admk Photograph: (politics)
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மை செயலாளர் வல்லம் பசீர் தன்னுடைய அரசியல் பார்வைகளை நக்கீரனின் அரசியல் சடுகுடு நிகழ்ச்சில் பகிர்ந்துகொண்டார்.
'திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் பாஜக கூட இணைந்து போட்டிட வேண்டும். விஜய் தனியாக போட்யிடிட்டால் வீழ்த்த முடியாது என்று பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்து வருகிறார்களே?
திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்த பாஜக நினைக்கிறது. அதற்கான சூழல் தமிழ்நாடு அரசியல் களத்தில் உருவாகி இருக்கிறதா என்று பார்த்தால் திமுக எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் மூன்று முனையாக போய் நிற்கிறது. ஒரு பக்கம் சீமான் செய்வதும் திமுக எதிர்ப்பு அரசியல் தான். இன்னொரு பக்கம் விஜய் அதுவும் திமுக எதிர்ப்பு அரசியல் தான். அதிமுக-பாஜக இரண்டும் சேர்ந்து நிற்கும் ஒரு களமும் திமுக எதிர்ப்பு அரசியல் தான். இது மூன்றுமே திமுக எதிர்ப்பு அரசியல் தான். இதை ஒருமுகப்படுத்துவதற்கான வேலை ஏதாவது பாஜக தரப்பிலோ அல்ல அதிமுக தரப்பிலோ இருக்கிறதா என்றால் எந்த வேலையும் இல்லை. ஒரு விஷயத்தை மறந்து விடக்கூடாது. எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் போகும்போது தமிழக வெற்றிக் கழகத்தினுடைய கொடியை பார்த்தார். அது செட்டப் செய்த கொடி என்று தவெக தரப்பிலேயே சொன்னார்கள். அந்த கொடியை பார்த்த உடனே 'பார்த்தீங்களா கூட்டணி முடிவாயிடுச்சு' என எடப்பாடி பழனிசாமி சொன்னார்.
இப்படி ஒரு தலைவர் வழியவே சென்று கூட்டணிக்கு வேண்டுகோள் வைத்ததை இதுவரைக்கும் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் யாரும் பார்க்கவில்லை. குறிப்பாக அதிமுக இந்த மாதிரி வைத்தது கிடையாது. ஆனால் தன்னிலை மறந்து, தன் கட்சியினுடைய சுயத்தை இழந்து எடப்பாடி பழனிசாமி புதிதாக வந்த விஜய்க்கு அப்படி ஒரு வரவேற்பை கொடுத்தார். ஆனால் விஜய் லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணி விட்டு போய்விட்டார். பத்திரிகையாளர் சந்திப்பில் இரண்டே இரண்டு வார்த்தை தான் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் 'மக்கள் ஒரு கொந்தளிப்பான மனநிலையில் இருக்காங்க. திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாங்க வியூகம் வகுத்தோம்' என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். முதலில் களத்தை தயார் பண்ணாதான் சண்டை செய்ய முடியும். நீங்க களத்தையே தயார் பண்ணாமல் ரொம்ப வீக்கான ஸ்ட்ரக்சர் உள்ள பாஜகவையும் ஏற்கனவே பல துண்டுகளாக பிளவுண்டு போயிருக்கிற அதிமுகவையும் வைத்துக்கொண்டு களத்தில் இருக்கிறோம் என்று சொல்வது வானத்தை பார்த்து வாள் சுழற்றும் வேலை இல்லையா? அந்த வேலையை தான் எடப்பாடி பழனிசாமியும் பாஜகவும் செய்து கொண்டு இருக்கிறது.
மகாத்மா காந்தியின் பெயரால் இயங்குகிற 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு கபளீகரம் செய்கிறது எனச் சொல்லி தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை ஒன்றியங்களில் திமுக தலைமையில் அனைத்து கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. திமுக கூட்டணியில் எந்தவிதமான பிளவும் இல்லையே; எந்தவிதமான சலசலப்பும் இல்லையே. இன்னும் சொல்லப் போனால் எங்களை போன்ற புதியக் கட்சிகள் கூட திமுக கூட்டணியை தான் விரும்புதே தவிர அதிமுக பாஜக கூட்டணிக்கு செல்ல எந்த ஒரு கட்சியாவது தயாராக இருக்கிறதா? தமிழ்நாட்டில் என்ன கட்சிகளுக்கா பஞ்சம்? ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த கட்சிகள் கூட அதிமுக பாஜக கூட்டணிக்கு இன்னும் உறுதிப்பாட்டை தெரிவிக்கவில்லையே. ஜான் பாண்டியன் சொல்லிவிட்டாரா? கிருஷ்ணசாமி சொல்லிவிட்டாரா? பாரிவேந்தர் சொல்லிவிட்டாரா? இவர்கள் எல்லாம் கூட ஒரு கனத்த அமைதியோடு இருக்கிறார்கள் என்றால் ஒரு அப்சர்வேஷன் மோடில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கிறது.
Follow Us