கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெண் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பூதாகரமாகி இருந்த நிலையில் இந்த சம்பவத்தின் ஒட்டுமொத்த பின்னணியும் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

ஓசூர் அருகே உள்ள லாலிக்கல் என்ற பகுதியில் மொத்தம் 11 பிளாக்குகளை கொண்டு 'விடியல் ரெசிடென்சி' என்ற பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதியானது உள்ளது. அந்தப் பகுதியில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள், வடமாநில பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் அந்த விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த தங்கும் விடுதியில் நான்காவது பிளாக்கில் உள்ள 808 என்ற எண் கொண்ட அறையில் கடந்த இரண்டாம் தேதி ஞாயிறு அன்று குளியலறையில் ரகசிய கேமரா இருப்பதை பெண்கள் கண்டுபிடித்தனர். அனாமிகா என்ற வடமாநில பெண் குளியலறையில் எதோ ஒரு பொருள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் மின்னுவதைக் கண்டு சோதனை செய்ததில் அது ரகசிய கேமரா என தெரிந்தது.

Advertisment

046
'Neelu Kumari wanted to tie a flower in the ear of the police' - A twist in the secret camera issue Photograph: (police)

அந்த அறையில் தங்கியிருந்த நான்கு பெண்களில் ஒருவரான நீலு குப்தா என்ற 23 வயது பெண் சற்று பற்றமடைந்து அந்த கேமராவை வாங்கி ஜன்னல் வழியாக மேலே இருந்து கீழே வீசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த மற்ற மூன்று பெண்கள் ரூமில் பல இடங்களில் தேடிய போது வீடியோக்களை ரிஸீவ் செய்யும் கருவி ஒன்று இருந்தது. இதனால் அச்சமடைந்த நான்கு பேரும் விடுதியின் கண்காணிப்பாளர் சரிதாவிடம் நடந்ததை கூறியுள்ளனர். அப்போது தனியாக வெளியே சென்ற நீலு குப்தா தரையில் வெளியே வீசப்பட்டு கீழே கிடந்த அந்த ரகசிய கேமராவை கையில் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார்.

Advertisment

அறையில் இருந்த நான்கு பெண்களிடமும் விடுதியின் கண்காணிப்பாளர் சரிதா நடத்திய விசாரணையில் நீலு குப்தா, தன் காதலனின் தூண்டுதலில் இதனை செய்ததாக ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து 'இனி ஒழுங்காக இருக்க வேண்டும். இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது' என எச்சரித்து அனுப்பியுள்ளார். ஆனால் இந்த தகவல் வாட்ஸாப் மூலம் விடுதியில் உள்ள மற்ற பெண்களுக்கும் தெரியவர அந்த ரெசிடன்சியே அச்சத்தில் உறைந்தது. தங்களது குளியலறைகளிலும் இதுபோல் கேமரா வைக்கப்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து சோதனை செய்யக்கோரியும் பெண்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

048
'Neelu Kumari wanted to tie a flower in the ear of the police' - A twist in the secret camera issue Photograph: (women struggle)

தொடர்ந்து இந்த ரகசிய கேமரா விவகாரம் போலீசாருக்கு சென்றது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும், நீலு குப்தாவை கைது செய்து விசாரிப்போம் என காவல்துறை எஸ்பி தங்கதுரை கொடுத்த நம்பிக்கையின் பேரில் பெண்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தொடர்ந்து ஒடிஷாவை சேர்ந்த நீலு குப்தாவை உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்து தங்கள் விசாரணையை தொடங்கினர். மறுபுறம் தொழில்நுட்ப வல்லுநர்கள் பெண் பணியாளர்கள் தங்கியுள்ள அனைத்து அறைகளிலும் சோதனை செய்தனர்.

முதலில் பெங்களூருவை சேர்ந்த தன்னுடைய காதலனான சந்தோஷ் தான் வைக்க சொன்னான் என நீலு குப்தா தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 19 ஆம் தேதி இருவரும் பெங்களூருவில் வைத்து சந்தித்துக் கொண்டோம். அப்போது இந்த கேமராவை கொடுத்து குளியல் அறையில் வைக்க சொன்னான் என நீலு குப்தா தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சந்தோஷை பிடிக்க அவரது மொபைல் எண்ணை போலீசார் கைப்பற்றினர். அந்த எண்ணை சோதனை செய்ததில் நீலு குப்தா சொன்னதைப்போல கடந்த 19 ஆம் தேதி சந்தோஷின் எண் பெங்களூருவில் காட்டவில்லை ஒடிசாவில் இருந்தது என்பது தெரிந்து. போலீசாரின் காதிலேயே நீலு குப்தா பூசுற்ற நினைத்தது தெரிந்தது.

