புள்ளைக இருக்கு விட்டுடுன்னுச்சு." புத்திக் கேட்கலை, அது ஆம்பளை புள்ளைகளாக இருக்கும் பிழைச்சுக்கும்னு குத்திக் கொன்னுட்டேன். பிறகுதான் தெரிஞ்சதுஅந்தம்மாவுக்கு அத்தனையும் பெண் புள்ளைகன்னு, அது தப்பு தாங்க" எனக் கூறியபடி முகத்தைப் பொத்தி அழுக ஆரம்பிச்சுட்டான்.

திரைமறைவில் இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மாரியம்மாள் குடும்பத்தினருக்கு நடந்தது என்னஎன்ற திருப்தி ஏற்பட்டாலும் அவர்களும் அழுததுதான் வேதனையே என்கிறார் தனிப்படை அதிகாரி ஒருவர்.

humanity gone. police murder mayor nellai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe