'Nearly one crore votes were removed' - SIR that shocked Tamil Nadu Photograph: (tamilnadu)
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் தொடங்கின. டிசம்பர் 14 ஆம் தேதி எஸ்ஐஆர் பணிக்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில் இன்று தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது
தமிழகத்தில் மாவட்ட வாரியாக வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்குகள் மற்றும் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த நிலவரங்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 26,94,672 பேர் இறந்தவர்கள் என நீக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் என 66,44,881 நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரட்டை வாக்குப்பதிவு 3,39,278 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 5.43 கோடியாக உள்ளது.
சென்னை மற்றும் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அதிக அளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னையில் இடம்பெயர்ந்தோர் என 12.2 லட்சம் பேரை நீக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 35.58% வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் 32,501 பேர் நீக்கப்பட்டிருப்பதாகவும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 97,405 பேர் நீக்கப்பட்டிருப்பதாகவும், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,03,812 பேர் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் 97,960 வாக்காளர்களும், திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் 59,043 வாக்காளர்களும், எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 74,858 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 51,211 வாக்காளர்களும், துறைமுகம் தொகுதியில் 69,892 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது சென்னை நிலவரம்.
கரூர் மாவட்டத்தில் எஸ்ஐஆருக்கு முன்பாக 8,98,362 வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்ஐஆருக்கு பிறகு 8,18,672 வாக்காளர்கள் இருக்கிறார்கள். நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 79,690.
தஞ்சாவூரை பொறுத்தவரை எஸ்ஐஆருக்கு முன்பாக 20,98,561 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்ஐஆருக்கு பிறகு 18,92,58 வாக்காளர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக 2,06,503 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்ஐஆருக்கு முன்பாக 17,27,490 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆக்கு பிறகு 15,44,625 வாக்காளர்கள் இருக்கிறார்கள். 1,82,865 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்ஐஆருக்கு முன்பாக 11,60,607 வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்ஐஆருக்கு பிறகு தற்போது 10,76,278 வாக்காளர்கள் இருக்கிறார்கள். 84,329 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் எஸ்ஐஆருக்கு முன்பாக 5,30,890 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆருக்கு பின் 5,06,522 வாக்காளர்கள் இருக்கிறார்கள். 24,368 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன்பு 14, 66,660 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆருக்கு பிறகு 12, 72,954 வாக்காளர்கள் இருக்கிறார்கள். நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,93,706.
கோவை மாவட்டத்தில் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,19,489. முகவரியில் இல்லாதவர்கள் 1,08,360. குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை 3,99,159. இரட்டை பதிவுகள் 23,202 மொத்தமாக 6,50,590 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் எஸ்ஐஆருக்கு முன் 7,83,500 வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்ஐஆருக்கு பிறகு 7,08,122 வாக்காளர்கள் இருக்கின்றனர். 75,378 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்ஐஆருக்கு முன்பாக 14,01,198 வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்ஐஆருக்கு பிறகு 11, 26,924 வாக்காளர்கள் இருக்கிறார்கள். நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,74,274.
நெல்லையில் எஸ்ஐஆருக்கு முன்பாக 1420, ,334 பேர் இருந்த நிலையில் எஸ்ஐஆருக்கு பிறகு 12,03,338 பேர் இருக்கிறார்கள்.
கன்னியாகுமரியில் எஸ்ஐஆருக்கு முன்பாக 15,92,872 வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்ஐஆக்கு பின் 14,39,4 499 வாக்காளர்கள் இருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 1,53,373.
சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டிருக்கும் விவரத்தின்படி, எஸ்ஐஆருக்கு முன்பாக 30,30,537 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்ஐஆக்கு பின்பு 26,68,108 வாக்காளர்கள் இருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 3,62,429 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
அண்மையில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இதேபோன்ற எஸ்.ஐ.ஆர் திருத்தப்பணியில் 60 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் அதிர்ச்சி தரும் விதமாக 97,37,832 வாக்காளர்கள் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் நீக்கப்பட்டுள்ளது பேசு பொருளாகி வருகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டிருந்தால் பெயர்களை சேர்ப்பதற்கும் திருத்தம் செய்வதற்கும் மீண்டும் ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
Follow Us