தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில் திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மை செயலாளர் வல்லம் பசீர் தன்னுடைய அரசியல் பார்வைகளை நக்கீரனின் அரசியல் சடுகுடு நிகழ்ச்சில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
அதிமுக பாஜக கூட்டணி ஏற்கனவே உறுதியாகிவிட்டது. ஆனாலும் விஜய் வந்தால் பாஜகவை எடப்பாடி கழட்டி விட்டு விடுவார் என்றெல்லாம் பேசப்பட்டது. பியூஸ் கோயல் வந்த பிறகு அதிமுக தொகுதிப் பங்கீடு குறித்த லிஸ்ட் வெளியானது. என்னதான் நடக்கிறது அதிமுக கூட்டணியில்? தொகுதிப் பங்கீடு பற்றி பேசினார்களா இல்லையா?

 

181
dvk Photograph: (politics)

தேசிய ஜனநாயகக் கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. 70 இடங்களை பாஜக அதிமுகவிடம் கேட்டு பெற்றிருக்கிறது என்பதுதான் பிரதான செய்தி. அதற்கான உறுதிமொழியை பெற்றிருக்கிறார்கள். 70 இடங்கள் எங்களுக்கு தந்துவிட வேண்டும். நாங்கள் கூட்டணி கட்சிகளை அக்காமடேட் பண்ணிக்கிறோம் என பாஜக தெரிவித்துள்ளது. இப்போதுள்ள சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த கட்சி இருக்கிறது. பாஜக, அதிமுகவை ஏமாற்றுகிறது. பியூஷ் கோயல் கொஞ்சம் பழக்கமான ஆளு என அதிமுக நம்புகிறது. ஆனால் எதார்த்தமான உண்மை என்னெவென்றால் பாண்டாவை ஏன் எடுத்துவிட்டு பியூஷ் கோயலை போட்டார்கள். காரணம் கூட்டணியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏதாவது ஒரு புதிய முன்னேற்றம் கிடைக்க வேண்டும் எனச்சொன்னால் அதற்கு பியூஷ் கோயல் மாதிரி யாராவது ஒரு அமைச்சரை போட்டால் அதன் மூலமாக ஒரு முன்னேற்றம் இருக்கும் என நினைத்தார்கள். ஏதாவது ஒரு முன்னேற்றம் கண்ணுக்கு தெரிகிறதா?

Advertisment
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்று என்ன நிலைமை இருந்ததோ அதே நிலைமைதான் நேற்றைக்கும் இருந்தது. நேற்றைக்கு இருந்ததை விட மோசமான நிலைமை இன்று இருக்கிறது. காரணம் கோயலை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததற்கு பிறகு டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரு ஸ்டாண்ட் எடுத்து அறிவித்துள்ளார்கள். நாங்கள் போட்டியிட போகிறோம் எனச் சொன்னோமா? எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டோம் எனச் எப்போது சொன்னோம் என டி.டி.வி.தினகரன் கேட்கிறார். ஓபிஎஸ் தரப்பில் ஒரு நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ராமச்சந்திரனில் இருந்து வைத்திலிங்கம் வரைக்கும் 'எடப்பாடி இல்லாத அதிமுக இருந்தால் மட்டும் தான் நாங்க ஒன்றுபட்ட அதிமுக' எனப் பேசுகிறார்கள்.
இதில் இருந்து என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஓபிஎஸ் அதிமுகவில் இணைவதற்கும் தயாராக இல்லை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவதற்கும் தயாராக இல்லை. ஓபிஎஸ்-இன் இந்த நிலைப்பாடு இப்போதைய ஸ்டாண்ட் தான் நாளைக்கு அமித்ஷா பேசியதற்கு பிறகு ஸ்டாண்ட் மாறலாம் அது வேறு. அவருடைய நிலைப்பாடு என்பது உறுதியானது இல்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
இப்போது இருக்கும் நிலைமைக்கு பாஜகவுக்கு 70 சீட்டு கொடுத்துவிட்டால் அந்த 70 சீட்டை பாஜக பிரிச்சு கொடுத்துக்கும். இது ஏற்கனவே மக்கள் நலக் கூட்டணி செய்த வேலை. தேமுதிகவுக்கு இடத்தை கொடுத்துவிட்டு பாக்கியை தேமுதிக வெர்சஸ் மக்கள் நலக் கூட்டணி என ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். மக்கள் நலக் கூட்டணியில்  திருமா, கம்யூனிஸ்ட் எல்லாம் அந்த சீட்டுகளை பிரிச்சுக்கிட்டாங்க. அந்த மாதிரி இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக வெர்சஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று ஒப்பந்தத்தை போட்டுக்கொள்வார்கள். அந்த 70 சீட்டில் யார் யாருக்கு கொடுக்க போகிறார்கள் என்பதுதான் விஷயம். ஒன்றுபட்ட பாமகவுக்கு 23 சீட்டு என செய்தி வந்தது. ஒன்றுபட்ட பாமக முதலில் சாத்தியமா? ஒன்றுபட்ட பாமக தேர்தலை சந்திக்குமா? முதலில் அதற்கான வாய்ப்புகள் ஏதாவது இருக்கா? கிஞ்சித்தும் அதற்கான வாய்ப்பு இல்லை. இந்த ஆண்டுக்கு விடை கொடுப்போம் புதிய ஆண்டை வரவேற்போம் என பொதுக்குழு, செயற்குழுவுக்கு ராமதாஸ் தயாராகிவிட்டார்.
கடந்த முறை போட்டியிட்ட இடங்களை விட கூடுதலான இடங்கள் தான் பாஜக இந்த முறை போட்டியிடும். அதுதான் பாஜகவினுடைய கணக்கும் கூட. அந்த கணக்கை நேரடியாக கேட்டால் உங்களுக்கு என்ன வாக்கு சதவீதம் என கேட்டுருவாங்க. அதனால்தான் நாங்கள் எல்லோரையும் பார்த்துக்கிறோம் எனச் சொல்வதால் 70 சீட்டை ஈஸியா வாங்கிட்டு போயிடலாம் என பாஜக பார்க்கிறது.