044
'Neelu Kumari wanted to tie a flower in the ear of the police' - A twist in the secret camera issue Photograph: (krishnagiri)

நீலுக்குமாரியின் செல்போனை ஆய்வு செய்தபோது வேறொரு எண்ணில் அவர் அதிக நேரம் உரையாடி இருந்ததும் அந்த எண் தற்போது செயலில் இல்லாததும் தெரிந்தது. அந்த எண்ணை வைத்து யார் அந்த நபர் விசாரித்த போது நடந்த அனைத்தையும் நீலுக்குமாரி போலீசாரிடம் கக்க ஆரம்பித்துள்ளார். ஒடிஷாவை சேர்ந்த நீலுக்குமாரியும், பஞ்சாபை சேர்ந்த ரவி பிரதாப் சிங்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் நீலுக்குமாரியிடம் ஒடிஷாவை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரும் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இருவரிடமும் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசி வந்துள்ளார் நீலுக்குமாரி.

இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் உள்ள ஐபோன் உதிரி பாகம் தயாரிக்கும் கம்பெனியில் பணிக்கு சேர்ந்த நீலுகுப்தா லாலிக்கல் பகுதியில் உள்ள பெண்கள் ரெசிடென்சியில் நான்காவது பிளாக்கில் உள்ள 808 என்ற எண் கொண்ட அறையில் மூன்று பெண்களுடன் தங்கியுள்ளார். பணி முடிந்த பின் காதலன் ரவி பிரதாப் உடன் செல்போனில் பேசிவந்த போது விரைவில் பணக்காரனாக ஆக வேண்டும்; ஒரு கார் வாங்கி அதில் உன்னை அழைத்து செல்ல வேண்டும் என ரவி பிரதாப் குப்தா தெரிவித்துள்ளார். அதற்கு ஒரு வழி இருக்கிறது என நீலி குப்தா அவரை பெங்களூருக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த ரவி பிரதாப் குப்தாவிடம் அந்த கொடூர திட்டத்தை விவரித்திருக்கிறார்.

ஒரு ரகசிய கேமராவை எங்கள் அறையில் உள்ள குளியல் அறையில் வைப்போம். நான் அறைக்குள்ளேயே இருப்பதால் அவ்வப்போது சோதித்து யார் யாருடைய வீடியோக்கள் பதிவாகிறதோ அதை உனக்கு அனுப்பி வைக்கிறேன். ரசிய கேமராவில் சிக்கும் பெண்களின் எண்ணையும் உனக்கு அனுப்பி வைக்கிறேன். நீ அவர்களுக்கு அந்த வீடீயோவை அனுப்பி மிரட்டி பணம் உள்ளிட்ட டிமாண்ட்களை வை. இப்படி செய்தால்தான் நினைத்தபடி பணக்காரன் ஆக முடியும் என தனது திட்டத்தை கூறியிருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்ட ரவி பிரதாப் குப்தா பெங்களூருவில் வைத்தே கையோடு ரகசிய கேமராவை சொந்த செலவில் வாங்கி கொடுத்து நீலுவை அனுப்பியுள்ளார். திட்டமிட்டபடி நீலு குமாரி அந்த கேமராவை குளியலறையில் பொருத்தி உள்ளார்.

049
'Neelu Kumari wanted to tie a flower in the ear of the police' - A twist in the secret camera issue Photograph: (police)

ஆனால் இரண்டாம் தேதி இந்த சம்பவத்தில் தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்த நீலு குப்தா, ரவி பிரதாப் குப்தாவை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். நாம் தப்பிக்க வேண்டும் என்றால் சந்தோஷ் மீது இந்த பழியை போடலாம் என திட்டமிட்டு சந்தோஷ் பெயரை நீலு குமாரி பயன்படுத்தியது தெரிந்தது. தொடர்ந்து டெல்லி சென்ற கிருஷ்ணகிரி தனிப்படை போலீசார் நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகில் வைத்து ரவி பிரதாப் சிங்கை கைது செய்துள்ளனர். உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட நரவி பிரதாப் சிங்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பெண்ணின் கீழ்த்தரமான எண்ணத்தால் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு பல பெண்கள் அச்சத்தில் அந்த விடுதியை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.